Full Site Search  
Sun Apr 30, 2017 14:34:32 IST
PostPostPost Stn TipPost Stn TipUpload Stn PicUpload Stn PicAdvanced Search

MPA/Manaparai (3 PFs)
மணப்பாறை     मनपारै

Track: Double Electric-Line

Type of Station: Regular
Number of Platforms: 3
Number of Halting Trains: 14
Number of Originating Trains: 0
Number of Terminating Trains: 0
Manapparai
State: Tamil Nadu
Elevation: 160 m above sea level
Zone: SR/Southern
Division: Madurai
No Recent News for MPA/Manaparai
Nearby Stations in the News

Rating: /5 (0 votes)
cleanliness - n/a (0)
porters/escalators - n/a (0)
food - n/a (0)
transportation - n/a (0)
lodging - n/a (0)
railfanning - n/a (0)
sightseeing - n/a (0)
safety - n/a (0)

Nearby Stations

CII/Chettiyapatti 7 km     SMDM/Samudram 9 km     VPJ/Vaiyampatti 14 km     KLS/Kolatur 17 km     KFC/Kalpattichatram 23 km     PUG/Punggudi 27 km     AYR/Ayyalur 34 km     TPJ/Tiruchchirappalli Junction 36 km     TPE/Tiruchchirappalli Palakkarai 38 km     GOC/Ponmalai Golden Rock 39 km    

Station News

Page#    Showing 1 to 12 of 12 News Items  
Mar 27 2017 (12:17)  மணப்பாறை- கல்பட்டி இருவழிப்பாதை பணி நிறைவு இன்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் (www.dinakaran.com)
back to top
New Facilities/TechnologySR/Southern  -  

News Entry# 297787     
   Tags   Past Edits
Mar 27 2017 (12:17)
Station Tag: Kalpattichatram/KFC added by emailconnect2hari/1069947

Mar 27 2017 (12:17)
Station Tag: Manaparai/MPA added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  300 news posts
மணப்பாறை : மணப்பாறையில் இருந்து கல்பட்டி வரை இரு வழிப்பாதைக்கான புதிய ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து இன்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது. மணப்பாறையிலிருந்து திண்டுக்கல் வரை இருவழிப் பாதைக்கான புதிய ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. முதற்கட்டமாக திண்டுக்கல்லிலிருந்து தாமரைப்பாடி வரையிலான சுமார் 10 கிமீ தூரத்திற்கு பணிகள் நிறைவடைந்து ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டது.
2வது கட்டமாக மணப்பாறையிலிருந்து கல்பட்டி வரையிலான சுமார் 30 கிமீ தூரத்திற்கான புதிய ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றது. இதையடுத்து இன்ஜினை மட்டும் கல்பட்டியிலிருந்து மணப்பாறை வரை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இப்பணிகளை நிர்மாணித்து வரும் ரயில் விகாஸ் நிகர் லிமிடெட்டின் உதவி பொது மேலாளர் சங்கர், துணைமேலாளர் சண்முகவேல், டிராக் ஆய்வாளர் மாடசாமி, திட்ட மேலாளர் சிலம்பரசன் உள்ளிட்ட அதிகாரிகள் இப்பணியினை மேற்பார்வையிட்டனர்.
மார்ச்
...
more...
31ம் தேதி இப்பாதை ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்ட உள்ளது. அன்று ரயில்வே பாதுகாப்புத்துறை ஆணையர் மற்றும் உயர்மட்ட பொறியாளர்கள் புதிய வழித்தடத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்த உள்ளனர்.
மணப்பாறை ரெயில் நிலையத்தில் நேற்று முதல்முறையாக இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று சென்றது.
மார்ச் 26, 04:30 AM
மணப்பாறை,
இதனை வரவேற்கும் விதமாக பொதுமக்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்
வட
...
more...
மாநிலங்களில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இரு மார்க்கத்திலும் செல்லும் ரெயில்களின் பிரதான வழித்தடமாக மணப்பாறை ரெயில் நிலையம் உள்ளது. ஆனால் மணப்பாறை ரெயில் நிலையத்தில் பாண்டியன் மற்றும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இந்நிலையில் மணப்பாறையில் இருந்து மதுரைக்கு தினமும் பல்வேறு தொழில் மற்றும் வேலை நிமித்தமாக பலர் செல்கின்றனர். மேலும் வழக்கறிஞர்களும் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு செல்கின்றனர். எனவே அவர்கள் சென்று வர வசதியாக திருச்சியில் இருந்து நெல்லைக்கு செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை மணப்பாறை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்களும், அனைத்து கட்சியினரும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மேலும் சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற ரெயில்வே பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய ரெயில்வே துறை மந்திரி சுரேஷ் பிரபுவை, மணப்பாறையை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் சந்தித்து இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மணப்பாறையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். இதுகுறித்து பரிசீலிப்பதாக கூறிய அவர், மார்ச் 25–ந் தேதி முதல் மணப்பாறை ரெயில் நிலையத்தில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்லும் என்று அறிவித்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள், அரசியல் கட்சியினர் பல்வேறு இடங்களிலும் மத்திய மந்திரிக்கும், சிபாரிசு செய்த திருச்சி சிவா எம்.பி.க்கும் நன்றி தெரிவித்து விளம்பர பதாகைகள் வைத்தனர்.
நின்று சென்றது
இந்நிலையில் மந்திரி அறிவித்தபடி நேற்று காலை திருச்சியில் இருந்து நெல்லை நோக்கி சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மணப்பாறை ரெயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி சென்றது. இதையொட்டி முன்னதாக ரெயிலை வரவேற்பதற்காக அனைத்து கட்சியினரும் காலை முதலே மணப்பாறை ரெயில் நிலையத்தில் குவிந்தனர். மேலும் பொதுமக்களும் திரளான வந்திருந்தனர். மணப்பாறை ரெயில் நிலையத்திற்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றதும் அரசியல் கட்சியினர், வழக்கறிஞர்கள் சங்கத்தினர், ஆட்டோ சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஓடிச்சென்று ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கு பொன்னாடை அணிவித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, இனிப்பு வழங்கினர். தொடர்ந்து ரெயிலில் பயணம் செய்த பயணிகளுக்கும் இனிப்பு வழங்கினர்.
மேலும் முதல் நாள் என்பதால் திருச்சியில் இருந்து சிலர் மணப்பாறை வரையிலும், மணப்பாறையில் இருந்து சிலர் திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலிக்கும் அந்த ரெயிலில் பயணம் மேற்கொண்டனர். அந்த ரெயில் இங்கு நின்று செல்ல ஒரு நிமிடம் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முதல் நாள் என்பதால் சிறிது நேரம் கூடுதலாக நின்று சென்றது. ரெயிலை இரண்டு நிமிடம் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் மாலை நேரத்தில் நெல்லையில் இருந்து திருச்சி சென்றபோதும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மணப்பாறை ரெயில் நிலையத்தில் நின்று சென்றது.
Mar 26 2017 (13:27)  தண்டவாளத்தில் திடீர் விரிசல் ரயில்கள் தாமதம் (m.dinakaran.com)
back to top
Crime/AccidentsSR/Southern  -  

News Entry# 297696     
   Tags   Past Edits
Mar 26 2017 (13:27)
Station Tag: Manaparai/MPA added by sGs*^~/41440

Posted by: sGs*^~  184 news posts
மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி கல்பட்டி சத்திரத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசலை நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த கேங்க்மேன் உடனே கண்டுபிடித்து விட்டார். இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் வந்து விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று அதிகாலை 5 மணிக்கு விரிசல் சரி செய்யப்பட்டது. இருப்பினும் போக்குவரத்தை நிறுத்தாமல் விரிசல் ஏற்பட்ட இடத்தில் ரயில் வேகத்தை குறைத்து இயக்கப்பட்டது. இதனால் அந்த இடத்தை கடந்த 10 ரயில்களும் தாமதமாக சென்றது.
திருச்சி: தெற்கு ரயில்வே சார்பில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில், திருச்சி, விழுப்புரம், விருத்தாசலம் ரயில் நிலையங்களில், ரயில்வே திட்டங்கள் துவக்க விழா நடந்தது. விழாவில், பங்கேற்பதற்காக, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சி வந்தார். தொடர்ந்து, ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நடந்த விழாவில், திருச்சி, பொன்மலையில் இருந்து, டவுன் ரயில் நிலையம் வரையிலான பைபாஸ் ரயில் பாதையை, பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார். அங்கிருந்த படியே, வீடியோ கான்பரன்ஸ் மூலம், விருத்தாசலம் ரயில் நிலையத்தில், கட்டப்பட்டுள்ள முக்கிய பிரமுகர்கள் தங்கும் அறை, பயணிகள் ஓய்வு அறை திறப்பு, விழுப்புரம் திருவெண்ணெய் நல்லூர் இடையிலான புதிய இருவழிப்பாதை ஆகிய திட்டங்களை துவங்கி வைத்தார். நேற்று மாலை, மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு குடும்பத்தினருடன், திருச்சியில் உள்ள ராஜ்யசபா, தி.மு.க., எம்.பி., சிவா வீட்டுக்கு சென்றார். எம்.பி., சிவாவிடம், இழுபறியாக உள்ள ரயில்வே திட்டங்கள் பற்றி கேட்டறிந்த மத்திய அமைச்சர், 'விரைவில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மணப்பாறையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்.
Apr 01 2016 (19:28)  Second line between Trichy and Manapparai opens today - Times of India (timesofindia.indiatimes.com)
back to top
New Facilities/TechnologySR/Southern  -  

News Entry# 263161   Blog Entry# 1787360     
   Tags   Past Edits
Apr 01 2016 (7:28PM)
Station Tag: Manaparai/MPA added by ksgopal/36225

Apr 01 2016 (7:28PM)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by ksgopal/36225

Posted by: KSG*^~  3473 news posts
Second line between Trichy and Manapparai opens today
TNN | Apr 1, 2016, 07.36 AM IST
Madurai: The newly-laid second broad gauge line between Trichy and Manapparai will be opened for traffic from 4pm on April 1. The 36 km long line is part of the 94 km doubling stretch between Dindigul and Trichy. Madurai and Dindigul section already has double lines. Madurai divisional railway manager, Sunil Kumar Garg in a statement here on Thursday has issued a warning advising the general public and people from premises situated adjoining the newly laid
...
more...
line not to come close to the track. Public are alerted to be cautious while approaching the track, unmanned level crossings, station platforms on the Trichy - Manapparai section from 4pm on April 1 onwards. Ahead of commissioning the double line, Madurai railway division had announce a mega line block in the section from March 28 to 31. Trains were cancelled, partially cancelled, diverted and delayed to arrange signalling on the newly-laid line.

2 posts - Fri Apr 01, 2016 - are hidden. Click to open.

8 posts - Sat Apr 02, 2016 - are hidden. Click to open.

3 posts - Sun Apr 03, 2016 - are hidden. Click to open.

1630 views
Apr 04 2016 (07:50)
Hyderabad Karnataka needs a dedicated train to SBC*^~   9687 blog posts   497 correct pred (74% accurate)
Re# 1787360-14            Tags   Past Edits
Because of trichy only it gets decent patronage , that TPJ route takes only 70 to 80 minutes extra. By your logic , if howrah mail is extended , even it 'll waste day time ! Why kanyakumari howrah is not filled fully despite giving General quota almost till Trichy ? , first make use of Cape howrah properly
Mar 28 2016 (09:55)  மணப்பாறையில் இரட்டை ரெயில் பாதையில் இறுதி கட்ட பணிகள் தீவிரம் (www.dailythanthi.com)
back to top
Other NewsSR/Southern  -  

News Entry# 262656     
   Tags   Past Edits
Mar 28 2016 (9:55AM)
Station Tag: Manaparai/MPA added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  300 news posts
மணப்பாறையில் இரட்டை ரெயில் பாதை இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இரட்டை ரெயில் பாதை
விழுப்புரம்-திண்டுக்கல் இடையே இரு வழி அகல ரெயில் பாதை மின் மயமாக்கலுடன் அமைக்கும் பணி பகுதி, பகுதியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் வாளாடி-அரியலூர் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டு ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது.
தொடர்ந்து அரியலூரில் இருந்து ஆர்.எஸ்.மாத்தூர் வரை இரட்டை ரெயில் பாதை மின் மயமாக்கலுடன் அமைக்கப்பட்டது. இதனை கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.கே. மிட்டல் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.
...
more...

விரைவில் இந்த வழித்தடத்தில் ரெயில்கள் இயக்க அனுமதி அளிப்பார்.
விருத்தாசலத்தில் இருந்து திருவெண்ணைநல்லூர் வரை இரட்டை ரெயில் பாதை பணி முடிந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருச்சி-மணப்பாறை இடையே இரட்டை ரெயில் பாதை மின் மயமாக்கலுடன் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிந்தது. மணப்பாறை அருகே சமுத்திரம் ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி வரை 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.கே. மிட்டல் முன்னிலையில் சோதனை ஓட்டம் நடந்தது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தது.
பணிகள் தீவிரம்
ஆய்வுக்கு பின் சில இறுதிகட்ட பணிகளை மேற்கொள்ள திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகளுக்கு பாதுகாப்பு ஆணையர் அறிவுறுத்தினார். இதையடுத்து மணப்பாறையில் இரட்டை ரெயில் பாதையில் சிக்னல் சரி செய்தல், தண்டவாள இணைப்பு, மின் பாதையில் கம்பிகளை சரி செய்தல் உள்ளிட்ட பணிகளை கடந்த சில நாட்களாக ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
இந்த பணிகளையொட்டி திருச்சியில் நேற்று முதல் ரெயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்து கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்பு அமலுக்கு வந்தது. ஏப்ரல் மாதம் 1-ந்தேதி வரை இறுதி கட்ட பணிகள் நடைபெற உள்ளன. பணிகள் முடிந்த பின் திருச்சி-மணப்பாறை இரட்டை ரெயில் பாதையில் போக்குவரத்து தொடங்கி ரெயில்கள் இயக்க வாய்ப்பு உள்ளது.
குருவாயூர் எக்ஸ்பிரஸ்
குருவாயூர்/தூத்துக்குடி-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதுரை, திண்டுக்கல், கரூர் மார்க்கமாக திருச்சிக்கு தாமதமாக வந்து சென்னை புறப்பட்டு சென்றது. குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 30-ந்தேதி வரை இதேபோல இயக்கப்படும்.
Jan 29 2016 (10:38)  திருச்சி- மணப்பாறை இடையே புதிதாக அமைக்கப்பட்ட இரட்டை ரெயில் பாதையில், பாதுகாப்பு ஆணையர் ஆய்வு (www.dailythanthi.com)
back to top
New Facilities/TechnologySR/Southern  -  

News Entry# 255361   Blog Entry# 1723905     
   Tags   Past Edits
Jan 29 2016 (10:38AM)
Station Tag: Manaparai/MPA added by emailconnect2hari/1069947

Jan 29 2016 (10:38AM)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  300 news posts
திருச்சி- மணப்பாறை இடையே புதிதாக அமைக்கப்பட்ட இரட்டை ரெயில் பாதையில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தினார். இன்று அதிவேக சிறப்பு ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
விழுப்புரம்- திண்டுக்கல் இடையே தெற்கு ரெயில்வே சார்பில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும்பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் பணிகள் நிறைவடைந்த இடங்களில் ஏற்கனவே பகுதி பகுதியாக ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக திருச்சி- மணப்பாறை இடையே புதிதாக அமைக்கப்பட்ட இரட்டை ரெயில் பாதை பணி நிறைவடைந்து உள்ளது.
இதனை
...
more...
தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்ட ரெயில் பாதையின் உறுதி தன்மை பற்றி ஆய்வு செய்வதற்காக இந்திய ரெயில்வேயின் தெற்கு வட்ட பாதுகாப்பு ஆணையர் எஸ்.கே. மிட்டல் நேற்று திருச்சி வந்தார். திருச்சியில் இருந்து டிராலியில் அவர் மணப்பாறை வரை சென்றார். பின்னர் அங்கிருந்து திருச்சி ஜங்ஷன் வரை வந்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் அவருடன் சென்று இருந்தனர்.
இன்று சோதனை ஓட்டம்
இன்று (வெள்ளிக்கிழமை) மணப்பாறையை அடுத்த சமுத்திரம் ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி ஜங்ஷன் வரை அதிவேக சிறப்பு ரெயிலை இயக்கி பாதுகாப்பு ஆணையர் மிட்டல் தலைமையில் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.
இந்த சோதனை இன்று பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருப்பதால் திருச்சி- மணப்பாறை இடையே யாரும் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சிக்கவேண்டாம் என எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.

2688 views
Jan 29 2016 (11:14)
srinivasvasanthi~   3796 blog posts   13 correct pred (50% accurate)
Re# 1723905-1            Tags   Past Edits
So Manappari people's can expect more shuttleIs /Main Line Electric Multiple Units from Trichy junction .

2453 views
Jan 29 2016 (12:07)
emailconnect2hari   738 blog posts   1 correct pred (50% accurate)
Re# 1723905-2            Tags   Past Edits
Yes. We can expect from next month onwards all the train will run in second line.
Jan 27 2016 (15:43)  INSPECTION AND HIGH SPEED TRIAL RUN BETWEEN TIRUCHCHIRAPPALLI - MANAPARAI RAILWAY STATIONS (www.sr.indianrailways.gov.in)
back to top
New Facilities/TechnologySR/Southern  -  IR Press Release  

News Entry# 255202   Blog Entry# 1722511     
   Tags   Past Edits
Jan 27 2016 (3:43PM)
Station Tag: Manaparai/MPA added by ameyambre/16020

Jan 27 2016 (3:43PM)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by ameyambre/16020

Posted by: Amey Ambre~  1832 news posts
Shri Satish Kumar Mittal, Commissioner of Railway Safety, Southern Circle, Bangalore will inspect the newly laid second broad gauge railway line between Tiruchchirappalli Jn. – Manaparai railway stations o­n 28.01.2016 & 29.01.2016.He will also conduct a high speed trial run by using an Inspection Special Train in the newly laid second broad gauge railway line between Samudram – Tiruchchirappalli railway stations, in the Manaparai - Tiruchchirappali section o­n 29.01.2016, Friday. The high speed trial run will be conducted between 12.00 hrs. – 17.00 hrs.

3104 views
Jan 27 2016 (15:50)
Donate on Bharat Ke Veer^~   33451 blog posts   26373 correct pred (78% accurate)
Re# 1722511-1            Tags   Past Edits
How much speed?

2276 views
Jan 27 2016 (20:39)
srinivasvasanthi~   3796 blog posts   13 correct pred (50% accurate)
Re# 1722511-2            Tags   Past Edits
So SR Trichy division can run around 4 additional shuttle services between Manapparai and Trichy junction for the benefits of Manapparai area people.
Nov 03 2015 (12:17)  மணப்பாறையில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்லக்கோரி ரெயில்வே அதிகாரிக்கு மனு (www.dailythanthi.com)
back to top
Temporary StopsSR/Southern  -  

News Entry# 246747     
   Tags   Past Edits
Nov 03 2015 (12:17PM)
Station Tag: Manaparai/MPA added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  300 news posts
மணப்பாறையை அடுத்துள்ள அணியாப்பூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம், நாடார் சங்கம், காமராஜ் நற்பணி இயக்கம் ஆகிய அமைப்புகளின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நற்பணி மன்ற ஆலோசகர் பாப்புக்காளை நாடார் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு காமராஜர் பேரவை தலைவர் சொக்கலிங்கம், நாடார் சங்க தலைவர் தங்கவேல், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் அருள்நாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நற்பணி மன்ற கவுரவ தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக சென்னை புழல் ஒன்றிய டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற துணை தலைவர் மணி.எம்.ராஜகோபால், மதுரை நாடார் மகாஜன சங்க வட்ட செயலாளர் க.மாமுண்டி லெக்கைய்யன், சி.பா.ஆதித்தனார் சமூக நலப்பேரவை தலைவர் அருணாசலம் நாடார் ஆகியோர் கலந்து கொண்டு தீர்மானங்களை விளக்கி பேசினர். கூட்டத்தில், திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை தாலுகாவில் உள்ள ஊராட்களில் உள்ள சீமை கருவேல மரங்களை முற்றிலும் அழிக்க மாவட்ட கலெக்டர் உடனடியாக உத்தரவிட வேண்டும். மணப்பாறை ரெயில் நிலையத்தில் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல தென்னக ரெயில்வே மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருச்சி புறநகர் மாவட்ட டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற துணை செயலாளர் ஓ.செல்வம் நன்றி கூறினார்.
திருச்சி–மணப்பாறை இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், வருகிற ஆகஸ்டு 15–ந் தேதிக்குள் அந்த இருவழிப்பாதையில் ரெயில்கள் இயக்கப்படும் என்றும், தெற்கு ரெயில்வே பொது மேலாளர் தெரிவித்தார்.
பொது மேலாளர் வருகை
தெற்கு ரெயில்வே பொது மேலாளராக வஷிஷ்டஜோரி கடந்த சில தினங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, அவர் சென்னை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டங்களுக்குச் சென்று வளர்ச்சிப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நேற்று அவர் மதுரை வந்தார். மதுரை ரெயில்நிலையத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 1–வது பிளாட்பாரத்தின் வடக்கு
...
more...
புறத்தில் பயணிகளின் வசதிக்காக கழிப்பறை கட்டித்தர வேண்டும் என்று அங்கிருந்த பயணிகள் தெரிவித்தனர்.
அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தென்னக ரெயில்வேயில், செங்கல்பட்டு–கன்னியாகுமரி இடையே இரட்டை அகல ரெயில்பாதை பணிகள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நிதி ஒதுக்கீடு இல்லாததால் இந்த பணிகளை தொடருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. ரெயில்வே அமைச்சகத்தின் முடிவுப்படி, தனியார் பங்களிப்பு மற்றும் தமிழக அரசின் நிதி பங்களிப்பு இருந்தால் மட்டுமே இரட்டை அகல ரெயில்பாதை உள்ளிட்ட ரெயில்வே திட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்.
15–ந் தேதிக்குள்...
அதுவரையில், ஏற்கனவே ரெயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு, நடந்து வரும் பணிகள் மட்டுமே தொடரும். இந்த பணிகளை விரைவில் முடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். அதன்படி, திருச்சி–மணப்பாறை இடையே இரட்டை அகல ரெயில்பாதை பணிகள் முடிந்துள்ளது.
அந்த பாதையை ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்யக்கோரி முறைப்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த பாதையில் வருகிற ஆகஸ்டு மாதம் 15–ந் தேதிக்குள் ரெயில்கள் இயக்கப்படும். மணப்பாறை–திண்டுக்கல் இடையேயான இரட்டை அகல ரெயில்பாதை பணிகள் வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.
அதேபோல, பொள்ளாச்சி–பாலக்காடு அகல ரெயில்பாதை பணிகள் முடிந்து பாதுகாப்பு கமிஷனரின் ஆய்வுக்காக காத்திருக்கிறது.
பாம்பன் பாலம்
ராமேசுவரம் செல்லும் ரெயில்பாதையில் உள்ள பாம்பன் பாலம் ரூ.65 கோடி செலவில் புனரமைக்கப்பட உள்ளது. தூத்துக்குடியில் 2 தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்காக துறைமுகத்தில் இருந்து ரெயில்பாதை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே வாரியம் அறிவித்தபடி, ரெயில்களில் 26 பெட்டிகளை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்ந்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் சுனில்குமார் கார்க், ரெயில்நிலைய மேலாளர் கணேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

2572 views
Jul 24 2015 (12:00)
gprh05   91 blog posts
Re# 1549362-1            Tags   Past Edits
what about Esclator or lift facility in Trichy junction , because 2- 7 platforms using steps to reach WITH LUGGAGES is very difficulty, why SR not arranged for esclator or lift facility to passangers?

2141 views
Jul 24 2015 (14:33)
emailconnect2hari   738 blog posts   1 correct pred (50% accurate)
Re# 1549362-2            Tags   Past Edits
Its already in progress i think so... I saw that 2-3rd escalator facility work is going on. But dont know abt upto 7th platform.
Page#    Showing 1 to 12 of 12 News Items  

Scroll to Top
Scroll to Bottom


Go to Desktop site