Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 #
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt

RailCal app

site support

patri ke is taraf ya us taraf, zindagi mein hum sab RailFan ek taraf - Ananya D'Souza

Search Forum
<<prev entry    next entry>>
Blog Entry# 1365952
Posted: Feb 10 2015 (20:54)

No Responses Yet
General Travel
737 views
0

Feb 10 2015 (20:54)  
 
MSRINIVASANME~
MSRINIVASANME~   4761 blog posts
Entry# 1365952              
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் மறியல் செய்வதற்காக கடம்பூர் ரயில் நிலையத்துக்கு திரண்டு வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லக்கோரி
கடையடைப்பு, ரயில் மறியல் போராட்டம்
கயத்தார், பிப். 10:
கடம்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி கேட்டும்,
...
more...
எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லக்கோரியும் வியாபாரிகள், பொதுமக்கள் சார்பில் கடையடைப்பு மற்றும் ரயில் மறியல் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடம்பூர் ரயில்நிலையத்தில் குடிநீர், கழிப்பிடம், நிழற்குடை வசதி செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சார்பில் ரயில் மறியல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னரும் ரயில் நிலையத்தில் பணிகள் நடைபெறாததால் நேற்று ரயில் மறியல் நடைபெறும் என்று காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் வக்கீல் அய்யலுசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று அவரது தலைமையில் பொதுமக்கள், வியாபாரிகள் மறியலுக்காக திரண்டனர். இதையொட்டி கடம்பூரில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
தூத்துக்குடி ஏஎஸ்பி கந்தசாமி தலைமையில் ரயில் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். ரயில் மறியலில் ஈடுபடுவதற்காக வியாபாரிகள், பொதுமக்கள் ஊர்வலமாக வந்தனர். மணியாச்சி டிஎஸ்பி வரதராஜன், கடம்பூர் இன்ஸ்பெக்டர் மாரிச்சாமி மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து ரயில்வே நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடம்பூரில் நின்று செல்ல வேண்டும். மேடை நடைபாதை அமைக்க வேண்டும். அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் நகர காங்கிரஸ் தலைவர் ஜெகதீசன், செயலாளர் செல்லத்துரை, வியாபாரி கள் சங்கத்தலைவர் ஜெயராஜ், செயலாளர் தனசேகரன், பொருளாளர் கனகராஜ், காங்கிரஸ் இணைத்தலைவர் பிரகாஷ், இந்துநாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் தங்கப்பநாடார், துணைத்தலைவர் மகராஜன், ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அதிகாரி சண்முகையா, தொழிலதிபர் சண்முகையா, ராஜன், உடையார்பாண்டி, குப்பனாபுரம் மாடசாமி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கோவில்பட்டி தாசில் தார் முத்துராமலிங்கம் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, 50 பேர் திடீரென கடம்பூர் ரயில் நிலையம் வந்த குருவாயூர் எக்ஸ்பிரசை மறித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கடம்பூரில் 50 பேர் கைது
kADAMBUR STATION IS SITUATED IN THE THOOTHUKKUDI DISTRICT IN THE TIRUNELVELI -VANCHI MANIYACHI-KADAMBUR-KOILPATTI-SATUR-VIRUDHUNAGAR-MADURAI SECTION .
All the Kadambur people demands some more expresses have to be stopped for 1 minute.Due to the agitation 50 people are arrested .

Translate to English
Translate to Hindi
Scroll to Top
Scroll to Bottom
Go to Desktop site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy