Full Site Search  
Thu Jun 29, 2017 18:06:48 IST
PostPostPost Stn TipPost Stn TipUpload Stn PicUpload Stn PicAdvanced Search
Large Station Board;
Large Station Board;
Large Station Board;

ONR/Coonoor (2 PFs)
குன்னூர்     कुन्नूर

Track: Metre Gauge

Type of Station: Regular
Number of Platforms: 2
Number of Halting Trains: 2
Number of Originating Trains: 3
Number of Terminating Trains: 3
NH 67, Coonoor ph.no.0423-2206110
State: Tamil Nadu
Elevation: 1720 m above sea level
Zone: SR/Southern
Division: Salem
3 Travel Tips
No Recent News for ONR/Coonoor
Nearby Stations in the News

Rating: 4.2/5 (17 votes)
cleanliness - excellent (3)
porters/escalators - poor (1)
food - good (3)
transportation - good (2)
lodging - good (1)
railfanning - excellent (3)
sightseeing - excellent (2)
safety - good (2)

Nearby Stations

WEL/Wellington 2 km     RNMD/Runnymede 5 km     AVK/Aravankadu 5 km     HLG/Hillgrove 9 km     KXT/Ketti 11 km     ADRL/Adderley 15 km     LOV/Lovedale 15 km     FNHL/Fernhill 18 km     QLR/Kallar 19 km     UAM/Udagamandalam 19 km    

Station News

Page#    Showing 1 to 20 of 23 News Items  next>>
Jun 15 2017 (11:51)  ஐசிஎப் தொழிற்சாலையில் நீலகிரி மலை ரயிலுக்கு விரைவில் பிரத்யேக பெட்டி (tnrailfans.blogspot.in)
back to top
New Facilities/TechnologySR/Southern  -  

News Entry# 305431     
   Tags   Past Edits
Jun 15 2017 (11:51)
Station Tag: Udagamandalam/UAM added by sGs*^~/41440

Jun 15 2017 (11:51)
Station Tag: Coonoor/ONR added by sGs*^~/41440

Jun 15 2017 (11:51)
Station Tag: Mettupalayam/MTP added by sGs*^~/41440

Posted by: sGs*^~  248 news posts
சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் இணைப்புப் பெட்டி தொழிற் சாலையில் (ஐசிஎப்) முதல் முறையாக நீலகிரி மலை சுற்றுலா ரயிலுக்கு பல்வேறு சிறப்பு வசதியுடன் பிரத்யேகப் பெட்டி விரைவில் தயாரிக்கப்படவுள்ளது.
மலைப்பிரதேச சுற்றுலாவுக்கு ஐஆர்சிடிசி சார்பில் இயக்கப்படும் ரயில்களுக்கு கண்ணாடி ரயில் பெட்டிகளை தயாரிக்க பெரம்பூர் ஐசிஎப்-க்கு ஏற்கெனவே, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ரயில் பெட்டியின் மேற்கூரையில் கண்ணாடி, நவீன பொழுதுபோக்கு அம்சங்கள், வை-ஃபை வசதி உள்ளிட்டவை இருக்கும்.
இந்நிலையில், நீலகிரி மலை சுற்றுலா ரயிலுக்கு பல்வேறு சிறப்பு வசதிகளுடன் பிரத்யேகப் பெட்டியை சுமார் ரூ.3 கோடி செலவில் தயாரிக்க ஐசிஎப்-க்கு ரயில்வே வாரியம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
இது
...
more...
தொடர்பாக ஐசிஎப் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது: ஊட்டி மலை ரயில் இந்தியாவில் இருக்கும் மிகச் சிறப் பான 4 மலை ரயில்களில் ஒன்றாகும். 109 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட நீலகிரி மலை ரயில், இன்றும் தொடர்ந்து சிறப்பானப் பயணத்தைத் தந்து கொண்டிருக்கிறது. இந்த ரயில் பயணிக்கும் 45.8 கிலோ மீட்டர் தூரத்துக்குள் 16 சுரங்கங்களையும், 250 பாலங்களையும் கடக்கிறது. இந்தியாவிலேயே பல் சக்கரம் கொண்ட ஒரே ரயில் பாதை இங்கு மட்டும்தான் இருக்கிறது.
இந்நிலையில், நீலகிரி மலை சுற்றுலா ரயிலில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான புதிய ரயில் பெட்டியை ஐசிஎப்-ல் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பெட்டி உள்பகுதி மரத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.
சுழலும் சொகுசு இருக்கைகள், பாதுகாப்பு குறிப்புகளை தெரிவிப் பதற்காக எல்இடி திரைகள், வை-ஃபை வசதி, தேனீர், காபி வழங்கும் தானியங்கி இயந்திரங் கள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் இதில் இடம் பெறும். ஒரு பெட்டியை தயாரிக்க சுமார் ரூ.3 கோடி வரை செலவாகும். இயற்கை அழகை ரசிக்கும் வகையில் இந்த ரயில் பெட்டி அமையும். இந்தப் புதிய ரயில் பெட்டியின் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப் பட்டுள்ளது. எனவே, நடப்பு நிதியாண்டுக்குள் இந்த சுற்றுலா ரயில் பெட்டி தயாரிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
News courtesy - Tamil The Hindu
May 15 2017 (15:07)  மீண்டும் மலை ரயில் சேவை: பயணிகள் மகிழ்ச்சி (tnrailfans.blogspot.in)
back to top
Other NewsSR/Southern  -  

News Entry# 302499     
   Tags   Past Edits
May 15 2017 (15:07)
Station Tag: Coonoor/ONR added by sGs*^~/41440

May 15 2017 (15:07)
Station Tag: Mettupalayam/MTP added by sGs*^~/41440

Posted by: sGs*^~  248 news posts
கடந்த வாரம் குன்னூரில் பெய்த மழையால் தண்டவாளத்தில் மரங்கள் விழுந்ததில் கடந்த 7ம் தேதி முதல் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து சேவை ரத்தானது.
இந்நிலையில் இன்று மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது, 8 நாட்களுக்கு பின்னர் மலைரயில் சேவை தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Mar 29 2017 (12:25)  குன்னூர் மலை ரயிலில் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை (www.dinakaran.com)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 297981   Blog Entry# 2214894     
   Tags   Past Edits
Mar 29 2017 (12:26)
Station Tag: Mettupalayam/MTP added by emailconnect2hari/1069947

Mar 29 2017 (12:26)
Station Tag: Udagamandalam/UAM added by emailconnect2hari/1069947

Mar 29 2017 (12:26)
Station Tag: Coonoor/ONR added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  302 news posts
இந்தியாகல்விதமிழகம்அரசியல்குற்றம்உலகம்அறிவியல்சென்னைவர்த்தகம்விளையாட்டுதொழில்நுட்பம்தமிழகம் முகப்பு > செய்திகள் > தமிழகம் குன்னூர் மலை ரயிலில் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை
2017-03-29@ 10:52:52
குன்னூர்: குன்னூர் மலை ரயிலில் பயணிக்க, சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஆர்வம் காட்டுவதால் கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என்ற கோரி்ககை எழுந்துள்ளது. சீசன் தொடங்கியுள்ள நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக உதகமண்டலம் செல்லும் மலை ரயிலுக்கு, ஜூன் 15 வரை முன் பதிவும் முடிந்து விட்டது.
இதனால் நாள்தோறும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்க
...
more...
சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. ரயிலில் இடம் கிடைக்காமல் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் பேருந்து நிலையங்களுக்கு திரும்புகின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகமண்டலத்திற்கு ஒரு முறையும், குன்னூர்-உதகமண்டலம் இடையே 3 முறையும் மலை ரயில் இயக்கப்படுகிறது. சீசன் தொடங்கியுள்ளதால் மேட்டுப்பாளையத்தில் இருந்து கூடுதலாக ஒரு ரயில் இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2114 views
Mar 29 2017 (13:11)
Mumbai Rajdhani best train in world^~   82836 blog posts   5299 correct pred (78% accurate)
Re# 2214894-1            Tags   Past Edits
This news is affecting site format I think.
Feb 13 2017 (15:58)  Free wi-fi at Udhagamandalam, Coonoor railway stations (www.thehindu.com)
back to top
New Facilities/TechnologySR/Southern  -  

News Entry# 293780     
   Tags   Past Edits
Feb 13 2017 (15:58)
Station Tag: Coonoor/ONR added by rdb*^/69261

Feb 13 2017 (15:58)
Station Tag: Udagamandalam/UAM added by rdb*^/69261

Posted by: rdb*^  130157 news posts
The Udhagamandalam, Coonoor and Mettupalayam Railway Stations along the Nilgiri Mountain Railway (NMR) route, now have wi-fi connectivity, bringing cheer to tourists visiting the hill station.
Kundan, station master at the Udhagamandalam Railway Station, said that the high-speed internet service, which had been in operation for the last couple of months, had been extremely useful for both foreign as well as domestic tourists who visited the Nilgiris.
It helped them get information about the places to visit right at the railway station itself.
The
...
more...
free wi-fi is being provided to railway stations across India as well as the stations along the NMR route by Google.
Many local youths have also begun taking advantage of service at the railway station, and are seen at the Udhagamandalam Station often streaming movies and downloading mobile apps.
K. Natarajan, founder of the Heritage Steam Chariot Trust, said that the initiative was extremely helpful in promoting the NMR among foreign tourists, as first-time visitors can communicate better with their families back home once they reached Udhagamandalam.
“The service is also convenient for spontaneous travellers who come to the Nilgiris and have to find places to stay, and the service will help them book services online,” said Mr. Natarajan.
Jul 08 2015 (12:12)  மேட்டுப்பாளையம்– குன்னூர் இடையே 4 பெட்டிகளுடன் மலை ரெயில் தொடர்ந்து இயக்க வேண்டும் குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை (www.dailythanthi.com)
back to top
TourismSR/Southern  -  

News Entry# 232775     
   Tags   Past Edits
Jul 08 2015 (12:12PM)
Station Tag: Udagamandalam/UAM added by emailconnect2hari/1069947

Jul 08 2015 (12:12PM)
Station Tag: Coonoor/ONR added by emailconnect2hari/1069947

Jul 08 2015 (12:12PM)
Station Tag: Mettupalayam/MTP added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  302 news posts
குன்னூர்,
மேட்டுப்பாளையம்– குன்னூர் இடையே 4 பெட்டிகளுடன் மலை ரெயில் தொடர்ந்து இயக்க வேண்டும் என்று குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரெயில்
நீலகிரி மலை ரெயில் நூற்றாண்டு பழமை வாய்ந்ததாக உள்ளது. இதன் காரணமாக யுனெஸ்கோ அமைப்பின் மூலமாக பாரம்பரிய சின்னமாக மலை ரெயில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை இயக்கப்படும் இந்த மலை ரெயிலில் பயணம் செய்வதற்கு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
மேட்டுப்பாளையத்தில்
...
more...
இருந்து குன்னூர் வரை பர்னஸ் ஆயில் என்ஜின் மூலம் ரெயில் இயக்கப்படுவதால் உந்து சக்தி குறைவடைந்து காலதாமதமாக குன்னூரை வந்தடைந்தது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக ஒரு பெட்டி குறைக்கப்பட்டு 3 பெட்டிகளுடன் மலை ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
புதிய என்ஜின்
மலை ரெயிலில் 3 பெட்டிகள் மட்டுமே இயக்கப்பட்டதால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இடம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை இருந்து வந்தது. இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி பொன்மலையில் இருந்து பர்னஸ் ஆயில் என்ஜின் புதிதாக குன்னூர் கொண்டு வரப்பட்டது. இந்த புதிய என்ஜின் மூலம் ரெயில் இயக்கப்பட்டதால் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூரை சரியான நேரத்திற்கு வந்தடைந்தது.
புதிய என்ஜின் மூலம் ரெயில் இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு 4 பெட்டிகளுடன் மலை ரெயிலை இயக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வேக்கு பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
4 பெட்டிகளுடன் இயக்க கோரிக்கை
இந்த நிலையில், கடந்த மே மாதம் 2–ந் தேதி குன்னூர் வந்த சேலம் கோட்ட மேலாளர் சுப்ரான்சூ கூடுதல் பெட்டி இணைக்க பரிசீலிப்பதாக கூறினார். இதனை தொடர்ந்து மே மாதம் 4 பெட்டிகளுடன் ரெயில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பின்னர் மீண்டும் 3 பெட்டிகளுடன் மலைரெயில் இயக்கப்பட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்த சமூக அமைப்பினர் மேட்டுப்பாளையம்– குன்னூர் இடையே 4 பெட்டிகளுடன் மலை ரெயிலை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதன்படி கடந்த 9–ந் தேதி 4 பெட்டிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கும், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் ரெயில் இயக்கப்பட்டது. தற்போது 4 பெட்டிகளுடன் இயக்கப்படும் மலைரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து தற்போது சரியான நேரத்திற்கு குன்னூரை வந்தடைகிறது. எனவே 4 பெட்டிகளுடன் மலை ரெயில் தொடர்ந்து இயக்க வேண்டும் என்று குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் மனோகரன் மற்றும் செயலாளர் சபாபதி ஆகியோர் சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகத்திற்கு மனு அனுப்பி உள்ளனர்.
Page#    Showing 1 to 20 of 23 News Items  next>>

Scroll to Top
Scroll to Bottom


Go to Desktop site
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.