Full Site Search  
Sun Jun 25, 2017 05:53:34 IST
PostPostPost Stn TipPost Stn TipUpload Stn PicUpload Stn PicAdvanced Search
Large Station Board;
Large Station Board;
no description available

GOC/Ponmalai Golden Rock (2 PFs)
பொன்மலை கோல்டன் ராக்     पोन्मलै गोल्डन रॉक
[Ponmalaipatti]

Track: Triple Electric-Line

Type of Station: Regular
Number of Platforms: 2
Number of Halting Trains: 34
Number of Originating Trains: 0
Number of Terminating Trains: 0
Ponmalai Railway Station Road Ponmalaipatti ,Tiruchirapalli 620004
State: Tamil Nadu
Elevation: 84 m above sea level
Zone: SR/Southern
Division: Tiruchchirappalli
2 Travel Tips
No Recent News for GOC/Ponmalai Golden Rock
Nearby Stations in the News

Rating: 3.3/5 (16 votes)
cleanliness - good (2)
porters/escalators - average (2)
food - average (2)
transportation - good (2)
lodging - good (2)
railfanning - good (2)
sightseeing - good (2)
safety - average (2)

Nearby Stations

MCJ/Manjattidal 2 km     TPJ/Tiruchchirappalli Junction 3 km     TPE/Tiruchchirappalli Palakkarai 3 km     TP/Tiruchchirappalli Fort 4 km     TPTN/Tiruchchirappalli Town 6 km     TRB/Tiruverumbur 7 km     SRGM/Srirangam 9 km     UKV/Uttamarkovil 12 km     TOM/Tondamanpatti 12 km     PUG/Punggudi 12 km    

Station News

Page#    Showing 1 to 17 of 17 News Items  
May 21 2017 (13:50)  விழுப்புரம் - திருச்சி இருவழி பாதை வரும் 23 முதல் ரயில்கள் இயக்கம் (tnrailfans.blogspot.in)
back to top
New Facilities/TechnologySR/Southern  -  

News Entry# 303113     
   Tags   Past Edits
May 21 2017 (13:50)
Station Tag: Ponmalai Golden Rock/GOC added by sGs*^~/41440

Posted by: sGs*^~  248 news posts
விழுப்புரம் - திருச்சி இடையே இருவழிப் பாதை பணிகள் முடிந்து, வரும் 23ம் தேதியில் இருந்து, ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தென் மாவட்ட பயணியரின் நலன் கருதி, சென்னை - திண்டுக்கல் இடையே, இரண்டாவது அகல ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக, செங்கல்பட்டு - விழுப்புரம் இடையே இருவழிப் பாதை அமைக்கப்பட்டு, ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அடுத்தகட்டமாக, விழுப்புரம் - திண்டுக்கல் இடையே, 281 கி.மீ.,க்கு, புதிய இருவழி ரயில் பாதை அமைக்கும் பணியை, 2011ல், ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம் துவக்கியது. திருச்சி ரயில்வே கோட்டத்தில், விழுப்புரம் - திருச்சி இடையிலான, 128 கி.மீ.,க்கு, ஏழு பிரிவுகளாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இரண்டு
...
more...
மார்க்கம்
நிறைவாக, வாளாடி - திருச்சி இடையே, 20 கி.மீ., துார பணிகள் முடிந்து, வரும் 23ம் தேதியிலிருந்து, புதிய இருவழிப் பாதையில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்காக, அன்று ஒரு நாள் மட்டும், ரயில்கள் மாற்றுப் பாதையிலும், நேரம் நீட்டிப்பு செய்தும் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:இதன் மூலம், சென்னையில் இருந்து, திருச்சி வரை, புதிய இருவழிப் பாதை வழியாக, இரண்டு மார்க்கத்திலும் எதிரெதிர் திசைகளில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதற்காக, நாளை மறுநாள் காலை, 10:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை, இறுதிக்கட்ட பணிகள் நடப்பதால், இந்த நேரத்தில் செல்லும் ரயில்கள் மட்டும் அன்று ஒரு நாள், பாதை மாற்றியும், நேரம் நீட்டிப்பு செய்தும் இயக்கப்பட உள்ளன.
மற்ற ரயில்கள் அனைத்தும் வழக்கமான நேரத்தில் இயக்கப்படுகின்றன. அன்று, மதுரை - சென்னை செல்லும் வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சியில் இருந்து மயிலாடு துறை, சிதம்பரம், கடலுார், விழுப்புரம் மார்க்கமாக செல்லும்.
மாற்றுப்பாதை
சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், கரூர், சேலம், விருத்தாசலம் மார்க்கமாகவும்; குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், விருத்தாசலம், சேலம், கரூர் மார்க்கமாகவும் மாற்றுப் பாதையில் இயங்கும். அன்றைய தினம், திருச்சியில் இருந்து சென்னை வழியாக ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சியில் மாலை, 4:00 மணிக்கு பதிலாக இரவு, 7:00 மணிக்கு புறப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
News courtesy - Dinamalar
Mar 31 2017 (11:04)  3 சுரங்கப்பாதைகள் அமைப்பு: இறுதிக்கட்டத்தில் தஞ்சை– திருச்சி இரட்டை ரெயில்பாதை பணிகள் (www.dailythanthi.com)
back to top
Other NewsSR/Southern  -  

News Entry# 298186     
   Tags   Past Edits
Mar 31 2017 (11:04)
Station Tag: Budalur/BAL added by emailconnect2hari/1069947

Mar 31 2017 (11:04)
Station Tag: Tiruverumbur/TRB added by emailconnect2hari/1069947

Mar 31 2017 (11:04)
Station Tag: Ponmalai Golden Rock/GOC added by emailconnect2hari/1069947

Mar 31 2017 (11:04)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by emailconnect2hari/1069947

Mar 31 2017 (11:04)
Station Tag: Thanjavur Junction/TJ added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  302 news posts
தஞ்சை– திருச்சி இரட்டை ரெயில்பாதை பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதற்காக 103 பெரிய, சிறிய பாலங்கள் மற்றும் 3 சுரங்கப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மார்ச் 31, 04:15 AM
தஞ்சாவூர்,
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களுள் தஞ்சையும் ஒன்று. இந்த தஞ்சை வழியாகத்தான் முன்பு அதிக அளவில் தென் மாவட்டங்களுக்கும், சென்னைக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. நாளடைவில் விழுப்புரம்–திருச்சி இடையேயான ரெயில் பாதை தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த பின்னர் அந்த வழியாக ரெயில்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது தஞ்சை வழியாக 29–க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயிலும், 15–க்கும்
...
more...
மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
தஞ்சை, மன்னார்குடியில் இருந்து சென்னைக்கு கும்பகோணம் வழியாக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சுற்றுலா தலங்களான வேளாங்கண்ணி, நாகூர், கோவில் நகரமான கும்பகோணத்திற்கும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். தஞ்சை– திருச்சி இடையே ஒருவழிப்பாதை என்பதால் ஒரு ரெயில் வந்தால் எதிர்திசையில் வரும் மற்ற ரெயில் ஏதாவது ரெயில் நிலையத்தில் காத்திருந்து செல்ல வேண்டி உள்ளது. சில நேரங்களில் ரெயில்கள் 1 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைகிறார்கள். எனவே தஞ்சை– திருச்சி இடையே இருவழிப்பாதை திட்டத்தை தொடங்க வேண்டும் என பொதுமக்கள், ரெயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கத்தினர் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.
இரட்டை ரெயில்பாதை
இதையடுத்து மத்திய அரசு தஞ்சை– திருச்சி இடையே இருவழிப்பாதை திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. கடந்த 2011–ம் ஆண்டு பட்ஜெட்டில் தஞ்சை– திருச்சி இடையே பொன்மலை வரை 49 கிலோ மீட்டர் தூர ரெயில் பாதையை இருவழிப்பாதையாக மாற்ற முதல்கட்டமாக ரூ.190 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருவழிப்பாதை பணிகள் முழு வீச்சில் தொடங்கின. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.450 கோடியாகும்.
இந்த இருவழிப்பாதை பணிகள் தஞ்சை– திருச்சி இடையே இடதுபுறமாக ஏற்கனவே மீட்டர்கேஜ் ரெயில்பாதை இருந்த தடத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக மீட்டர்கேஜ் பாதையில் இருந்த தண்டவாளங்கள், ஜல்லிக்கற்கள் அகற்றப்பட்டு புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த புதிய வழித்தடத்தில் 13 பெரிய பாலங்கள், 90 சிறிய பாலங்கள், 3 இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டன.
ரெயில் நிலையம் விரிவாக்கம்
இந்த திட்டத்துக்காக பூதலூர், சோளகம்பட்டி, திருச்சி திருவெறும்பூர், பொன்மலை ஆகிய ரெயில் நிலையங்கள் விரிவாக்கம் செய்யும் பணிகளும் நடைபெற்றன. கடந்த ஆண்டு நடந்த கும்பகோணம் மகாமக திருவிழாவிற்கு முன்னதாக பணிகள் முடிவடையும் வகையில் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பணிகள் முடிக்கப்படவில்லை. தற்போது இரட்டை ரெயில்பாதை பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
90 சதவீதத்துக்கும் மேல் பணிகள் நிறைவடைந்து விட்டன. தற்போது தஞ்சை ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள சிவாஜிநகர் பகுதி வரை சிலீப்பர் கட்டைகள் பொருத்தப்பட்டு தண்டவாளமும் அமைக்கப்பட்டுள்ளது. இடையில் ரெயில்வே பாலம் உள்ள ஒரு சில இடங்களில் மட்டும் தண்டவாளங்கள் அமைக்கப்பட வேண்டி உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் இன்னும் ஓரிரு மாதத்தில் முடிவடையும் என ரெயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
English:
16 trees were cut down at Ponmalai (Golden Rock) Railway grounds at Trichy for constructing a temporary helipad for the election campaign of Tamil Nadu Chief Minister Jayalalitha. Trichy divisional railway authorities have decided to impose a fine on the AIADMK party for their unruly act.
Tamil :
திருச்சியில் இன்று பிரசாரம் செய்ய வரும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின், ஹெலிகாப்டர் தரையிறங்க, 'ஹெலிபேடு' அமைக்க, 16 மரங்களை வெட்டியதை
...
more...
கண்டித்து, திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம், அ.தி.மு.க.,வுக்கு, அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.
திருச்சி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளரும் தொகுதியின் எம்.பி.,யுமான குமாரை ஆதரித்து பிரசாரம் செய்ய, முதல்வர் ஜெயலலிதா, இன்று திருச்சி வருகிறார். பொன்மலை, ரயில்வே மைதானத்தில், மாலை 3:00 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.இந்த இடத்தில் ஹெலிபேடு அமைக்க, அங்கு நின்றிருந்த 15 யூக்கலிப்டஸ் மரம் மற்றும் ஒரு வேப்ப மரம் வேரோடு அகற்றப்பட்டன. இதை அறிந்த ரயில்வே நிர்வாகம், அ.தி.மு.க.,வுக்கு அபராதம் விதித்துள்ளது.
ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஹெலிபேடு அமைக்க, 16 மரங்களை அகற்றியது உண்மை என தெரிய வந்துள்ளது. சேதம் மதிப்பு கணக்கிடப்படவில்லை. ஜெ., கூட்டம் முடிந்த பின், சேத மதிப்பு கணக்கிடப்பட்டு, அக்கட்சிக்கு அபராதம் விதிக்கப்படும். 'டிபாசிட்' தொகையாக வசூலிக்கப்பட்டுள்ள, ஏழு லட்சம் ரூபாயில் அபராதத்தொகை கழிக்கப்பட்டு, மீத தொகை மட்டும் வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
திருச்சி தொகுதியில், தி.மு.க., சார்பில் அன்பழகன், காங்கிரஸ் சார்பில் சாருபாலா தொண்டைமான், தே.மு.தி.க., சார்பில் விஜயகுமார், மார்க்சிஸ்ட் சார்பில் ஸ்ரீதரன்
போட்டியிடுகின்றனர்.
Mar 07 2014 (09:46)  Coach factory at Kolar by March 2018 - The Hindu (www.thehindu.com)
back to top
Commentary/Human Interest

News Entry# 170686     
   Tags   Past Edits
Mar 07 2014 (9:46AM)
Station Tag: Ponmalai Golden Rock/GOC added by rdb**/69261

Mar 07 2014 (9:46AM)
Station Tag: Kolar/KQZ added by rdb**/69261

Posted by: rdb*^  130034 news posts
A new coach factory to manufacture stainless steel coaches will come up at Kolar near Bangalore with the project cost to be shared by the Ministry of Railways and Karnataka government.
The Karnataka government has provided land free of cost for the new factory which will manufacture 500 stainless steel coaches per annum, Alok Johri, Member (Mechanical), Railway Board, New Delhi said here on Wednesday.
A MoU has been signed for the upcoming project costing Rs. 1,460 crore, Mr. Johri told reporters at the Golden Rock Railway Workshop after flagging of the fourth
...
more...
oil-fired steam locomotive meant for the Nilgiri Mountain Railway.
Stating that the State government would also bear the cost escalation, Mr. Johri said the factory would become fully functional by March 2018.
He said the Railway was manufacturing around 4,000 coaches per year through its coach manufacturing units at Kapurthala in Punjab, Perambur in Chennai and Rae Bareilly in Uttar Pradesh.
The number of coaches manufactured at the Rae Bareilly plant would increase from 150 at present to 300 next year. It would touch 1,000 coaches in a couple of years, he said.
Regarding the status of the new coach factory at Palakkad in Kerala, Mr. Johri said the Railway had purchased land from the State government at a cost of Rs. 34 crore for the project.
Owing to financial constraints, the factory would be set up under the PPP (Public Private Partnership) mode, he said adding that the Railway had received one offer. He said the Railway had focussed on fire alarm system and planning for better exit for coaches in the wake of instances of fire accidents on trains. In addition to introducing fire retardant materials, he said the Railway had plans to redesign the doors.
There was a relook at emergency windows and designs had been worked out in this regard, Mr. Johri said.
Feb 26 2014 (08:02)  Cubicle system in female wards (www.thehindu.com)
back to top
Commentary/Human InterestSR/Southern  -  

News Entry# 169590     
   Tags   Past Edits
Feb 26 2014 (8:02AM)
Station Tag: Ponmalai Golden Rock/GOC added by rdb**/69261

Posted by: rdb*^  130034 news posts
In order to ensure privacy of patients, a cubicle system using curtains has been introduced in the female general wards in the Railway Hospital at Ponmalai here. The system has been introduced at a cost of Rs. 3.9 lakhs. Each bed would be provided with curtains that could be pulled whenever privacy was required. The project was funded by the Chief Workshop Manager, Golden Rock Railway Workshop, a railway press release issued here said.
Page#    Showing 1 to 17 of 17 News Items  

Scroll to Top
Scroll to Bottom


Go to Desktop site
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.