Full Site Search  
Thu May 25, 2017 12:33:05 IST
PostPostPost Stn TipPost Stn TipUpload Stn PicUpload Stn PicAdvanced Search
Large Station Board;
Large Station Board;

VPT/Virudunagar Junction (4 PFs)
விருதுநகர் சந்திப்பு     विरुदुनगर जंक्शन

Track: Construction - Electric-Line Doubling

Type of Station: Junction
Number of Platforms: 4
Number of Halting Trains: 86
Number of Originating Trains: 1
Number of Terminating Trains: 1
Jn Point MDU / MNM / TSI/ MEJ(TEN) Railway Feeder Rd, Virudunagar, Ph No: 04562-243747
State: Tamil Nadu
Elevation: 108 m above sea level
Zone: SR/Southern
Division: Madurai
1 Travel Tips
No Recent News for VPT/Virudunagar Junction
Nearby Stations in the News

Rating: 3.0/5 (16 votes)
cleanliness - good (2)
porters/escalators - average (2)
food - average (2)
transportation - good (2)
lodging - average (2)
railfanning - average (2)
sightseeing - average (2)
safety - good (2)

Nearby Stations

KGD/Kalligudi 11 km     MNKR/Mallankinar 12 km     SLGM/Sankaralingapuram 12 km     SVK/Sivarakottai 16 km     TY/Tulukapati 16 km     TTL/Tiruttangal 21 km     APK/Aruppukkottai 22 km     SVKS/Sivakasi 24 km     TMQ/Tirumangalam 26 km     SRT/Satur 27 km    

Station News

Page#    Showing 1 to 20 of 25 News Items  next>>
Apr 27 2017 (02:39)  Science Express Tour schedule (www.sciencexpress.in)
back to top
New/Special Trains

News Entry# 300881     
   Tags   Past Edits
This is a new feature showing past edits to this News Post.

Posted by: Sahasra Bahubali 2*^~  389 news posts
Tour Schedule [17 February - 8 September 2017]
Tour Schedule | Route Map | Tour phase I-VIII
No. Station Exhibition Dates No. Station Exhibition Dates
1. Delhi Safdarjung
(Flag off) 17 Feb 2017 35. Kottavalasa 20 - 23 May 2017
2. Delhi
...
more...
Cantt 18 - 19 Feb 2017 36. Gudivada 24 - 26 May 2017
3. Hisar 20 - 23 Feb 2017 37.. Mirylaguda 27 - 30 May 2017
4. Dhuri 24 - 26 Feb 2017 38. Gulberga 31 May-2 Jun 2017
5. Taran Taran 27 - 28 Feb 2017 39. Kalluru 3 - 5 Jun 2017
6. Sri Mata Vaishno Devi Katra 1 - 2 Mar 2017 40. Whitefield 6 - 8 Jun 2017
7. Udhampur 3 - 4 Mar 2017 41. Kengeri 9 - 11 Jun 2017
8. Nangal Dam 6 - 7 Mar 2017 42. Koduru 12 - 14 Jun 2017
9. Sirhind 8 - 10 Mar 2017 43. Puducherry 15 - 16 Jun 2017
10. Chandigarh 12 & 14 Mar 2017 44. Attur 17 - 19 Jun 2017
11. Rampur 15 - 17 Mar 2017 45. Karur 20 - 22 Jun 2017
12. Kasganj City 18 - 20 Mar 2017 46. Kodaikanal Road 24 Jun 2017
13. Khalilabad 22 - 25 Mar 2017 47. Virudhunagar 25 - 27 Jun 2017
14. Mau 26 - 29 Mar 2017 48. Arumuganeri 28 - 30 Jun 2017
15. Gaya 30 - 31 Mar 2017 49. Kayankulam 1 - 4 Jul 2017
16. Patna 1 - 2 Apr 2017 50. Guruvayur 5 - 7 Jul 2017
17. Kiul 3 - 4 Apr 2017 51. Kannur 8 - 10 Jul 2017
18. Sitamarhi 5 Apr 2017 52. Vasco Da Gama 11 - 13 Jul 2017
19. Samastipur 6 Apr 2017 53. Ratnagiri 14 - 17 Jul 2017
20. Salmari 7 - 8 Apr 2017 54. Mumbai CST 19 - 22 Jul 2017
21. Fakiragram 9 - 10 Apr 2017 55. Nasik Road 24 - 26 Jul 2017
22. Lumding 11 - 12 Apr 2017 56. Murtajapur 27 - 29 Jul 2017
23. Agartala 13 - 14 Apr 2017 57. Nagpur 30 Jul-02 Aug 2017
24. Badarpur 15 - 17 Apr 2017 58. Amla 3 - 6 Aug 2017
25. North Lakhimpur 19 - 21 Apr 2017 59. Habibganj 7 - 9 Aug 2017
26. Rangpara North 22 - 24 Apr 2017 60. Bina 10 - 12 Aug 2017
27. Bagdogra 25 - 26 Apr 2017 61. Khajuraho 13 - 14 Aug 2017
28. Dhanbad 27 - 30 Apr 2017 62. Marwar 17 - 18 Aug 2017
29. Barrackpore 1 - 2 May 2017 63. Balotra 19 - 21 Aug 2017
30. Kalyani 3 - 5 May 2017 64. Deesa 22 - 24 Aug 2017
31. Chandil 6 - 8 May 2017 65. Bhuj 25 - 27 Aug 2017
32. Bhadrak 9, 11 & 12 May 2017 66. Bhaktinagar 28 - 31 Aug 2017
33. Puri 13 - 16 May 2017 67. Gondal 1 - 4 Sep 2017
34. Chatarpur 17 - 19 May 2017 68. Gandhinagar Capital 5 - 8 Sep 2017
Mar 31 2017 (10:35)  சிலம்பு விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கக் கோரிக்கை (m.dailyhunt.in)
back to top
Other News

News Entry# 298181     
   Tags   Past Edits
Mar 31 2017 (10:35)
Station Tag: Sivakasi/SVKS added by podhigai charal~/951131

Mar 31 2017 (10:35)
Station Tag: Sengottai/SCT added by podhigai charal~/951131

Mar 31 2017 (10:35)
Station Tag: Virudunagar Junction/VPT added by podhigai charal~/951131

Mar 31 2017 (10:35)
Train Tag: Silambu Express/16182 added by podhigai charal~/951131

Mar 31 2017 (10:35)
Train Tag: Silambu Express/16181 added by podhigai charal~/951131

Posted by: podhigai charal~  11 news posts
சிலம்பு விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் வழியாக செங்கோட்டை-சென்னை பொதிகை அதிவிரைவு ரயில் 24 பெட்டிகளுடன் இயங்குகிறது. தற்போது கூடுதலாக, சென்னை-மானாமதுரை இடையே வாரம் இருமுறை இயங்கிய சிலம்பு விரைவு ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிலம்பு ரயில் கட்டணம் பொதிகையை விட குறைவு. மேலும் முதல் வகுப்பு இருக்கை வசதியும் உள்ளது. இதனால் இந்த ரயில் பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், இதில் போதுமான படுக்கை வசதி பெட்டிகள் இல்லை. செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டாலும், இந்த ரயிலில் திருநெல்வேலி, விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு முன்பதிவு ஒதுக்கீடும் இல்லை.
எனவே
...
more...
சிலம்பு விரைவு ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளை கூடுதலாகவும், முன்பதிவில்லா பெட்டிகள் இரண்டும் இணைக்க பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், நியூ ஆரியங்காவு-இடமண் இடையே நடைபெறும் அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடித்து கொல்லம்-ராஜபாளையம்-மதுரை வழித்தடத்தில் ரயில் இயக்கவும் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Mar 07 2017 (12:23)  சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க பரிந்துரை கோட்ட மேலாளர் தகவல் (www.dailythanthi.com)
back to top
New Facilities/TechnologySR/Southern  -  

News Entry# 295607     
   Tags   Past Edits
Mar 07 2017 (12:24)
Station Tag: Virudunagar Junction/VPT added by emailconnect2hari/1069947

Mar 07 2017 (12:24)
Station Tag: Manamadurai Junction/MNM added by emailconnect2hari/1069947

Mar 07 2017 (12:24)
Station Tag: Aruppukkottai/APK added by emailconnect2hari/1069947

Mar 07 2017 (12:23)
Train Tag: Silambu Express/16181 added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  302 news posts
சிலம்பு எக்ஸ்பிரசில் கூடுதலாக 5 பெட்டிகள் இணைக்க பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்தார்.
மார்ச் 07, 04:30 AM
அருப்புக்கோட்டை,
சிலம்பு எக்ஸ்பிரஸ்
சென்னையில் இருந்து மானாமதுரை வரை இயக்கப்பட்டு வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில், அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை
...
more...
ரெயில் நிலையத்திற்கு முதன் முறையாக வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ரெயில் பயணிப்போர் நலச் சங்க தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். அருப்புக்கோட்டை ரெயில் நிலைய அலுவலர் சிவகுருநாதன் வரவேற்றார். கூடுதல் கோட்ட மேலாளர் முரளிகிருஷ்ணா, வர்த்தக பிரிவு மேலாளர் ரதிப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சுனில்குமார்கார்க் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் கூறியதாவது;–
கூடுதல் பெட்டிகள்
சென்னையில் இருந்து மானாமதுரை வரை இயக்கப்பட்டு வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 17 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது வாரம் இரு முறை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினந்தோறும் இயக்க வேண்டும் என்றும், மேலும் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
வரும் காலங்களில் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து தினமும் ரெயிலை இயக்குவதற்கான நடவடிக்கையிலும், மேலும் கூடுதலாக 5 பெட்டிகள் இணைக்கவும் பரிந்துரை செய்யப்படும். செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை அருப்புக்கோட்டை வழியாக சென்னைக்கு இயக்க பரிந்துரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மதுரை–அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி அகல ரெயில் பாதை திட்ட பணி துரிதப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ரெயில் பயணிப்போர் நலச் சங்க செயலாளர் பூமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Mar 06 2017 (16:46)  சென்னை-செங்கோட்டை வரையிலான சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினமும் இயக்க வேண்டும் ரெயில்வே நிர்வாகத்திற்கு வலியுறுத்தல் (www.dailythanthi.com)
back to top
New Facilities/TechnologySR/Southern  -  

News Entry# 295529     
   Tags   Past Edits
Mar 06 2017 (16:46)
Station Tag: Manamadurai Junction/MNM added by emailconnect2hari/1069947

Mar 06 2017 (16:46)
Station Tag: Aruppukkottai/APK added by emailconnect2hari/1069947

Mar 06 2017 (16:46)
Station Tag: Virudunagar Junction/VPT added by emailconnect2hari/1069947

Mar 06 2017 (16:46)
Station Tag: Tenkasi Junction/TSI added by emailconnect2hari/1069947

Mar 06 2017 (16:46)
Station Tag: Sengottai/SCT added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  302 news posts
சென்னை-செங்கோட்டை இடையிலான சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
மார்ச் 05, 04:15 AM
விருதுநகர்,
சிலம்பு எக்ஸ்பிரஸ்
தென் மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. தென் மாவட்டங்களுக்கு இரு வழி
...
more...
ரெயில் பாதை இல்லாத நிலையில் கூடுதல் ரெயில்கள் இயக்க சாத்தியமில்லை என ரெயில்வே நிர்வாகம் சொல்லி வருகிறது. அதிலும் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வழியாக செங்கோட்டை செல்வதற்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் மட்டுமே சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படுகிறது.
மேலும் ரூ.270 கோடி மதிப்பீட்டில் விருதுநகர்-மானாமதுரை இடையே அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு 3 வருடங்களுக்கு மேலாகியும் இந்த வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் எதுவும் சென்னையில் இருந்து இயக்கப்படவில்லை. இந்த நிலையில் சென்னையில் இருந்து மானாமதுரைக்கு வாரம் இருமுறை இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை நேற்று முதல் மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் செங்கோட்டை வரை நீட்டித்து ரெயில்வே நிர்வாகம் இயக்கி வருகின்றது. அருப்புக்கோட்டை, திருச்சுழி பகுதி மக்கள் அகல ரெயில் பாதை அமைக்கப்பட்ட பின்பும் சென்னை செல்வதற்கு விருதுநகர் ரெயில் நிலையத்திற்குத்தான் வர வேண்டி இருந்தது. தற்போது வாரத்தில் இரு தினங்கள் மட்டும் அவர்களுக்கு சென்னைக்கு நேரடி ரெயில் வசதி கிடைத்துள்ளது.
கோரிக்கை
எனவே ரெயில்வே நிர்வாகம் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு தினசரி ரெயிலாக இயக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பாராளுமன்ற தேர்தலின் போது ஆறு மாதங்கள் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கோட்டை வரை தினசரி இயக்கப்பட்டு வந்தது. அதே போன்று தற்போதும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க தென் மாவட்ட எம்.பி.க்கள் ரெயில்வே அமைச்சகத்திடம் வலியுறுத்த வேண்டியதும் அவசியமாகும்.
Mar 06 2017 (12:25)  சிலம்பு எக்ஸ்பிரஸ் இன்று முதல் செங்கோட்டை வரை நீட்டிப்பு: பொது மக்கள் மகிழ்ச்சி (tamil.oneindia.com)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 295505     
   Tags   Past Edits
Mar 06 2017 (12:25)
Station Tag: Sengottai/SCT added by emailconnect2hari/1069947

Mar 06 2017 (12:25)
Station Tag: Tenkasi Junction/TSI added by emailconnect2hari/1069947

Mar 06 2017 (12:25)
Station Tag: Virudunagar Junction/VPT added by emailconnect2hari/1069947

Mar 06 2017 (12:25)
Station Tag: Aruppukkottai/APK added by emailconnect2hari/1069947

Mar 06 2017 (12:25)
Station Tag: Manamadurai Junction/MNM added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  302 news posts
செங்கோட்டை: சென்னையில் இருந்து மானாமதுரை வரை இயக்கி வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை - மானாமதுரை சிலம்பு விரைவு ரயில், மானாமதுரையில் 12 மணி நேரத்துக்கும் மேலாக எந்தப் பயனும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு சென்னைக்கு இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னையில் இருந்து மானாமதுரை வரை இயக்கி வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் இரயில் கடந்த ஜன.15ம் தேதி ஞாயிற்றுகிழமை முதல் அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. VIDEO : Mountain man Dashrath Manjhi's home to be connected with train Mountain man Dashrath Manjhi's home to be connected with trainNews Powered by எதிர்ப்புப் பாடல்..தப்பாட்டம்..கும்மி.. வலுக்கும் நெடுவாசல் போராட்டம்… ஹைட்ரோ கார்பன் ரத்து எப்போது 18வது நாளாக தொடரும் நெடுவாசல் போராட்டம்… ஜிவி பிரகாஷ், கரு. பழனியப்பன் நேரில் சென்று ஆதரவு திருப்பதி கோவிலில் படாதபாடுபட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி! Featured Posts Popular Videos 00:01:10 மருதா புயல் பயம் 00:01:59 மீனவர்களை தாக்கும் போலீஸ் 00:06:35 ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிக்கும் காவலர் இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பல்வேறு திட்டங்களைத் துவக்கிவைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்பி...
more...
நவநீத கிருஷ்ணன், எம்பி மைத்ரேயன் மற்றும் ரயில்வே அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது சென்னையில் இருந்து மானாமதுரை வரை இயக்கப்பட்டு வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், தென்காசி வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 5ம் தேதி மானாமதுரைக்கு 5.30க்கு வந்து சேரும். அங்கிருந்து 5.40க்கு கிளம்பி நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டைக்கு 6.27க்கு வந்து சேர்கிறது. அதன்பின், விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, திருவில்லிப்புத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புக்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டைக்கு 10.20க்கு செல்கிறது. 5ம் தேதி மாலை 4 மணிக்கு செங்கோட்டையில் இருந்து கிளம்பி தென்காசி வழியாக அருப்புக்கோட்டைக்கு 6.49க்கு வந்து சேர்கிறது. அங்கிருந்து புறப்பட்டு மானாமதுரை வழியாக சென்னைக்கு 6ம் தேதி காலை 5.45க்கு சென்றடையும். ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். இந்த ரயில் வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சென்னையில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த இரயில் சேவையால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் திருத்தங்கல், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி நகரங்களில் தொழில் வளர்ச்சி பெருகும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Read more at: click here
Feb 16 2017 (14:46)  முக்கிய திருவிழா காலங்களில் செங்கோட்டை மார்க்கமாக சிறப்பு ரயில் இயக்க வேண்டும் பயணிகள் கோரிக்கை (www.dinakaran.com)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 294045     
   Tags   Past Edits
Feb 16 2017 (14:46)
Station Tag: Tenkasi Junction/TSI added by emailconnect2hari/1069947

Feb 16 2017 (14:46)
Station Tag: Sengottai/SCT added by emailconnect2hari/1069947

Feb 16 2017 (14:46)
Station Tag: Virudunagar Junction/VPT added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  302 news posts
சிவகாசி,: முக்கிய திருவிழா காலங்களில் செங்கோட்டை மார்க்கமாக சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் வேளாங்கண்ணி, மேல்மருவத்தூர் போன்ற முக்கிய இடங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல சபரிமலை ஜயப்பன் கோவில் செல்வதற்கு செங்கோட்டை முக்கிய வழியாக உள்ளது. இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த 6 ஆண்டுகளாக இந்த மார்க்கத்தில் புதிய ரயில் ஒன்றுகூட அறிவிக்கப்படவில்லை. இரவு 8 மணிக்கு மேல் இந்த மார்க்கத்தில் ரயில்கள் இயக்கப்படாததால் அனைத்து ரயில் நிலையங்களும் பூட்டப்படுகின்றன. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து சிறப்பு ரயில்களும் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி மார்க்கத்தில் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சபரிமலை ஜயப்பன் திருவிழா காலங்களில் சென்னை-செங்கோட்டை, செங்கோட்டை-சென்னை, தீப கார்த்திகை திருவிழா காலத்தில் செங்கோடடை-திருவண்ணாமலை, திருவண்ணாமலை -செங்கோட்டை என சிறப்பு ரயில் இயக்க வேண்டும்.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டிகள் ஒரு ரயிலுக்கு 4 மட்டுமே உள்ளன. இதனால் ஏழை, எளிய மக்கள் பயணம் செய்ய மிகவும் சிரமப்படுகின்றனர்.
...
more...
கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் கழிவறையில் அமர்ந்து பயணிக்கும் நிலை உள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு ஏசி பெட்டி ஒன்றை குறைத்து விட்டு, அதற்கு மாற்றாக மூத்த குடிமக்களுக்கு என தனி பொதுப்பெட்டி இணைக்க பயணிகள் கோரிக்கை விடுதுள்ளனர்.
இது குறித்து சிவகாசியை சேர்ந்த ரயில் பயணி ஒருவர் கூறுகையில், ‘ செங்கோட்டை மார்க்கத்தில் சிறப்பு ரயில் இயக்க வேண்டும். செங்கோட்டை-விருதுநகர் வழித்தடத்தில் இரவு 8 மணிக்கு மேல் ரயில் சேவை இல்லை. பொங்கல், தீபாவளி போன்ற முக்கிய திருவிழா காலங்களில் இந்த வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுவதில்லை. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தென் மாவட்ட பகுதியில் அறிவிக்கப்படும் அனைத்து சிறப்பு ரயிலையும், விருதுகரில் இருந்து செங்கோட்டை வழித்தடத்தில் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
Jan 28 2017 (18:08)  தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்களை இயக்க மதுரை–நாகர்கோவில் இடையே இருவழி பாதை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும் (www.dailythanthi.com)
back to top
Rail BudgetSR/Southern  -  

News Entry# 292488     
   Tags   Past Edits
Jan 28 2017 (18:08)
Station Tag: Madurai Junction/MDU added by emailconnect2hari/1069947

Jan 28 2017 (18:08)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by emailconnect2hari/1069947

Jan 28 2017 (18:08)
Station Tag: Nagercoil Junction/NCJ added by emailconnect2hari/1069947

Jan 28 2017 (18:08)
Station Tag: Sengottai/SCT added by emailconnect2hari/1069947

Jan 28 2017 (18:08)
Station Tag: Nagore/NCR added by emailconnect2hari/1069947

Jan 28 2017 (18:08)
Station Tag: Virudunagar Junction/VPT added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  302 news posts
விருதுநகர்,
இணைப்பு
தமிழகத்திற்கு கடந்த 2 ஆண்டுகளாக ரெயில்வே பட்ஜெட்டில் புதிய ரெயில்கள் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மேலும் தென் மாவட்டங்களில் உள்ள ரெயில்பாதை திட்டப்பணிகளுக்கும் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த நிலையில் வரும் நிதியாண்டிற்கு என தனியாக ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல் ரெயில்வே பட்ஜெட்டை பொதுபட்ஜெட்டுன் மத்திய அரசு இணைத்துவிட்டது. இதனால் ரெயில்வே திட்டங்களுக்கும் பொது பட்ஜெட்டில் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். உ.பி. உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்த மாநிலங்களை தவிர பிற மாநிலங்களுக்கான வளர்ச்சி திட்டங்களை வரும் பிப்ரவரி 1–ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பொதுபட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி அறிவிக்கலாம் என தேர்தல் கமி‌ஷன் அனுமதி அளித்துள்ளது. பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றமும் தடை ஏதும் விதிக்கவில்லை.
இருவழிப்பாதை
...
more...

சென்னை–மதுரை இடையே இருவழி ரெயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சில இடங்களில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக பணி தாமதமாக நடைபெற்று வருகிறது. தென் மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து கூடுதலாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இருவழிரெயில்பாதை அமைத்தால்தான் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க முடியும் என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில் மதுரை–நாகர்கோவில் இடையே இருவழி ரெயில்பாதை அமைக்க ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் ஆகும் என மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான நிதி ரெயில்வே துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படாததால் மதுரை–நாகர்கோவில் இடையேயான இருவழி ரெயில்பாதை திட்டப்பணி தொடங்கப்படவில்லை.
பாதிப்பு
தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் மதுரை–விருதுநகர் இடையேதான் விரைவாக செல்ல முடியாமல் கூடுதல் நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. மதுரை–விருதுநகர் இடையே முதல் கட்டமாக இருவழி ரெயில்பாதை முடிக்கப்பட்டால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் விரைவாக செல்ல வாய்ப்பு ஏற்படும்.
நிதி ஒதுக்கீடு
மேலும் மதுரையில் இருந்து காரியாபட்டி, அருப்புக்கோட்டை, விளாத்திக்குளம் வழியாக தூத்துக்குடிக்கான 140 கிலோமீட்டர் தூர அகல ரெயில்பாதை திட்டப்பணி தொடங்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் இந்த திட்டப்பணி கிட்டத்தட்ட முடங்கிய நிலையில் உள்ளது. மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கான அகலரெயில்பாதை திட்டப்பணி முடிந்து விட்டால் துறைமுக நகரான தூத்துக்குடியில் இருந்து வடமாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களுக்கு செல்லும் சரக்கு ரெயில்கள் அந்த வழியாக செல்லும் நிலை ஏற்படும். இதன் மூலம் மதுரையில் இருந்து விருதுநகர் வழியாக நெல்லை செல்லும் ரெயில்பாதையில் சரக்கு ரெயில் போக்குவரத்து குறைந்து அதிக பயணிகள் ரெயிலை இயக்க வாய்ப்பு ஏற்படும். இதனை மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தாக்கல் செய்ய உள்ள பொதுபட்ஜெட்டில் தென்மாவட்டங்களுக்கான இந்த ரெயில் பாதைகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
புதிய ரெயில்கள்
மேலும் செங்கோட்டையில் இருந்து ராமேசுவரம் செல்வதற்கும், ராமேசுவரத்தில் இருந்து கோவை செல்வதற்கும் புதிய ரெயில்கள் இயக்கப்பட வேண்டும். ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த நாகூர்–கொல்லம் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும். கன்னியாகுமரியில் இருந்து செல்லும் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயிலை வாரத்திற்கு 4 முறை இயக்க வேண்டும். திருச்சியில் இருந்து நெல்லை வரை
செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு பயன்பெறும் வகையில் சென்னையில் இருந்து செங்கோட்டை வரை அந்தோதையா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும். இந்த புதிய ரெயில்கள் மற்றும் ரெயில் நீட்டிப்பு பற்றி அறிவிப்புகளை பொதுப்பட்ஜெட்டில் அறிவிக்க தென் மாவட்ட எம்.பி.க்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Dec 08 2015 (09:59)  செங்கோட்டை–சென்னை இடையே பகல் நேர ரெயில் இயக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை (www.dailythanthi.com)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 250370     
   Tags   Past Edits
Dec 08 2015 (9:59AM)
Station Tag: Madurai Junction/MDU added by emailconnect2hari/1069947

Dec 08 2015 (9:59AM)
Station Tag: Virudunagar Junction/VPT added by emailconnect2hari/1069947

Dec 08 2015 (9:59AM)
Station Tag: Tenkasi Junction/TSI added by emailconnect2hari/1069947

Dec 08 2015 (9:59AM)
Station Tag: Sengottai/SCT added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  302 news posts
வகாசி,
செங்கோட்டை–சென்னை இடையே பகல் நேர ரெயில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதிப்பு
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் சிலர் தங்களது உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். சிலர் போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் அங்கிருந்து சொந்த ஊருக்கும், உறவினர்களின் வீடுகளுக்கும் திரும்ப முடியாமல் இருக்கிறார்கள்.
கடந்த
...
more...
2 நாட்களாக பல்வேறு காரணங்களாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் இயக்கப்பட்டு வந்த பல ரெயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பலர் ரத்து செய்யப்பட்ட ரயில்களில் பயணம் செய்ய முடியாமல், பஸ்களில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் நோயாளிகள், வயதானவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
சிறப்பு ரெயில்
இரவு நேரங்களில் ரெயில்களில் பயணம் செய்தால் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு ரெயில்கள் தொடர்ந்து இயக்கப்படாமல் போனால் பாதி வழியில் பாதிக்கப்பட வேண்டுமே என்ற அச்சத்தில் வயதானவர்கள், நோயாளிகள் இரவு பயணத்தை தவிர்த்து வருகிறார்கள். அதனால் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் பயணம் செய்யும் வகையில் சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று இப்பகுதியில் பொதுமக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
ஆனால் சம்மந்தப்பட்ட ரெயில்வேத்துறை அதிகாரிகள் செங்கோட்டையில் இருந்து தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், மதுரை வழியாக சென்னைக்கு சிறப்பு ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Oct 05 2015 (10:50)  விருதுநகர்-திருச்சி செல்லும் பயணிகள் ரெயிலை செங்கல்பட்டு வரை நீட்டிக்க வேண்டும் துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் மனு (www.dailythanthi.com)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 243801     
   Tags   Past Edits
Oct 05 2015 (10:50AM)
Station Tag: Pudukkottai/PDKT added by emailconnect2hari/1069947

Oct 05 2015 (10:50AM)
Station Tag: Pattukottai/PKT added by emailconnect2hari/1069947

Oct 05 2015 (10:50AM)
Station Tag: Virudunagar Junction/VPT added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  302 news posts
விருதுநகரில் இருந்து திருச்சிக்கு செல்லும் பயணிகள் ரெயிலை செங்கல்பட்டு வரை நீட்டிக்க வேண்டும் என சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநல சங்கத்தின் சார்பில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் மனு அளிக்கப்பட்டது.
துணை சபாநாயகரிடம் மனு
சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநல சங்கத்தின் சார்பில் சங்க தலைவர் மோகன்ராஜ் தலைமையில், பொறுப்பாளர்கள் ரமேஷ் உதயக்குமார், செல்வரெத்தினம், திவாகர் ஆகியோர் நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார்.
அந்த
...
more...
மனுவில், திண்டுக்கல்-துவரங்குறிச்சி-காரையூர்- பெருமாநாடு- புதுக்கோட்டை சாலையை மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த வேண்டும். கோழிக்கோடு- பாலக்காடு- திண்டுக்கல்- துவரங்குறிச்சி- புதுக்கோட்டை-பட்டுக்கோட்டை- வேதாரண்யம் வழி தடத்தில் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.
ரெயிலை நீட்டிக்க வேண்டும்
தஞ்சாவூர்- கந்தர்வக்கோட்டை- புதுக்கோட்டை ரெயில் பாதைக்காக ஆய்வு செய்து பல ஆண்டுகள் ஆகியும் பணி தொடங்கவில்லை. எனவே இந்த ரெயில் பாதை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். மேலும் இந்த ரெயில் பாதையை பொன்னமராவதி வழியாக மதுரை வரை நீட்டிக்க வேண்டும். பட்டுக்கோட்டை- புதுக்கோட்டை- துவரங்குறிச்சி- திண்டுக்கல் ரெயில் பாதையை ஆய்வு செய்து உடனடியாக பணியை தொடங்க வேண்டும்.
ராமேஸ்வரம்- புதுக்கோட்டை- பழனி- கோழிக்கோடு- மும்பைக்கு ரெயில் இயக்க வேண்டும். வண்டி எண் 76840 விருதுநகரில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரெயிலை செங்கல்பட்டுவரை நீட்டிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்று இருந்தன.
Jun 29 2015 (12:13)  பயன்பாட்டுக்கு வந்து 2 ஆண்டுகளாகியும் விருதுநகர்- மானாமதுரை அகல பாதையில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படாத நிலை (www.dailythanthi.com)
back to top
Rail BudgetSR/Southern  -  

News Entry# 231400   Blog Entry# 1527619     
   Tags   Past Edits
Jun 29 2015 (12:13PM)
Station Tag: Nagore/NCR added by emailconnect2hari/1069947

Jun 29 2015 (12:13PM)
Station Tag: Karaikkudi Junction/KKDI added by emailconnect2hari/1069947

Jun 29 2015 (12:13PM)
Station Tag: Sivaganga/SVGA added by emailconnect2hari/1069947

Jun 29 2015 (12:13PM)
Station Tag: Manamadurai Junction/MNM added by emailconnect2hari/1069947

Jun 29 2015 (12:13PM)
Station Tag: Sengottai/SCT added by emailconnect2hari/1069947

Jun 29 2015 (12:13PM)
Station Tag: Virudunagar Junction/VPT added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  302 news posts
2 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டுக்கு வந்த விருதுநகர்- மானாமதுரை அகல ரெயில் பாதையில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படாத நிலையில் விருதுநகரில் நடைமேடை புதர் மண்டிக்கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அகல ரெயில் பாதை
விருதுநகர்- மானாமதுரை இடையே அகல ரெயில் பாதை வேண்டும் என்ற தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் ரூ.271 கோடி மதிப்பீட்டில் 61 கிலோ மீட்டர் அகல ரெயில் பாதை திட்டப்பணி கடந்த 2013-ம் ஆண்டு செய்து முடிக்கப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15-ந்தேதி இந்த அகல ரெயில் பாதை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
முதலில்
...
more...
புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் மட்டுமே இந்த ரெயில் பாதையில் ஓடத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இந்த ரெயில் பாதையில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் உறுதி அளித்தது.
பாராமுகம்
ஆனால் இந்த ரெயில் பாதை பயன்பாட்டுக்கு வந்து 2 ஆண்டுகளாகியும் கூடுதல் ரெயில்களை இயக்குவது குறித்து ரெயில்வே நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகமாகவே உள்ளது. இந்தப்பகுதி மக்களின் ஆறுதலுக்காக திருச்சியில் இருந்து காரைக்குடி வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயிலை விருதுநகர் வரை நீட்டித்துள்ளனர். இந்த ரெயில் பாதை பயன்பாட்டுக்கு வந்த பின்பு விருதுநகர் மாவட்ட கிழக்குப் பகுதி மக்கள் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்குச் செல்ல ரெயில் வசதி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அதற்கான நடவடிக்கை ஏதும் இல்லாத நிலையில் அவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
குறைந்தபட்சம் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த சென்னை- செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலையாவது இந்த வழியாக தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியும் ரெயில்வே நிர்வாகம் அதற்கு செவி சாய்க்க வில்லை. இதனால் அகல ரெயில்பாதை பயன்பாட்டுக்கு வந்த பின்பும் அருப்புக்கோட்டை, திருச்சுழி பகுதியில் உள்ள மக்கள் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்ல விருதுநகருக்குத் தான் வர வேண்டியுள்ளது.
பயணிகள் ரெயில்
ஏற்கனவே விருதுநகர்- மானாமதுரை இடையே மீட்டர்கேஜ் ரெயில் பாதை இருந்த போது கொல்லம்- நாகூர் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. அதே போன்று விருதுநகர்- ராமேசுவரம் பயணிகள் ரெயிலும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இயக்கப்பட்டு வந்தது. கடந்த 2003-ம் ஆண்டு வரை இயக்கப்பட்டு வந்த இந்த ரெயில்கள் அகல ரெயில்பாதை திட்டப்பணி தொடங்குவதற்கு முன்பு நிறுத்தப்பட்டு விட்டன.
தற்போது அகல ரெயில்பாதை பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் இந்த பயணிகள் ரெயில்களை மீண்டும் இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வரும் 2016-ம் ஆண்டில் கும்பகோணம் மகாமக விழா நடைபெற உள்ள நிலையில், செங்கோட்டை-நாகூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டால் தென் மாவட்ட மக்களுக்கு பேருதவியாக இருக்கும்.
அவலம்
விருதுநகர் -மானாமதுரை அகல ரெயில் பாதை பயன்பாட்டுக்கு வந்த பின்பு கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் விருதுநகர் ரெயில் நிலையத்தில் 4-வது நடைமேடை அமைக்கப்பட்டது. ஆனால் இந்த நடைமேடை பயன்பாட்டுக்கு வராமலேயே புதர் மண்டிக்கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இயக்கப்பட்டு வரும் விருதுநகர்-மானாமதுரை பயணிகள் ரெயில் 3-வது நடைமேடையில் இருந்தே இயக்கப்படுகிறது. மானாமதுரை அகல ரெயில் பாதைக்கு என தனி நடைமேடை அமைக்கப்பட்டும் அதுவும் பயன்பாடு இல்லாமல் போய் விட்டது.
கோரிக்கை
எனவே தென்னக ரெயில்வே நிர்வாகம் ஏற்கனவே உறுதி அளித்தபடி விருதுநகர்- மானாமதுரை அகல ரெயில் பாதையில் கூடுதல் ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஒன்றிரைண்டையாவது இந்த அகல ரெயில் பாதை வழியாக இயக்குவதற்கு முதல் கட்டமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. இல்லையேல் பெரும் பொருட் செலவில் இந்த அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டும் பொதுமக்களுக்கு பயன் இல்லாமல் போவதுடன் ரெயில்வே துறைக்கும் எவ்வித வருமானமும் இல்லாத நிலை நீடிக்கும்.

2 posts - Mon Jun 29, 2015 - are hidden. Click to open.

Jun 29 2015 (16:11)
Hyderabad Karnataka needs a dedicated train to SBC*^~   9687 blog posts   497 correct pred (74% accurate)
Re# 1527619-3            Tags   Past Edits
One more daily definitely needed from SCT to MS via APK, MNM, TPJ . Or they can extend Silambu as daily with 24 coaches and RSA with pearl city , PDKT, KKDI, MNM, APK, SCT should be in GNWL so quota problems also won't arise.

5700 views
Jun 29 2015 (16:18)
Science is better than Engineering and Technology*^~   13737 blog posts   2 correct pred (100% accurate)
Re# 1527619-4            Tags   Past Edits
Silambu daily with 23 coacher to QLN wont much affect present number seats at MNM-TPJ but they have to do justification by giving RLWL

5735 views
Jun 29 2015 (16:22)
Hyderabad Karnataka needs a dedicated train to SBC*^~   9687 blog posts   497 correct pred (74% accurate)
Re# 1527619-5            Tags   Past Edits
Not needed till QLN , till SCT will be fine. QLN will get a bunch of trains once GC gets done. Super mail , QLN-RMM, QLN-NCR, QLN-CBE . More over if it's till QLN, Then ur wish of giving good quota to TPJ will be in a problem

5631 views
Jun 29 2015 (16:55)
Science is better than Engineering and Technology*^~   13737 blog posts   2 correct pred (100% accurate)
Re# 1527619-6            Tags   Past Edits
I dont think SCT will get train apart from pothigai so if silambu extended means it will naturally go as QLN MS

6113 views
Jun 29 2015 (17:03)
Legendary Boat Mail should be given with WDP4B   1311 blog posts   148 correct pred (61% accurate)
Re# 1527619-7            Tags   Past Edits
தினத்தந்திக்கு என்ன இந்த திடீர் பாசம் ?

5682 views
Jun 29 2015 (17:36)
Hyderabad Karnataka needs a dedicated train to SBC*^~   9687 blog posts   497 correct pred (74% accurate)
Re# 1527619-8            Tags   Past Edits
Mdu should develop more yards in its jurisdiction ,

5445 views
Jun 29 2015 (20:34)
Science is better than Engineering and Technology*^~   13737 blog posts   2 correct pred (100% accurate)
Re# 1527619-9            Tags   Past Edits
MDU is far better than all divisions bro. TPJ should improve KKDI and keep silambu PM at KKDI.

5476 views
Jun 29 2015 (21:22)
srinivasvasanthi~   3844 blog posts   13 correct pred (50% accurate)
Re# 1527619-10            Tags   Past Edits
Madurai division operates 6 pairs of up and down daily passenger ( without sunday off in this section and no cancellation of day time passenger services for maintenance in Madurai division day trains cancellation ) in Kollam - Punalur section .This section was recently opened for the passenger traffic in the same Madurai division after the Manamadurai - Virudhunagar section.People in these area should be seriously struggled in Virudhunagar Jn and Manamadurai Jn for additional trains in Manamadurai-Virudhunagar section.

5239 views
Jun 29 2015 (22:36)
Science is better than Engineering and Technology*^~   13737 blog posts   2 correct pred (100% accurate)
Re# 1527619-11            Tags   Past Edits
for ur Kind information revenue of PUU QLN stretch is greater than TPJ MNM stretch itself.

Jun 29 2015 (22:43)
Legendary Boat Mail should be given with WDP4B   1311 blog posts   148 correct pred (61% accurate)
Re# 1527619-12            Tags   Past Edits
That's true! MDU division seriously ignores not only the MNM- VPT stretch, but also the whole stretch from TPJ- PDKT- KKDI- MNM- APK- VPT. It has not been used after gauge conversion. Not used means, not even to 5%. Only goods trains can be seen and that too very rarely. TPJ division operates that TPJ- KKDI DEMU to VPT on humanitarian basis. We need a day time passenger from TPJ to SCT via PDKT, KKDI, MNM, APK , VPT and SVSK for now which then can be extended to Nagore or Karaikkal or Velankanni.
Page#    Showing 1 to 20 of 25 News Items  next>>

Scroll to Top
Scroll to Bottom


Go to Desktop site