Full Site Search  
Tue Jan 17, 2017 22:47:14 IST
PostPostPost Stn TipPost Stn TipUpload Stn PicUpload Stn PicAdvanced Search

TJ/Thanjavur Junction (5 PFs)
தஞ்சாவூர் சந்திப்பு     तंजावुर जंक्शन
[Tanjore]

Track: Single Diesel-Line

Type of Station: Junction
Number of Platforms: 5
Number of Halting Trains: 46
Number of Originating Trains: 8
Number of Terminating Trains: 8
Jn.Point TPJ/MV(KMU)/TVR(NMJ), Gandhiji Road,Thanjavur-1
State: Tamil Nadu
Elevation: 63 m above sea level
Zone: SR/Southern
Division: Tiruchchirappalli
6 Travel Tips
No Recent News for TJ/Thanjavur Junction
Nearby Stations in the News

Rating: 4.4/5 (144 votes)
cleanliness - excellent (19)
porters/escalators - good (16)
food - good (18)
transportation - excellent (19)
lodging - excellent (16)
railfanning - good (19)
sightseeing - excellent (18)
safety - good (19)

Nearby Stations

MAV/Mariammankovil 7 km     ALK/Alakkudi 9 km     TT/Titte 10 km     KXO/Kudikadu 11 km     SMM/Saliyamangalam 15 km     PVL/Pasupatikovil 15 km     BAL/Budalur 17 km     AZP/Ayyampet 18 km     AMT/Ammapet 20 km     AYN/Aiyanapuram 22 km    

Station News

Page#    Showing 1 to 20 of 47 News Items  next>>
Dec 22 2016 (10:30)  ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக சாலை அமைக்கும் பணி மும்முரம் (www.dailythanthi.com)
back to top
New Facilities/TechnologySR/Southern  -  

News Entry# 289340     
   Tags   Past Edits
Dec 22 2016 (10:30AM)
Station Tag: Thanjavur Junction/TJ added by emailconnect2hari/1069947

Dec 22 2016 (10:30AM)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  250 news posts
தஞ்சாவூர்,
ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இருவழி ரெயில்பாதை
தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களுள் ஒன்றாக தஞ்சை விளங்கி வருகிறது. தஞ்சை வழியாகத்தான் முன்பு அதிக அளவில் தென் மாவட்டங்களுக்கும், சென்னைக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. நாளடைவில் விழுப்புரம்- திருச்சி இடையிலான ரெயில்பாதை தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த பின்னர் அந்த வழியாக ரெயில்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது
...
more...
தஞ்சை வழியாக சென்னைக்கும், தென்மாவட்டங்களுக்கும் குறைந்த அளவே ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சை- திருச்சி இடையே ஒருவழிப்பாதை என்பதால் ஒரு ரெயில் வந்தால் எதிர்திசையில் வரும் மற்ற ரெயில் ஏதாவது ரெயில் நிலையத்தில் காத்திருக்க வேண்டி உள்ளது. சில நேரங்களில் ரெயில்கள் 1 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைகிறார்கள்.
எனவே தஞ்சை- திருச்சி இடையே இருவழிப்பாதை திட்டத்தை தொடங்க வேண்டும் என பொதுமக்கள், ரெயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கத்தினர் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இதையடுத்து மத்திய அரசு தஞ்சை- திருச்சி அருகே உள்ள பொன்மலை வரை இடையே 49 கிலோமீட்டர் தூரத்திற்கு இருவழி ரெயில்பாதை திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து முதல்கட்டமாக ரூ.190 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது இருவழி ரெயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சாலை அமைக்கும் பணி
இந்த புதிய வழித்தடத்தில் 13 பெரிய பாலங்கள், 90 சிறிய பாலங்கள், 3 இடங்களில் சுரங்கப்பாதைகள் கட்டப்படுகின்றன.
தஞ்சை சிவாஜிநகரில் ரெயில்வே சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. அந்த சுரங்கப்பாதை வழியாக பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொக்லின் எந்திரம் மூலம் முட்புதர்கள் அகற்றப்பட்டு மணல், குப்பை மேடுகளை அகற்றி சமப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இருவழி ரெயில்பாதை அமைக்கும் பணியை துரிதமாக முடிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே மீட்டர்கேஜ் பாதையாக இருந்தபோது தஞ்சை வழியாக இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களையும் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Jul 28 2016 (14:37)  காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை (www.dinamani.com)
back to top
Other NewsSR/Southern  -  

News Entry# 275167     
   Tags   Past Edits
Jul 28 2016 (2:37PM)
Station Tag: Tiruturaipundi Junction/TTP added by gvsureshmng/670090

Jul 28 2016 (2:37PM)
Station Tag: Mannargudi/MQ added by gvsureshmng/670090

Jul 28 2016 (2:37PM)
Station Tag: Karaikkudi Junction/KKDI added by gvsureshmng/670090

Jul 28 2016 (2:37PM)
Station Tag: Pattukottai/PKT added by gvsureshmng/670090

Jul 28 2016 (2:37PM)
Station Tag: Thanjavur Junction/TJ added by gvsureshmng/670090

Posted by: gvsureshmng  7 news posts
காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பட்டுக்கோட்டை சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கூட்டத்தில், பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் வழித்தடத்தில் புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்வதற்காக ஆத்திக்கோட்டை, பொன்னவராயன்கோட்டை ஆகிய கிராமங்களைத் தத்தெடுப்பது.
உள்ளாட்சித் துறை, பொது சுகாதாரத் துறை மூலம் டெங்கு கட்டுப்பாடு முன்னேற்பாட்டுப் பணிக்காக பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த கிராமங்களில்
...
more...
உடனடியாக ஒட்டுமொத்த தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் பகுதிகளில் போதை சாக்லெட்டுகள், தரமற்ற குளிர்பானங்கள், கலப்பட தேயிலைத்தூள், கார்பைட் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டுள்ள பழ வகைகளைக் கண்டறிந்து அழிக்க வேண்டும்.
பட்டுக்கோட்டை நகரில் ஒலிமாசினை தடுக்க வாணவேடிக்கைகள், வாகனங்களின் காற்று ஒலிப்பான்கள், கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு சங்கத் தலைவர் ஏ.ஆர். வீராசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஆர். வேணுகோபாலன், ஜி. ஜெயசீலன், ரெஜினால்ட் செல்வகுமார், வ. விவேகானந்தம், கந்த. கல்யாணசுந்தரம், மா. வீரபத்திரன், லாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Apr 08 2016 (10:11)  எர்ணாகுளம், வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு (tamil.oneindia.com)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 263895     
   Tags   Past Edits
Apr 08 2016 (10:11AM)
Station Tag: Tirunelveli Junction/TEN added by emailconnect2hari/1069947

Apr 08 2016 (10:11AM)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by emailconnect2hari/1069947

Apr 08 2016 (10:11AM)
Station Tag: Nagappattinam Junction/NGT added by emailconnect2hari/1069947

Apr 08 2016 (10:11AM)
Station Tag: Thanjavur Junction/TJ added by emailconnect2hari/1069947

Apr 08 2016 (10:11AM)
Station Tag: Thiruvarur Junction/TVR added by emailconnect2hari/1069947

Apr 08 2016 (10:11AM)
Station Tag: Velankanni/VLNK added by emailconnect2hari/1069947

Apr 08 2016 (10:11AM)
Station Tag: Ernakulam Junction (South)/ERS added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  250 news posts
சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளம், ஹெளரா, திருநெல்வேலில் இருந்து எழும்பூர், எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் சிறப்பு ரயில் ரயில் எண் 06005: ஏப்ரல் 29-ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். ரயில் எண் 06006: மே 1-ஆம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து இரவு 7 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒட்டப்பள்ளம், திருச்சூர், ஆலுவா ரயில் நிலையங்களில் நின்று செல்லும். திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ரயில் எண் 06002: மே 1-ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரயில் வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், திருச்சி, விருதாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை சென்ட்ரல் - ஹெளரா குளிர்சாதன சிறப்பு ரயில் ரயில் எண் 00842: ஏப்ரல் 17-ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5.10 மணிக்குப் புறப்பட்டு,...
more...
மறுநாள் மாலை 6.30 மணிக்கு ஹெளரா சென்றடையும். இந்த ரயில் நெல்லூர், விஜயவாடா, ராஜமுந்தரி, துவ்வாடா, விசாகப்பட்டினம், பிரம்மபூர், குர்தா சாலை, புவனேசுவரம், கட்டாக், பாத்ரக், காரக்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில் ரயில் எண் 06016: ஏப்ரல் 14-ஆம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து இரவு 8.10 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 9.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். ரயில் எண் 06015: ஏப்ரல் 15-ஆம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். இந்த ரயில் ஆலுவா, திருச்சூர், ஒட்டப்பள்ளம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.
Read more at: click here
Mar 11 2016 (10:13)  தஞ்சை-திருச்சி இரட்டை ரெயில்பாதை பணி அடுத்த ஆண்டு முடிவடையும் தென்னக ரெயில்வே பொது மேலாளர் பேட்டி (www.dailythanthi.com)
back to top
Rail BudgetSR/Southern  -  

News Entry# 260858   Blog Entry# 1763502     
   Tags   Past Edits
Mar 11 2016 (10:13AM)
Station Tag: Nagappattinam Junction/NGT added by emailconnect2hari/1069947

Mar 11 2016 (10:13AM)
Station Tag: Karaikal/KIK added by emailconnect2hari/1069947

Mar 11 2016 (10:13AM)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by emailconnect2hari/1069947

Mar 11 2016 (10:13AM)
Station Tag: Thanjavur Junction/TJ added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  250 news posts
தஞ்சை- திருச்சி இரட்டை ரெயில்பாதை பணி அடுத்த ஆண்டு முடிவடையும் என்று தென்னக ரெயில்வே பொது மேலாளர் கூறினார்.
ஆய்வு
தென்னக ரெயில்வே பொது மேலாளர் வசிஸ்டாஜோரி நேற்று மயிலாடுதுறையில் இருந்து திருச்சிவரை உள்ள ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்வே வழித்தடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் தஞ்சை ரெயில் நிலையத்திலும் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
ரெயில் நிலையத்தில் உள்ள தங்கும் விடுதி, நடைமேடைகள், பயணிகள் ஓய்வெடுக்கும் அறை ஆகிய இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் ரெயில் நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சை-
...
more...
திருச்சி இரட்டை ரெயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு (2017) ஏப்ரல் மாதத்துக்குள் முடிவுடையும். திருச்சி- காரைக்கால் மின்மயமாக்கல் பணி இப்போதைக்கு இல்லை. தஞ்சையில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரெயில் இயக்குவது குறித்து எம்.பி. உள்பட பலர் வலியுறுத்தி உள்ளனர். அது சாத்தியமா? என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பணிகள் முடிவு
தஞ்சை- அரியலூர் புதிய ரெயில்பாதை அமைப்பதற்கான ஆய்வுபணிகள் முடிவடைந்துள்ளன. இதற்கான நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்படவில்லை. தஞ்சை ரெயில் நிலையத்தில் நன்கொடையாளர்கள் கிடைத்தால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்வசதி ஏற்படுத்தப்படும். திருச்சி- திருநெல்வேலி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அது குறித்தும் ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மிட்டல், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் அகர்வால், தஞ்சை ரெயில் நிலைய மேலாளர் சம்பத் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

5084 views
Mar 11 2016 (10:23)
VIDHU~   210 blog posts   1 correct pred (100% accurate)
Re# 1763502-1            Tags   Past Edits
HOW MANY TRAINS WILL BE EXTEND FROM TRICHY???? IS TRICHY OFFICERS ARE TAKING ANY DECISIONS???

5065 views
Mar 11 2016 (10:30)
emailconnect2hari   700 blog posts   1 correct pred (20% accurate)
Re# 1763502-2            Tags   Past Edits
Trichy to Thirunelveli extension is long pending. Trichy-Thanjavur people are asking to extend till trichy. Nagercoil-Trivandrum people are asking to extend till TVC. Which side SR will extend this train. If its extend till Thanjavur or Nagapattinam, Southern districts will connect with Delta Districts.

8977 views
Mar 11 2016 (10:43)
KK▶vs◀Sanga   15648 blog posts   4382 correct pred (85% accurate)
Re# 1763502-3            Tags   Past Edits
Translation please?

Mar 11 2016 (12:02)
VIDHU~   210 blog posts   1 correct pred (100% accurate)
Re# 1763502-4            Tags   Past Edits
TANJORE PEOPLE ASKING TRICHY TIRUNELVELI INTERCITY EXPRESS TO EXTEND TILL TANJORE
Mar 11 2016 (10:11)  இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும் தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம் கோரிக்கை (www.dailythanthi.com)
back to top
Other NewsSR/Southern  -  

News Entry# 260857     
   Tags   Past Edits
Mar 11 2016 (10:11AM)
Station Tag: Velankanni/VLNK added by emailconnect2hari/1069947

Mar 11 2016 (10:11AM)
Station Tag: Tirunelveli Junction/TEN added by emailconnect2hari/1069947

Mar 11 2016 (10:11AM)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by emailconnect2hari/1069947

Mar 11 2016 (10:11AM)
Station Tag: Thanjavur Junction/TJ added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  250 news posts
இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்ரெயிலை தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பரசுராமன் எம்.பி.
தஞ்சை ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தென்னக ரெயில்வே பொது மேலாளர் வசிஸ்டாஜோரியிடம், பரசுராமன் எம்.பி. சார்பில், ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் டி.கே.ஜெயராமன் கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
திருச்சியில் இருந்து திருநெல்வேலி வரை இயக்கப்படும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும். திருச்சியில் இருந்து ஹவுரா வரை இயக்கப்படும் அதிவிரைவு வண்டியை தஞ்சை, திருவாரூர், நாகை வழியாக வேளாங்கண்ணி வரை இயக்க வேண்டும்.
...
more...
திருச்சியில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படும் அதிவிரைவு ரெயிலை தஞ்சை வரை இயக்க வேண்டும். விழுப்புரம்- புருளியா வார விரைவு ரெயில் மற்றும், விழுப்புரம்- காரக்பூர் வார அதிவிரைவு ரெயிலை கும்பகோணம் வழியாக தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
பயணிகள் உபயோகிப்பாளர் சங்கம்
இதே போல் தஞ்சை- திருச்சி ரெயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்க தலைவர் அயனாபுரம் நடராஜன், சட்ட ஆலோசகர் வக்கீல் ஜீவக்குமார் ஆகியோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தஞ்சையில் இருந்து சென்னைக்கு அதிவிரைவு ரெயில் இயக்க வேண்டும். திருச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் அதிவிரைவு ரெயிலை தஞ்சையில் இருந்து இயக்க வேண்டும். தஞ்சையில் இருந்து கன்னியாகுமரிக்கு புதிய ரெயில் விட வேண்டும்.
திருச்சியில் இருந்து திருநெல்வேலி வரை இயக்கப்படும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும். திருச்சியில் இருந்து தஞ்சை வரை சனிக்கிழமை தோறும் இயக்கப்படும் பயணிகள் ரெயிலை தினமும் இயக்க வேண்டும். தஞ்சையில் இருந்து இரவு நேரத்தில் சென்னை செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் பகல் நேரத்தில் தஞ்சையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயிலை தஞ்சையில் இருந்து திருச்சி, கரூர், நாமக்கல் வழியாக சேலம் வரை இயக்க வேண்டும். திருச்சியில் இருந்து ஹவுரா வரை செல்லும் ரெயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Feb 26 2016 (18:32)  விழுப்புரம் - திருச்சி; சேலம் - பெங்களூரு மின்மயமாக்கல் பணிக்கு அனுமதி (www.dinamalar.com)
back to top
Rail BudgetSR/Southern  -  

News Entry# 259287   Blog Entry# 1750640     
   Tags   Past Edits
Feb 26 2016 (6:32PM)
Station Tag: Hosur/HSRA added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (6:32PM)
Station Tag: Salem Junction/SA added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (6:32PM)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (6:32PM)
Station Tag: Thanjavur Junction/TJ added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (6:32PM)
Station Tag: Kumbakonam/KMU added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (6:32PM)
Station Tag: Mayiladuturai Junction/MV added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (6:32PM)
Station Tag: Villupuram Junction/VM added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  250 news posts
'விழுப்புரம் - மயிலாடுதுறை - திருச்சி பிரதான ரயில் பாதை, சேலம் - ஒசூர் - பெங்களூரு ரயில் பாதை மின்மயமாக்கப்படும்' என, ரயில்வே பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.ரயில்வே பட்ஜெட்டில், 'நடப்பு ஆண்டில், 1,600 கி.மீ., துாரம் ரயில் பாதை மின்மயமாக்கல் செய்யப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய ரயில் வழித்தடங்களில் ஒன்று, ௨௨௮ கி.மீ., துாரமுடைய, 'மெயின் லைன்' என அழைக்கப்படும், விழுப்புரம் - மயிலாடுதுறை - கும்பகோணம் - தஞ்சாவூர் - திருச்சி ரயில் பாதை.
இதே போல், தமிழகத்தையும், கர்நாடகாவையும் இணைப்பது, ௨௦௦ கி.மீ., துாரமுடைய, சேலம் - ஒசூர் - பெங்களூரு ரயில் பாதை. இந்த இரண்டு பாதைகளிலும், டீசல் இன்ஜின் மூலம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 'இந்த, இரண்டு ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்படும்' என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

3 posts - Fri Feb 26, 2016 - are hidden. Click to open.

1 posts - Sat Feb 27, 2016 - are hidden. Click to open.

6 posts - Sun Feb 28, 2016 - are hidden. Click to open.

1 posts - Mon Feb 29, 2016 - are hidden. Click to open.

2 posts - Tue Mar 01, 2016 - are hidden. Click to open.

8 posts - Thu Mar 03, 2016 - are hidden. Click to open.

2 posts - Fri Mar 04, 2016 - are hidden. Click to open.

2 posts - Sun Mar 06, 2016 - are hidden. Click to open.

1 posts - Mon Mar 07, 2016 - are hidden. Click to open.

1 posts - Tue Mar 08, 2016 - are hidden. Click to open.

4046 views
Mar 09 2016 (17:29)
Finally TVC Mail gets LHB   9500 blog posts   497 correct pred (73% accurate)
Re# 1750640-29            Tags   Past Edits
Sir , Nagercoil to bangalore express is empty. That train has general quota thorough out. If General quota itself is not filled then why are you asking one more train ?
Feb 26 2016 (15:15)  ரயில்வே பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது (www.dinamani.com)
back to top
Rail BudgetSR/Southern  -  

News Entry# 259184     
   Tags   Past Edits
Feb 26 2016 (3:15PM)
Station Tag: Thiruvarur Junction/TVR added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (3:15PM)
Station Tag: Pattukottai/PKT added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (3:15PM)
Station Tag: Thanjavur Junction/TJ added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (3:15PM)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  250 news posts
மத்திய ரயில்வே பட்ஜெட் தஞ்சாவூருக்கு பயன் தரும் விதமாக இல்லாததால்,ஏமாற்றமளிக்கிறது எனப் பல்வேறு அமைப்பினரும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் - திருச்சி ரயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கத் தலைவர் அய்யனாபுரம் க. நடராஜன் தெரிவித்தது: பயணிகள் மற்றும் சரக்குக் கட்டணம் உயர்த்தாதது மகிழ்ச்சி அளிக்கிறது. மூத்தக் குடிமக்களுக்குப் பயணக் கட்டணத்தில் 50 சத சலுகை என்பது வரவேற்புக்குரியது. தஞ்சாவூருக்குப் புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என்றார் நடராஜன்.
தஞ்சாவூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க சட்ட ஆலோசகர் வெ. ஜீவகுமார் தெரிவித்தது: தமிழகத்துக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த பட்ஜெட்டில் தஞ்சாவூர் - திருச்சி இரட்டை ரயில் பாதை முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நடப்பு பட்ஜெட்டில் அதற்கான கால வரம்பு நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. தஞ்சாவூர் - நாகர்கோயில் இன்டர்சிட்டி ரயில் எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்த எதுவுமே
...
more...
நிறைவேற்றப்படவில்லை என்றார் ஜீவகுமார்.
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் து. கிருஷ்ணசாமி வாண்டையார், செய்தித் தொடர்பாளர் கோ. அன்பரசன் தெரிவித்திருப்பது: புதிதாக ரயில்வே பல்கலைக்கழகம் அமைப்பது,மூத்தக் குடிமக்களுக்குக் கீழ் படுக்கைகளின் எண்ணிக்கை உயர்த்துவது உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. ஆனால், புதிய ரயில்கள் அறிவிப்பு இல்லாதது வருத்தமளிக்கிறது. இப்பகுதியினரின் நீண்ட கால எதிர்பார்ப்பான பட்டுக்கோட்டை - அரியலூர், கும்பகோணம் - விருத்தாசலம், காரைக்குடி - திருவாரூர் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருப்பது, தஞ்சை - கும்பகோணம் - சென்னை பகல் நேர புதிய ரயில் குறித்த அறிவிப்பு இல்லாதது உள்ளிட்டவை ஏமாற்றம் அளிக்கிறது எனத் தெரிவித்தனர்.
Feb 24 2016 (12:37)  சிறப்பு ரெயில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது (www.dailythanthi.com)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 258583     
   Tags   Past Edits
Feb 24 2016 (12:37PM)
Station Tag: Kumbakonam/KMU added by emailconnect2hari/1069947

Feb 24 2016 (12:37PM)
Station Tag: Thanjavur Junction/TJ added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  250 news posts
மகாமக சிறப்பு ரெயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தீர்த்தவாரி
கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று புனித நீராடவும், சாமி தரிசனம் செய்யவும் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பகோணம் சென்றனர். பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
ரெயில்களில் கூட்டம் அலை மோதியது
அதேபோல
...
more...
தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று தீர்த்தவாரியை முன்னிட்டு கூடுதல் பஸ்கள் விடப்பட்டன. மகாமக விழாவுக்காக, தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து கும்பகோணம் செல்வதற்காக தனி மார்க்கத்தில் இருந்து பஸ்கள் விடப்பட்டன.
இதேபோல, தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்தும், தஞ்சை வழியாகவும் கும்பகோணத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. நேற்று மட்டும் அதிகாலை 2.40 மணி முதல் காலை 5.40, 6.50, 9.20 மதியம் 12.35, 2.15, மாலை 4.10, 6.50 மணிக்கும் தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக மயிலாடுதுறைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.
இந்த ரெயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக காலை 6.50, 9.20 மணிக்கு சென்ற ரெயில்களில் ஏற ரெயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதில் பெரும்பாலான பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்கு உள்ளாயினர்.
Feb 24 2016 (12:36)  சிறப்பு ரெயில்கள் மூலம் 2 நாளில் ரூ.2¼ லட்சம் வசூல் (www.dailythanthi.com)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 258582     
   Tags   Past Edits
Feb 24 2016 (12:36PM)
Station Tag: Thanjavur Junction/TJ added by emailconnect2hari/1069947

Feb 24 2016 (12:36PM)
Station Tag: Kumbakonam/KMU added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  250 news posts
தஞ்சையில் இருந்து மகாமக விழாவுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்கள் மூலம் 2 நாளில் ரூ.2¼ லட்சம் வசூலானது.
மகாமக விழா
கும்பகோணம் மகாமக விழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 22-ந்தேதியுடன் முடிந்தது. அன்று முதல் மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடினர். மேலும் மகாமக குளத்தில் புனித நீராடுவதற்காக தமிழகம் மட்டும் அல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்தனர்.
மேலும் கும்பகோணத்துக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஏராளமான சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. கும்பகோணம் மகாமக விழாவுக்காக மட்டும் 2,800 பஸ்கள் இயக்கப்பட்டன. தஞ்சையில்
...
more...
இருந்து 550 சிறப்பு பஸ்களும், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இருந்து தஞ்சை வழியாக 1,360 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
68 சிறப்பு ரெயில்கள்
இதே போல் ரெயில்வே சார்பில் மகாமக விழாவுக்காக 68 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை வரை சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. தஞ்சையில் இருந்து 19-ந்தேதி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டதன் மூலம் கட்டணமாக ரூ.30 ஆயிரமும், 20-ந்தேதி ரூ.49 ஆயிரமும் கிடைத்தது.
இந்த நிலையில் 21-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அன்று அதிக அளவில் காணப்பட்டது. அன்று மட்டும் தஞ்சையில் இருந்து இயக்கப்பட்ட ரெயில்கள் மூலம் ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் வருமானம் கிடைத்தது. இதே போல் 22-ந்தேதி தீர்த்தவாரி நடைபெற்ற நாளில் தஞ்சையில் இருந்து இயக்கப்பட்ட ரெயில்கள் மூலம் ரூ.76 ஆயிரம் வருமானம் கிடைத்தது. 2 நாளில் மட்டும் ரூ.2 லட்சத்து 31 ஆயிரம் கிடைத்துள்ளது. நேற்று மதியம் வரை இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.17 ஆயிரம் கிடைத்தது. கடந்த 4½ நாட்களில் மட்டும் சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.3 லட்சத்து 27 ஆயிரம் கிடைத்தது குறிப்பிடத்கக்கது.
Feb 22 2016 (10:34)  தஞ்சையில் இருந்து கும்பகோணத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்கள் மூலம் 2 நாளில் ரூ.79 ஆயிரம் வசூல் (www.dailythanthi.com)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 258234     
   Tags   Past Edits
Feb 22 2016 (10:34AM)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by emailconnect2hari/1069947

Feb 22 2016 (10:34AM)
Station Tag: Kumbakonam/KMU added by emailconnect2hari/1069947

Feb 22 2016 (10:34AM)
Station Tag: Thanjavur Junction/TJ added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  250 news posts
தஞ்சாவூர்
கும்பகோணம் மகாமக விழாவையொட்டி தஞ்சையில் இருந்து கும்பகோணத்துக்கு 2 நாள் இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்கள் மூலம் கட்டணமாக ரூ.79 ஆயிரம் வசூலாகி உள்ளது.
மகாமக விழா
கும்பகோணம் மகாமக விழா கடந்த 13–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். மேலும் மகாமக குளத்தில் புனித நீராடுவதற்காக தமிழகம் மட்டும் அல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர்.
மேலும்
...
more...
கும்பகோணத்துக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஏராளமான சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. கும்பகோணம் மகாமக விழாவுக்காக மட்டும் 2,800 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தஞ்சையில் இருந்து 550 சிறப்பு பஸ்களும், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இருந்து தஞ்சை வழியாக 1,360 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
2 நாளில் ரூ.79 ஆயிரம்
இதே போல் ரெயில்வே சார்பில் மகாமக விழாவுக்காக 68 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சையில் இருந்து மயிலாடுதுறை வழியாக கும்பகோணத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2 நாட்கள் (சனி, ஞாயிற்றுக்கிழமைகள்) விடுமுறை நாட்கள் என்பதால் கும்பகோணத்துக்கு செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று தஞ்சை ரெயில் நிலையத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்து. சிறப்பு ரெயில்களிலும் கூட்டம் அலைமோதியதால் பக்தர்களுக்கு இடம்கிடைக்காத நிலை ஏற்பட்டது.
தஞ்சையில் இருந்து 19–ந்தேதி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டதன் மூலம் கட்டணமாக ரூ.30 ஆயிரமும், 20–ந்தேதி ரூ.49 ஆயிரமும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 நாட்களில் மட்டும் சிறப்பு ரெயில்கள் மூலம் கட்டணமாக ரூ.79 ஆயிரம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Page#    Showing 1 to 20 of 47 News Items  next>>

Scroll to Top
Scroll to Bottom


Go to Desktop site