Full Site Search  
Fri Jun 23, 2017 12:31:10 IST
PostPostPost Stn TipPost Stn TipUpload Stn PicUpload Stn PicAdvanced Search
Large Station Board;
Large Station Board;
no description available

MNM/Manamadurai Junction (5 PFs)
மானாமதுரை சந்திப்பு     मानामदुरै जंक्शन

Track: Single Diesel-Line

Type of Station: Junction
Number of Platforms: 5
Number of Halting Trains: 32
Number of Originating Trains: 1
Number of Terminating Trains: 1
Junction Point RMM/ VPT/MDU/KKDI,Manamadurai Jn,Railway station road,Manamadurai,Sivaganga Dt-632502
State: Tamil Nadu
Elevation: 70 m above sea level
Zone: SR/Southern
Division: Madurai
1 Travel Tips
No Recent News for MNM/Manamadurai Junction
Nearby Stations in the News

Rating: 4.3/5 (17 votes)
cleanliness - excellent (2)
porters/escalators - good (3)
food - good (2)
transportation - excellent (2)
lodging - good (2)
railfanning - excellent (2)
sightseeing - excellent (2)
safety - good (2)

Nearby Stations

MNME/Manamadurai East 2 km     RAGM/Rajagambiram 7 km     SUX/Sudiyur 10 km     KMBK/Kadambankulam 10 km     MEKM/Melakkonnakkulam 10 km     TPC/Tiruppachetti 16 km     SVGA/Sivaganga 20 km     NKK/Narikkudi 21 km     PMK/Paramakkudi 24 km     PNGI/Panangudi 26 km    

Station News

Page#    Showing 1 to 20 of 24 News Items  next>>
Mar 30 2017 (18:12)  மானாமதுரை ரெயில் நிலையத்தை புறக்கணிக்கும் அதிகாரிகள் பொதுமக்கள், பயணிகள் குற்றச்சாட்டு (www.dailythanthi.com)
back to top
New Facilities/TechnologySR/Southern  -  

News Entry# 298127     
   Tags   Past Edits
Mar 30 2017 (18:12)
Station Tag: Manamadurai Junction/MNM added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  302 news posts
மானாமதுரை ரெயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றாமல், அதிகாரிகள் புறக்கணிப்பதாக பொதுமக்கள், ரெயில் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மார்ச் 30, 04:30 AM
மானாமதுரை
மதுரை ரெயில்வே கோட்டத்தில் மானாமதுரை ரெயில் நிலையம் மிகவும் முக்கியத்துவம் பெற்ற ரெயில் நிலையமாக இருந்து வருகிறது. இங்கு தினந்தோறும் 16–க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக வாரத்தில் 3 முறை இயக்கப்படும் ராமேசுவரம்–திருப்பதி எக்ஸ்பிரஸ், வாரத்தில் 2 முறை இயக்கப்படும் ராமேசுவரம்–கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், வாரத்தில் ஒருமுறை இயக்கப்படும் ராமேசுவரம்–புவனேசுவர் எக்ஸ்பிரஸ், ராமேசுவரம்–கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் மானாமதுரை
...
more...
ரெயில் நிலையம் வந்து செல்வதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களுக்கு கரிமூடைகள் சரக்கு ரெயில் மூலம் ஏற்றுமதி இங்கு தான் நடைபெறுகிறது. ஒரு மாதத்திற்கு ரூ.2 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டக்கூடிய ரெயில் நிலையமாகமாகவும் மானாமதுரை இருந்து வருகிறது.
அடிப்படை வசதிகள்
ஆனால் இந்த ரெயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததது தான் வேதனை அளிப்பதாக உள்ளது. ரெயில் பயணிகள் டிக்கெட் மூலமாக வரும் வருமானம், போதிய அளவு இல்லாததால் அடிப்படை வசதிகள் செய்ய ரெயில்வே அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். குறிப்பாக தொடு திரை வசதி, கழிப்பறை வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சறுக்கு நடைப்பாதை, பதிவு செய்யப்பட்ட பெட்டி எண் காட்டி, மேற்கூரை வசதி, வங்கி ஏ.டி.எம். உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் ரெயில் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
புறக்கணிப்பு
மானாமதுரை ரெயில் நிலையத்தில் சுகாதாரமும் தற்போது மிகவும் மோசமாகி உள்ளது. மதுரையில் இருந்து அதிகாரிகள் மானாமதுரை வழியாக ராமேசுவரம் சென்றாலும், மானாமதுரை ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதுகுறித்து பலமுறை பொது மேலாளர், கோட்ட மேலாளர் ஆகியோருக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆனால் அதிகாரிகள் வரும்போது மட்டும் ரெயில் நிலையத்தில் சுகாதாரம் உள்ளிட்ட பணிகள் செய்யப்படுகிறது. அதன்பின்னர் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி விடுகிறது. இதனால் மானாமதுரை ரெயில் நிலையத்தை அதிகாரிகள் புறக்கணிப்பதாக பொதுமக்கள், பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அதேவேளையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ரெயில்வே அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Mar 27 2017 (12:15)  சென்னை - ராமேஸ்வரம் ரயில் நேரம் மாற்றம் (www.dinakaran.com)
back to top
New Facilities/TechnologySR/Southern  -  

News Entry# 297783     
   Tags   Past Edits
Mar 27 2017 (12:15)
Station Tag: Karaikkudi Junction/KKDI added by emailconnect2hari/1069947

Mar 27 2017 (12:15)
Station Tag: Manamadurai Junction/MNM added by emailconnect2hari/1069947

Mar 27 2017 (12:15)
Station Tag: Rameswaram/RMM added by emailconnect2hari/1069947

Mar 27 2017 (12:15)
Train Tag: Boat Mail(Rameswaram Express)/16101 added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  302 news posts
மானாமதுரை : சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றப்பட்டதால் தினமும் கல்வி மற்றும் வேலைக்கு செல்லும் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 16101) தினமும் இரவு 9.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு திருச்சி வந்தபின் பகல் 11.30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றது. திருச்சியில் ராமேஸ்வரம் செல்லும் வழியில் புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் இந்த ரயிலில் தான் கடந்த ஒன்பது ஆண்டுகளாக சென்று வந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் இந்த ரயிலின் புறப்படும் மற்றும் போய்ச்சேரும் நேரம் மாற்றப்பட்டது. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து இதுவரை இரவு 9.40 மணிக்கு புறப்பட்ட ரயில் பிப்.10ம் தேதி முதல் இரவு 7.15 மணிக்கு புறப்பட துவங்கியது. அதேபோல் ராமேஸ்வரத்திற்கு மறுநாள் பகல் 11.30 மணிக்கு பதிலாக காலை 7.15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைகிறது.
நேரம்
...
more...
மாற்றியமைக்கப்பட்டதால் இந்த ரயிலில் பயணம் செய்து வந்த சீசன் டிக்கெட் பயணிகளான பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் பலருக்கு தங்கள் பணிகளுக்கு செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மாற்றாக தினமும் காலை 6.50 மணிக்கு திருச்சியில் புறப்படும் ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து சீசன் டிக்கெட் பயணிகள் நாராயணன், சங்கரன் கூறுகையில், “ சென்னையில் இருந்து தினமும் இரவு 9.40 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் சிவகங்கைக்கு காலை 8.15 மணிக்கும் மானாமதுரைக்கு 8.40க்கும் வரும். இந்த ரயிலில் சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பயணிகள் ராமநாதபுரத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு பத்து மணிக்குள் சென்று வந்தனர்.
அதே போல புதுக்கோட்டை பகுதியில் இருந்தும் காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்திற்கு ஏராளமான மாணவர்கள் வந்தனர். மேலும் பழைய நேரப்படி இயங்கியபோது பயணிகள் குறித்த நேரத்தில் அடுத்தடுத்த ஊர்களுக்கு சென்றனர். தற்போது நேரம் மாற்றப்பட்டுள்ளதால் ரயிலில் செல்ல முடியாமல் பஸ்களில் செல்லவேண்டிய நிலை உள்ளது. இதனால் மாதம் தோறும் பயணத்திற்கான செலவு அதிகரித்துள்ளது. சிரமமும் ஏற்பட்டுள்ளது. எனவே திருச்சியில் இருந்து காலை 6.50 மணிக்கு ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலை காலை 5.50 க்கு புறப்படுமாறு மாற்றியமைத்தால் சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி பகுதியை சேர்ந்த சீசன்டிக்கெட் பயணிகளுக்கு வசதியாக இருக்கும்” என்றனர்.
Mar 27 2017 (11:24)  சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை வாரம் 3 முறை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் தென்னக ரெயில்வே கோட்ட மேலாளர் தகவல் (www.dailythanthi.com)
back to top
Rail BudgetSR/Southern  -  

News Entry# 297782     
   Tags   Past Edits
Mar 27 2017 (11:24)
Station Tag: Pattukottai/PKT added by emailconnect2hari/1069947

Mar 27 2017 (11:24)
Station Tag: Karaikkudi Junction/KKDI added by emailconnect2hari/1069947

Mar 27 2017 (11:24)
Station Tag: Manamadurai Junction/MNM added by emailconnect2hari/1069947

Mar 27 2017 (11:24)
Train Tag: Silambu Express/16181 added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  302 news posts
செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ள சிலம்பு ரெயிலை வாரம் 3 முறை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்
மார்ச் 27, 04:15 AM
காரைக்குடி,
தூய்மை இந்தியா திட்டம்
காரைக்குடியில் அகில இந்திய ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் தூய்மை இந்தியா திட்ட முகாம் நடைபெற்றது. ஓய்வூதியர்கள் சம்மேளன தலைவர்
...
more...
அடைக்கலம் வரவேற்றார். கிளை தலைவர் சுந்தரராஜூலு முன்னிலை வகித்தார். இதில் கலந்துகொண்ட தென்னக ரெயில்வே மதுரை கோட்ட மேலாளர் சுனில்குமார் கர்க் ஓய்வூதியர்களுடன் ரெயில் நிலையத்தை சுத்தமாக வைத்துக்கொள்வோம் என்ற உறுதிமொழி எடுத்தார். பின்னர் ரெயில் நிலையம் முன்பு மரக்கன்றுகள் நட்டு, ரெயில் நிலையத்தில் சுத்தம் செய்யும் பணியை அவர் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து சுனில்குமார் கர்க் நிருபர்களிடம் கூறியதாவது:–
சென்னையில் இருந்து காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக செங்கோட்டைக்கு வாரம் 2 முறை இயக்கப்பட்டு வரும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில், மக்களிடம் உள்ள வரவேற்பை பொறுத்து வாரத்திற்கு 3 முறை இயக்க ரெயில்வே மேல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அகல ரெயில் பாதை பணி
சென்னை–ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலின் நேரம், பயணிகள் கேட்டுக்கொண்டததால் தான் மாற்றியமைக்கப்பட்டது. மீண்டும் நேரத்தை மாற்றம் செய்ய வேண்டுமானால், அதை ரெயில்வே ஆலோசனைக்குழு கூட்டத்தில் கருத்து தெரிவித்து அதன்பிறகே மாற்ற இயலும். தற்போது நடைபெற்று வரும் காரைக்குடி–பட்டுக்கோட்டை அகல ரெயில் பாதை பணிகள் வருகிற 2018–ம் ஆண்டிற்குள் நிறைவு பெற வாய்ப்புள்ளது. இந்த பணிகள் முழுவதும் முடிந்த பின்னர் மீட்டர்கேஜ் ரெயில் பாதையாக இருந்தபோது இயக்கப்பட்ட ரெயில்கள் முதற்கட்டமாக இயக்கப்படும்.
மன்னார்குடி–திருச்சி வரை இயக்கப்படும் பயணிகள் ரெயிலில் கழிப்பறை இல்லை என்று புகார்கள் வருகின்றன. இந்த பயணிகள் ரெயிலான டெமு ரெயிலில் கழிப்பறை, குடிதண்ணீர் வசதி செய்யப்படாது. அதற்கு பதிலாக ஏதேனும் ஒரு ரெயில் நிலையத்தில் கூடுதலாக அரை மணி நேரம் இந்த ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹவுரா–திருச்சி ரெயிலை காரைக்குடி வரை நீட்டிக்க வாய்ப்பு குறைவு. ஏனெனில் இந்த ரெயில் நீண்ட தூரம் ரெயிலாக உள்ளதால் அந்த ரெயிலை பராமரிப்பு வசதிக்கான பிட் அமைப்பு காரைக்குடி ரெயில் நிலையத்தில் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Mar 20 2017 (15:55)  பழனி, திண்டுக்கல் வழியாக எர்ணாகுளம்–ராமேசுவரம் இடையே சிறப்பு ரெயில் (www.dailythanthi.com)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 296936     
   Tags   Past Edits
Mar 20 2017 (15:55)
Station Tag: Rameswaram/RMM added by emailconnect2hari/1069947

Mar 20 2017 (15:55)
Station Tag: Manamadurai Junction/MNM added by emailconnect2hari/1069947

Mar 20 2017 (15:55)
Station Tag: Dindigul Junction/DG added by emailconnect2hari/1069947

Mar 20 2017 (15:55)
Station Tag: Palani/PLNI added by emailconnect2hari/1069947

Mar 20 2017 (15:55)
Station Tag: Palasa/PSA added by emailconnect2hari/1069947

Mar 20 2017 (15:55)
Station Tag: Pollachi Junction/POY added by emailconnect2hari/1069947

Mar 20 2017 (15:55)
Station Tag: Palakkad Junction (Palghat)/PGT added by emailconnect2hari/1069947

Mar 20 2017 (15:55)
Station Tag: Ernakulam Junction (South)/ERS added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  302 news posts
பழனி, திண்டுக்கல் வழியாக எர்ணாகுளம்–ரமேசுவரம் இடையே சிறப்பு ரெயில் வருகிற 2–ந்தேதி முதல் இயக்கப்படுகிறது.
மார்ச் 19, 04:00 AM
பழனி,
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ராமேசுவரத்திற்கு பழனி வழியாக வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 2–ந்தேதி முதல் அந்த ரெயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இருந்து மாலை 4 மணிக்கு ரெயில் புறப்படும்.
ஆலூவா,
...
more...
திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் மதுரை, மானாமதுரை வழியாக 3–ம் தேதி அதிகாலை 4 மணிக்கு ராமேஸ்வரத்தை ரெயில் சென்றடையும். அதன்பின்னர் 3–ந்தேதி இரவு 10 மணிக்கு புறப்படும் அந்த ரெயில், மறுநாள் காலை 10.15 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.
பக்தர்கள் கோரிக்கை
எர்ணாகுளம்–ராமேசுவரம் இடையே 553 கிலோமீட்டர் தூரம் உள்ளது. ராமேசுவரத்தில் இருந்து எர்ணாகுளத்துக்கு படுக்கை வசதியுடன் கூடிய முன்பதிவு கட்டணம் ரூ.405, மூன்றடுக்கு ஏ.சி கட்டணம் ரூ.1,120, இரண்டடுக்கு ஏ.சி கட்டணம் ரூ.1,585 ஆகும். தென்னக ரெயில்வேயின் சிறப்பு ரெயில் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
அதேநேரத்தில் இந்த ரெயிலை தினசரி இயக்க வேண்டும் என்று பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Mar 17 2017 (14:54)  சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்க வேண்டும்: ம.தி.மு.க தீர்மானம் (www.dailythanthi.com)
back to top
New Facilities/TechnologySR/Southern  -  

News Entry# 296605     
   Tags   Past Edits
Mar 17 2017 (14:54)
Station Tag: Aruppukkottai/APK added by emailconnect2hari/1069947

Mar 17 2017 (14:54)
Station Tag: Sengottai/SCT added by emailconnect2hari/1069947

Mar 17 2017 (14:54)
Station Tag: Manamadurai Junction/MNM added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  302 news posts
சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க. மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மார்ச் 16, 04:00 AM
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க. மாவட்ட கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், தணிக்கைக்குழு உறுப்பினர் கார்கண்ணன், மாவட்ட துணை செயலாளர் தங்கபாண்டியன், நிர்வாகிகள் மல்லிகா, சுந்தரபாண்டியன், முருகன், நாச்சியப்பன், தீபன் சக்கரவர்த்தி, திருநாவுக்கரசர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
டாஸ்மாக்
...
more...
கடை
பின்னர் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:– அவை, தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வெற்றிபெற்ற வைகோவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவின்படி சிவகங்கை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் துரிதபடுத்த வேண்டும். சிவகங்கையில் உள்ள ராணி வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் வரலாற்று குறிப்புகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை காமராஜர் காலனி குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Page#    Showing 1 to 20 of 24 News Items  next>>

Scroll to Top
Scroll to Bottom


Go to Desktop site
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.