Full Site Search  
Mon Mar 27, 2017 08:29:27 IST
PostPostPost Stn TipPost Stn TipUpload Stn PicUpload Stn PicAdvanced Search
Large Station Board;

MV/Mayiladuturai Junction (5 PFs)
மயிலாடுதுறை சந்திப்பு     मयिलाडुतुरै जंक्शन
[Mayavaram]

Track: Single Diesel-Line

Type of Station: Junction
Number of Platforms: 5
Number of Halting Trains: 34
Number of Originating Trains: 13
Number of Terminating Trains: 13
Sarathattai Street,Railway Cross Road,Mayiladuthurai,PIN 609003
State: Tamil Nadu
Elevation: 16 m above sea level
Zone: SR/Southern
Division: Tiruchchirappalli
5 Travel Tips
No Recent News for MV/Mayiladuturai Junction
Nearby Stations in the News

Rating: 3.6/5 (46 votes)
cleanliness - good (6)
porters/escalators - average (4)
food - good (6)
transportation - good (6)
lodging - good (6)
railfanning - good (6)
sightseeing - good (6)
safety - good (6)

Nearby Stations

MVM/Mayuram Town 4 km     MY/Malliyam 5 km     NID/Nidur 5 km     ANP/Anandatandavapuram 7 km     MNMP/Mannampandal 8 km     MNX/Manganallur 9 km     KTM/Kutralam 9 km     SEMB/Sembanarkoil 12 km     KLMD/Kollumangudi 12 km     VDL/Vaithisvaran Koil 14 km    

Station News

Page#    Showing 1 to 18 of 18 News Items  
சென்னை : கடந்த பிப்ரவரி 1ம் பொது பட்ஜெட்டுடன் இணைத்து ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 2287 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாக தெரிவித்துள்ளது. 4 மின்வழித்தட பணிகளுக்கு ரூ.404.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .
விழுப்புரம் -கடலூர் துறைமுகம் -மயிலாடுதுறை - தஞ்சை ரயில் வழித்தடங்கள் மின்மயமாகின்றன. மேலும் மயிலாடுதுறை - திருவாரூர், பெங்களூர் - ஓமலூர் வழியாக ஓசூர் வரை உள்ள வழித்தடமும் மின்மயாகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கவும் ரூ.382.9 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Dec 09 2016 (12:25)  திருவாரூர் அருகே ரயில் தடம்புரண்டது.. 10 பேர் காயம்! (tamil.oneindia.com)
back to top
Major Accidents/DisruptionsSR/Southern  -  

News Entry# 288135     
   Tags   Past Edits
Dec 09 2016 (12:25PM)
Station Tag: Peralam Junction/PEM added by emailconnect2hari/1069947

Dec 09 2016 (12:25PM)
Station Tag: Nannilam/NNM added by emailconnect2hari/1069947

Dec 09 2016 (12:25PM)
Station Tag: Mayiladuturai Junction/MV added by emailconnect2hari/1069947

Dec 09 2016 (12:25PM)
Station Tag: Mannargudi/MQ added by emailconnect2hari/1069947

Dec 09 2016 (12:25PM)
Station Tag: Thiruvarur Junction/TVR added by emailconnect2hari/1069947

Dec 09 2016 (12:25PM)
Train Tag: Mannargudi - Mayiladuthurai Passenger/56034 added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  281 news posts
திருவாரூர் : நன்னிலம் அருகே மன்னார்குடி-மயிலாடுதுறை பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மன்னார்குடியிலிருந்து மயிலாடுதுறைக்கு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சென்ற போது ரயில் திடீரென தடம்புரண்டது. இதில் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியது. இதனால் பயங்கர சத்தம் கேட்டதால் பயணிகள் கத்திக் கூச்சலிட்டனர். இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. விபத்துகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக மன்னார்குடி- மயிலாடுதுறை இடையிலான ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. தடம்புரண்ட பெட்டிகள் அகற்றப்பட்டவுடன் அந்தப் பாதையில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more at: click here
Aug 03 2016 (11:58)  ஜனசதாப்தி, ராமேசுவரம்-திருப்பதி விரைவு ரயில்கள் பாபநாசத்தில் நின்றுசெல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு (www.dinamani.com)
back to top
Other NewsSR/Southern  -  

News Entry# 275774     
   Tags   Past Edits
Aug 03 2016 (11:58AM)
Station Tag: Coimbatore Main Junction/CBE added by gvsureshmng/670090

Aug 03 2016 (11:58AM)
Station Tag: Mayiladuturai Junction/MV added by gvsureshmng/670090

Aug 03 2016 (11:58AM)
Station Tag: Papanasam/PML added by gvsureshmng/670090

Aug 03 2016 (11:58AM)
Train Tag: Tirupati - Rameswaram (Meenakshi) Express/16779 added by gvsureshmng/670090

Aug 03 2016 (11:58AM)
Train Tag: Rameswaram - Tirupati (Meenakshi) Express/16780 added by gvsureshmng/670090

Aug 03 2016 (11:58AM)
Train Tag: Mayiladuturai-Coimbatore Jan Shatabdi Express/12083 added by gvsureshmng/670090

Aug 03 2016 (11:58AM)
Train Tag: Coimbatore-Mayiladuthurai Jan Shatabdi Express/12084 added by gvsureshmng/670090

Posted by: gvsureshmng  7 news posts
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை-கோயம்புத்தூர், ராமேசுவரம்-திருப்பதி உள்ளிட்ட விரைவு ரயில்கள் வரும் 5-ம் தேதியிலிருந்து நின்றுசெல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஜனசதாப்தி விரைவு ரயிலில் கோயம்புத்தூர் செல்வதற்கு (செவ்வாய்க்கிழமை தவிர்த்து) பிற்பகல் 3.26 மணிக்கும், மறு மார்க்கத்தில் கோயம்புத்தூரிலிருந்து மயிலாடுதுறை வருவதற்கு மதியம் 12.42 மணிக்கும், இதேபோல, ராமேசுவரம்-திருப்பதி விரைவு ரயிலில் திருப்பதி செல்ல திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் இரவு 11.34 மணிக்கும், மறு மார்க்கத்தில் திருப்பதியிலிருந்து ராமேஸ்வரம் செல்ல செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.04 மணிக்கும் இந்த விரைவு ரயில்கள் பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
இந்த
...
more...
ரயில் சேவைகளை பாபநாசத்திலிருந்து கரூர், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் செல்லும் பொதுமக்கள் வியாபாரிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், சுற்றுலா பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், கோயம்புத்தூர் செல்லும் ஜனசதாப்தி விரைவு ரயில் எண்: 12083:12084-ல் முன்பதிவு செய்யும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பதால், பயணிகள் முன்பதிவு செய்து ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பாபநாசத்திலிருந்து கோயம்புத்தூருக்கும், கோயம்புத்தூரிலிருந்து பாபநாசத்திற்கும் முன்பதிவு வசதியுடன் பயணக் கட்டணம் ரூ. 165 என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலாளர் டி. சரவணன் கூறுகையில், விரைவு ரயில்கள் பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என பாபநாசம் ரயில் பயணிகள் சங்கம், பாபநாசம் வர்த்தகர்கள் சங்கம், பாபநாசம் பொதுமக்கள் சார்பில் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்துடன் பேசி இந்த வசதியைப் பெற்றுத் தந்த மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன், மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன், தமிழக வேளாண் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.
Mar 11 2016 (10:10)  அகல ரெயில்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை தென்னக ரெயில்வே பொது மேலாளர் தகவல் (www.dailythanthi.com)
back to top
Rail BudgetSR/Southern  -  

News Entry# 260856     
   Tags   Past Edits
Mar 11 2016 (10:10AM)
Station Tag: Arantangi/ATQ added by emailconnect2hari/1069947

Mar 11 2016 (10:10AM)
Station Tag: Tiruturaipundi Junction/TTP added by emailconnect2hari/1069947

Mar 11 2016 (10:10AM)
Station Tag: Thiruvarur Junction/TVR added by emailconnect2hari/1069947

Mar 11 2016 (10:10AM)
Station Tag: Mayiladuturai Junction/MV added by emailconnect2hari/1069947

Mar 11 2016 (10:10AM)
Station Tag: Pattukottai/PKT added by emailconnect2hari/1069947

Mar 11 2016 (10:10AM)
Station Tag: Karaikkudi Junction/KKDI added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  281 news posts
பட்டுக்கோட்டை- காரைக்குடி இடையே அகல ரெயில் பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னக ரெயில்வே பொது மேலாளர் தெரிவித்தார்.
அதிகாரி ஆய்வு
தென்னக ரெயில்வே பொதுமேலாளர் வசிஸ்டாஜோரி நேற்று சிறப்பு ரெயில் மூலம் வருகை மயிலாடுதுறைக்கு வந்தார். பின்னர் மயிலாடுதுறை ரெயில் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ரெயில்வே நடைமேடை, கேண்-டீன், தியானம் செய்யும் அறை, சமையல் செய்யும் இடம், ரெயில்வே துறையில் பணியாற்றுவோர் ஓய்வு எடுக்கும் அறை, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து பொது மேலாளர், ரெயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன சிக்னல் ஆய்வகத்தை திறந்து வைத்தார். அப்போது, திருச்சி கோட்ட மேலாளர் அகர்வால், முதன்மை தலைமை பொறியாளர் குப்தா, முதன்மை பொறியாளர் (பொது) ஷியாமா சுந்தர், முதன்மை நிர்வாக அதிகாரி (கட்டுமான பிரிவு)
...
more...
மிஸ்ரா, ரெயில்வே திருச்சி கோட்ட பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமரேசன், மயிலாடுதுறை நிலைய மேலாளர் மோகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
அகல ரெயில்பாதை அமைக்கும் பணி
அதனை தொடர்ந்து தென்னக ரெயில்வே பொது மேலாளர் வசிஸ்டா ஜோரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்பதிவு இல்லாத விரைவு ரெயில்கள் இயக்குவது குறித்து ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த ரெயில்கள் எந்தெந்த வழித்தடங்களில் இயக்கப்படும் என்பது குறித்தும், அதற்குரிய கட்டண விவரம் குறித்தும் இனிமேல்தான் ரெயில்வேத்துறை சார்பில் அறிவிக்கப்படும். பட்டுக்கோட்டை- காரைக்குடி இடையே 73 கி.மீட்டர் தூரத்திற்கு ரூ.85 கோடி மதிப்பீட்டில் அகல ரெயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
Mar 03 2016 (10:28)  நெல்லையில் இருந்து திண்டுக்கல் வழியாக செல்லும் ஈரோடு, மயிலாடுதுறை இணைப்பு ரெயில் தாமதம் (www.dailythanthi.com)
back to top
Other NewsSR/Southern  -  

News Entry# 259954     
   Tags   Past Edits
Mar 03 2016 (10:28AM)
Station Tag: Mayiladuturai Junction/MV added by emailconnect2hari/1069947

Mar 03 2016 (10:28AM)
Station Tag: Erode Junction/ED added by emailconnect2hari/1069947

Mar 03 2016 (10:28AM)
Station Tag: Tirunelveli Junction/TEN added by emailconnect2hari/1069947

Mar 03 2016 (10:28AM)
Station Tag: Dindigul Junction/DG added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  281 news posts
திண்டுக்கல்,
நெல்லையில் இருந்து திண்டுக்கல் வழியாக ஈரோடு, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் இணைப்பு ரெயில் நேற்று ஒரு மணி நேரம் தாமதமாக வந்தது. ரெயில் தாமதம் தொடர்கதையாவதால் பயணிகள் பரிதவித்து வருகிறார்கள்.
பாசஞ்சர் ரெயில் தாமதம்
நெல்லையில் இருந்து திண்டுக்கல் வழியாக ஈரோடு, மயிலாடுதுறைக்கு இணைப்பு பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தினந்தோறும் காலை 11.10 மணி அளவில் திண்டுக்கல் வருவது வழக்கம். பிறகு அங்கிருந்து தனித்தனி என்ஜின்கள் பொருத்தப்பட்டு ஈரோடுக்கும், மயிலாடுதுறைக்கும் ரெயில்கள் செல்கின்றன.
இந்த
...
more...
நிலையில் நெல்லையில் இருந்து நேற்று காலையில் புறப்பட்ட அந்த ரெயில் நேற்று ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 12.10 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்து பெட்டிகள் பிரிக்கப்பட்டு 12.20 மணிக்கு ஈரோடு பாசஞ்சர் ரெயிலும், 12.50–க்கு மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயிலும் புறப்பட்டன.
முன்னதாக அந்த ரெயிலுக்காக கொடைரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல் ரெயில் நிலையங்களில் காத்திருந்த பயணிகள் பரிதவித்தனர். இந்த இணைப்பு ரெயில் அடிக்கடி தாமதமாகவே வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோல சீக்கிரமாக வந்தாலும் என்ஜின் பற்றாக்குறை, ரெயில்வே பணிகள் உள்ளிட்டவற்றின் காரணமாக திண்டுக்கல்லில் இருந்து தாமதமாகவே புறப்படுகிறது.
பயணிகள் பரிதவிப்பு
தொடர்கதையாகும் பாசஞ்சர் ரெயில் தாமதம் காரணமாக பயணிகள் தொடர்ந்து அவதி அடைந்து வருகிறார்கள். உரிய நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். எனவே ரெயில்கள் காலதாமதமின்றி உரிய நேரத்தில் செல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘நெல்லை அருகே பராமரிப்பு உள்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன. இதனால் அந்த ரெயில் வருவதில் தாமதம் ஏற்பட்டு இருக்கலாம். திண்டுக்கல் வந்தவுடன் பெட்டிகள் பிரிக்கப்பட்டு உடனடியாக இணைப்பு ரெயில்கள் புறப்பட்டன’ என்றார்.
Feb 26 2016 (18:32)  விழுப்புரம் - திருச்சி; சேலம் - பெங்களூரு மின்மயமாக்கல் பணிக்கு அனுமதி (www.dinamalar.com)
back to top
Rail BudgetSR/Southern  -  

News Entry# 259287   Blog Entry# 1750640     
   Tags   Past Edits
Feb 26 2016 (6:32PM)
Station Tag: Hosur/HSRA added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (6:32PM)
Station Tag: Salem Junction/SA added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (6:32PM)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (6:32PM)
Station Tag: Thanjavur Junction/TJ added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (6:32PM)
Station Tag: Kumbakonam/KMU added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (6:32PM)
Station Tag: Mayiladuturai Junction/MV added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (6:32PM)
Station Tag: Villupuram Junction/VM added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  281 news posts
'விழுப்புரம் - மயிலாடுதுறை - திருச்சி பிரதான ரயில் பாதை, சேலம் - ஒசூர் - பெங்களூரு ரயில் பாதை மின்மயமாக்கப்படும்' என, ரயில்வே பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.ரயில்வே பட்ஜெட்டில், 'நடப்பு ஆண்டில், 1,600 கி.மீ., துாரம் ரயில் பாதை மின்மயமாக்கல் செய்யப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய ரயில் வழித்தடங்களில் ஒன்று, ௨௨௮ கி.மீ., துாரமுடைய, 'மெயின் லைன்' என அழைக்கப்படும், விழுப்புரம் - மயிலாடுதுறை - கும்பகோணம் - தஞ்சாவூர் - திருச்சி ரயில் பாதை.
இதே போல், தமிழகத்தையும், கர்நாடகாவையும் இணைப்பது, ௨௦௦ கி.மீ., துாரமுடைய, சேலம் - ஒசூர் - பெங்களூரு ரயில் பாதை. இந்த இரண்டு பாதைகளிலும், டீசல் இன்ஜின் மூலம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 'இந்த, இரண்டு ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்படும்' என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

3 posts - Fri Feb 26, 2016 - are hidden. Click to open.

1 posts - Sat Feb 27, 2016 - are hidden. Click to open.

6 posts - Sun Feb 28, 2016 - are hidden. Click to open.

1 posts - Mon Feb 29, 2016 - are hidden. Click to open.

2 posts - Tue Mar 01, 2016 - are hidden. Click to open.

8 posts - Thu Mar 03, 2016 - are hidden. Click to open.

2 posts - Fri Mar 04, 2016 - are hidden. Click to open.

2 posts - Sun Mar 06, 2016 - are hidden. Click to open.

1 posts - Mon Mar 07, 2016 - are hidden. Click to open.

1 posts - Tue Mar 08, 2016 - are hidden. Click to open.

4964 views
Mar 09 2016 (17:29)
Hyderabad Karnataka needs a dedicated train to SBC*^~   9622 blog posts   497 correct pred (74% accurate)
Re# 1750640-29            Tags   Past Edits
Sir , Nagercoil to bangalore express is empty. That train has general quota thorough out. If General quota itself is not filled then why are you asking one more train ?
Feb 18 2016 (10:05)  கும்பகோணம் மகாமக விழாவையொட்டி இன்றும், நாளையும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன (www.dailythanthi.com)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 257765     
   Tags   Past Edits
Feb 18 2016 (10:05AM)
Station Tag: Mayiladuturai Junction/MV added by emailconnect2hari/1069947

Feb 18 2016 (10:05AM)
Station Tag: Kumbakonam/KMU added by emailconnect2hari/1069947

Feb 18 2016 (10:05AM)
Station Tag: Thanjavur Junction/TJ added by emailconnect2hari/1069947

Feb 18 2016 (10:05AM)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  281 news posts
கும்பகோணம் மகாமக விழாவையொட்டி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்றும், நாளையும் இயக்கப்படுகிறது.
சிறப்பு ரெயில்கள்
கும்பகோணம் மகாமக விழா கடந்த 13–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 22–ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக திருச்சியில் இருந்தும், தஞ்சை–மயிலாடுதுறை இடையேயும் இன்றும்(வியாழக்கிழமை), நாளையும்(வெள்ளிக்கிழமை) சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகிறது. அந்த ரெயில்கள் விவரம் வருமாறு:–
திருச்சி–மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்(வண்டி எண்:07676) திருச்சியில் இருந்து பிற்பகல் 1.35 மணிக்கு புறப்பட்டு 3.15 மணிக்கு கும்பகோணத்திற்கும், மாலை 4.25 மணிக்கு மயிலாடுதுறைக்கும் சென்று சேரும். இந்த ரெயில் திருவெறும்பூர்,
...
more...
பூதலூர், தஞ்சை, திட்டை, பண்டாரவாடை, சுந்தரபெருமாள்கோவில், கும்பகோணம், ஆடுதுறை, குத்தாலம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
மயிலாடுதுறை–தஞ்சை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்(வண்டி எண்:07681) மயிலாடுதுறையில் அதிகாலை 4.50 மணிக்கு புறப்பட்டு 5.30 மணிக்கு கும்பகோணத்திற்கும், 6.30 மணிக்கு தஞ்சைக்கும் சென்று சேரும். இந்த ரெயில் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், சுந்தரபெருமாள்கோவில், பாபநாசம், பண்டாரவாடை, திட்டை ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
கும்பகோணம்–மயிலாடுதுறை
தஞ்சை–மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்(வண்டி எண்:07682) தஞ்சையில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு 8.05 மணிக்கு கும்பகோணத்திற்கும், 9.15 மணிக்கு மயிலாடுதுறைக்கும் சென்று சேரும். இந்த ரெயில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும். மயிலாடுதுறை–தஞ்சை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்(வண்டி எண்:07685) மயிலாடுதுறையில் இருந்த காலை 9.35 மணிக்கு புறப்பட்டு 10.25 மணிக்கு கும்பகோணத்திற்கும், 11.50 மணிக்கு தஞ்சைக்கும் சென்று சேரும். இந்த ரெயில் அனைத்து ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும்.
தஞ்சை–மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்(வண்டி எண்:07686) தஞ்சையில் இருந்து பிற்பகல் 12.35 மணிக்கு புறப்பட்டு 1.25 மணிக்கு கும்பகோணத்திற்கும், 2.45 மணிக்கு மயிலாடுதுறைக்கும் சென்று சேரும். இந்த ரெயில் பண்டாரவாடை, பாபநாசம், சுந்தரபெருமாள்கோவில், சுவாமிமலை, தாராசுரம், கும்பகோணம், ஆடுதுறை, குத்தாலம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
மயிலாடுதுறை–தஞ்சை எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண்:07689) மயிலாடுதுறையில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு 4.15 மணிக்கு கும்பகோணத்திற்கும், மாலை 5.25 மணிக்கு தஞ்சைக்கும் சென்று சேரும். இந்த ரெயில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.
தஞ்சை–மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண்:07694) தஞ்சையில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு 7.50 மணிக்கு கும்பகோணத்திற்கும், 8.50 மணிக்கு தஞ்சைக்கும் சென்று சேரும். இந்த ரெயில் திட்டை, பசுபதிகோவில், அய்யம்பேட்டை, பண்டாரவாடை, பாபநாசம், சுந்தரபெருமாள்கோவில், சுவாமிமலை, தாராசுரம், கும்பகோணம், ஆடுதுறை, நரசிங்கம்பேட்டை, குத்தாலம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
மயிலாடுதுறை–தஞ்சை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்(வண்டி எண்:07695) மயிலாடுதுறையில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு 10.33 மணிக்கு கும்பகோணத்திற்கும், 11.20 மணிக்கு தஞ்சைக்கும் சென்று சேரும். இந்த ரெயில் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், சுந்தரபெருமாள்கோவில், பாபநாசம், பண்டாரவாடை, திட்டை ஆகிய இடங்களில் நின்று செல்லும். 2 நாட்களும் இதே நேரத்தில் தான் இயக்கப்படும். இந்த சிறப்பு ரெயில்கள் டெமு ரெயில்களாகும். 16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
திருச்சி–மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில்(வண்டி எண்:56824), மயிலாடுதுறை–திருநெல்வேலி பாசஞ்சர் ரெயில்(56821), திருச்சி–மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில்(56812), மயிலாடுதுறை–திருச்சி பாசஞ்சர் ரெயில்(56811), திருநெல்வேலி–மயிலாடுதுறை பாசஞ்சர்ரெயில்(வண்டி எண்:56822), மயிலாடுதுறை–திருச்சி பாசஞ்சர் ரெயில்(வண்டி எண்:56823), திருச்சி–தஞ்சை பாசஞ்சர் ரெயில்(76820), தஞ்சை–திருச்சி பாசஞ்சர் ரெயில்(வண்டி எண்:76821), திருச்சி–தஞ்சை பாசஞ்சர் ரெயில்(76822), தஞ்சை–மயிலாடுதுறை பாசஞ்சர்ரெயில்(வண்டி எண்:76826), மயிலாடுதுறை–தஞ்சை பாசஞ்சர் ரெயில்(வண்டி எண்:76825), தஞ்சை–திருச்சி பாசஞ்சர் ரெயில்(76829) ஆகிய ரெயில்களில் வருகிற 24–ந்தேதி வரை கூடுதலாக 4 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், ஒரு சரக்கு பெட்டியும் இணைக்கப்பட்டிருக்கும்.
மேற்கண்ட தகவல் திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Feb 11 2016 (10:38)  திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் என்ஜின் இல்லாமல் நின்ற மயிலாடுதுறை இணைப்பு ரெயில் (www.dailythanthi.com)
back to top
Other NewsSR/Southern  -  

News Entry# 256858     
   Tags   Past Edits
Feb 11 2016 (10:38AM)
Station Tag: Mayiladuturai Junction/MV added by emailconnect2hari/1069947

Feb 11 2016 (10:38AM)
Station Tag: Dindigul Junction/DG added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  281 news posts
திண்டுக்கல்
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் என்ஜின் இல்லாமல் மயிலாடுதுறை இணைப்பு பாசஞ்சர் ரெயில் ஒரு மணி நேரம் நின்றது. இதனால் பயணிகள் பரிதவித்தனர்.
என்ஜின் இல்லை
நெல்லையில் இருந்து மதுரை, திண்டுக்கல் வழியாக ஈரோடு, மயிலாடுதுறைக்கு இணைப்பு பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரெயில் காலை 11 மணி 15 நிமிடத்துக்கு திண்டுக்கல் வருவது வழக்கம். அங்கிருந்து ஈரோட்டுக்கும், மயிலாடுதுறைக்கும் தனித்தனியாக பிரிந்து செல்லும். ஏற்கனவே நெல்லையில் இருந்து வரும் என்ஜின் ஈரோடு செல்லும் ரெயிலையும், திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து புதிதாக பொருத்தப்படும் என்ஜின் மயிலாடுதுறை ரெயிலையும்
...
more...
இழுத்து செல்லும். அந்த ரெயில்கள் 11.50 மணிக்கு புறப்பட வேண்டும்.
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல நெல்லையில் இருந்து அந்த பாசஞ்சர் ரெயில் திண்டுக்கல் வந்தது. ஏற்கனவே வந்த என்ஜினுடன் ஈரோடு ரெயில் புறப்பட தயாராக நின்றது. திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த என்ஜினை மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயிலுடன் இணைக்க அதிகாரிகள் முயன்றனர்.
இதற்கிடையே புதன்கிழமைதோறும் நெல்லையில் இருந்து மும்பை நோக்கி இயக்கப்படும் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரையை கடந்து கொடைரோடு ரெயில் நிலையம் வந்தது. அங்கு திடீரென அந்த ரெயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால், ரெயில் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டது.
ஒரு மணி நேரம் தாமதம்
என்ஜினை சரி செய்ய முடியாமல் ரெயில்வே ஊழியர்கள் திணறினர். பிறகு மயிலாடுதுறை ரெயிலில் பொருத்த வேண்டிய ரெயில் என்ஜினை தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொருத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி அந்த ரெயில் என்ஜின் திண்டுக்கல்லில் இருந்து கொடைரோடு கொண்டு வரப்பட்டது. பின்பு தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலுடன் அந்த என்ஜினை பொருத்தினர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக அந்த ரெயில் புறப்பட்டது.
இதற்கிடையே நெல்லை–ஈரோடு பாசஞ்சர் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு சென்றது. மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயிலில் பொருத்த வேண்டிய என்ஜின் தாதர் எக்ஸ்பிரசில் பொருத்தப்பட்டதால் 11.50 மணியை தாண்டியும் அந்த ரெயில் அங்கேயே நிறுத்திவைக்கப்பட்டது. இதனால் பயணிகள் ரெயிலில் இருந்து கீழே இறங்கி காத்திருந்தனர்.
இதற்கிடையே திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நின்ற சரக்கு ரெயிலின் என்ஜினை கழட்டி மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயிலில் பொருத்தினர். பிறகு சுமார் 1 மணி நேரம் தாமதமாக அந்த ரெயில் புறப்பட்டது. தாதர் எக்ஸ்பிரஸ், நெல்லை–மயிலாடுதுறை பாசஞ்சர் ஆகிய ரெயில்கள் தாமதமானதால், அந்த ரெயில்களில் இருந்த பயணிகள் பரிதவித்தனர்.
Feb 09 2016 (20:55)  S.Railways announces special trains for Mahamaham festival (www.business-standard.com)
back to top
New/Special TrainsSER/South Eastern  -  

News Entry# 256637     
   Tags   Past Edits
Feb 09 2016 (8:55PM)
Station Tag: Mayiladuturai Junction/MV added by Mushfiq Khalid/726422

Posted by: mushfiquekhalid^~  159 news posts
The Southern Railways today announced special trains to Mayiladuthurai from Thanjavur and Tiruchirapalli from February to clear the extra rush of passengers expected in view of the Feb 22 Mahamaham festival, held once in 12 years here.
Mela charges as applicable shall be levied on the tickets for travel by these trains, to be run on February 13, 14, 15 and 16, a Southern Railway release said.
Lakhs of pilgrims are expected to throng the town to take a holy dip in the Mahamaham Tank here, from February 13 to February
...
more...
22.
Dec 30 2015 (12:01)  மகாமக விழா நாட்களில் மயிலாடுதுறை- தஞ்சை இடையே 22 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு (www.dinakaran.com)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 252392     
   Tags   Past Edits
Dec 30 2015 (12:01PM)
Station Tag: Kumbakonam/KMU added by emailconnect2hari/1069947

Dec 30 2015 (12:01PM)
Station Tag: Mayiladuturai Junction/MV added by emailconnect2hari/1069947

Dec 30 2015 (12:01PM)
Station Tag: Thanjavur Junction/TJ added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  281 news posts
கும்பகோணம், : மகாமக விழாவின் போது மயிலாடுதுறை- தஞ்சைக்கு இடையே ஒரு நாளைக்கு 22 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாமக பெருவிழா தொடர்பாக கும்பகோணம் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஏ.கே.அகர்வால், தஞ்சை கலெக்டர் சுப்பையன் தலைமையில் வருவாய்துறை, ரயில்வே துறை உயர்அதிகாரிகள் மற்றும் ரயில்வே உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மகாமக விழாவை முன்னிட்டு ரயில் மூலம் வருகை தரும் பயணிகளுக்கு மேம்பாட்டு வசதிகள் செய்து தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கும்பகோணம் ரயில் நிலைய நடைபாலத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து 2, 3வது நடைமேடையை ஆய்வு செய்து அதை நீட்டிப்பது தொடர்பாகவும், மாதுளம்பேட்டை ரயில்வே கேட் வரை உள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் ரயில் நிலையத்திலும், அதை சுற்றுப்புற பகுதிகளிலும் உள்ள ரயில்வேதுறைக்கு சொந்தமான இடங்களை பார்வையிட்டனர். இதையடுத்து கும்பகோணம் சுப்பையன் அளித்த பேட்டி:
கும்பகோணம் நகரில் நடைபெற உள்ள மகாமக பெருவிழா தொடர்பாக ரயில்வே பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்வது குறித்தும், ரயில்
...
more...
நிலையத்தில் வருகை தரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ரயில்வே துறை, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குறிப்பாக ரயில் நிலையத்தில் செய்யப்படவேண்டிய பணிகள் மற்றும் பயணிகளுக்கு உரிய வசதிகள் குறித்த பணிகளை உடனடியாக தொடங்கி 1மாதகாலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் மயிலாடுதுறை- தஞ்சைக்கு இடையே ஒரு நாளைக்கு 22 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு அதன் மூலம் சுமார் 22 ஆயிரம் பயணிகளை பாதுகாப்பாக கொண்டு விட ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.கும்பகோணத்தில் நடந்து வரும் அனைத்து பணிகளும் ஜன.15ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு நகரம் தயாராக இருக்கும் என்றார். திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஏ.கே.அகர்வால் மற்றும் கும்பகோணம் சப்-கலெக்டர் கோவிந்தராவ், மற்றும் மாவட்ட எஸ்பி மயில்வாகனன், ரயில்வே எஸ்பி ஆனிவிஜயா உடனிருந்தனர்.
Page#    Showing 1 to 18 of 18 News Items  

Scroll to Top
Scroll to Bottom


Go to Desktop site