Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 #
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt

RailCal app

site support

Everyone is a gangster (Rajdhani, Shatabdi, Tejas) until the real Gangsta (Vande Bharat) walks in 😂 - Mushfique Khalid

Search Forum
<<prev entry    next entry>>
Blog Entry# 2991013
Posted: Jan 11 2018 (16:28)

24 Responses
Last Response: Jan 11 2018 (22:56)
General Travel
5458 views
4

Jan 11 2018 (16:28)   TJ/Thanjavur Junction (5 PFs)
netravathiexp~   11036 blog posts
Entry# 2991013            Tags  
#Tanjore MPs Demand..
தஞ்சாவூர்-சென்னைக்கு பகல்நேர அதிவிரைவு ரயில் இயக்க வேண்டும்: ரயில்வே அமைச்சரிடம் அதிமுக எம்பி நேரில் மனு
தஞ்சாவூர் - சென்னை இடையே பகல்நேர அதிவிரைவு ரயிலை இயக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் கே.பரசுராமன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தில்லியில் அமைச்சர் பியூஷ் கோயலை அவரது அலுவலகத்தில் திங்கள்கிழமை நேரில் சந்தித்த அவர், தனது தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய ரயில்வே திட்டங்கள் தொடர்பான முன்மொழிவை அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு புதிதாக பகல் நேர அதிவிரைவு ரயிலை இயக்க வேண்டும். தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை இடையே புதிதாக அகல ரயில் வழித்தடம் அமைக்கவும், பட்டுக்கோட்டை - மன்னார்குடி பாலப் பணியை விரைவுபடுத்தவும் நடவடிக்கை வேண்டும். பேராவூரணி மற்றும்
...
more...
புதுக்கோட்டை வழியாக காரைக்குடி - திருவாரூருக்கு அகலப் பாதைப் பணியை விரைவுபடுத்த வேண்டும். தஞ்சாவூர்-அரியலூர் வழித்தடத்தில் புதிதாக அகலப் பாதை அமைக்க வேண்டும். தாம்பரம் - செங்கோட்டைக்கு தஞ்சாவூர் வழியாக தாற்காலிகமாக இயக்கப்படும் ரயிலை வணிகர்கள், விவசாயிகள், அலுவலகம் செல்வோர், தினக்கூலி தொழிலாளர்கள், மாணவர்கள் நலன் கருதி நிரந்தரமாக இயக்க வேண்டும்.தஞ்சாவூர்- ஆலக்குடி இடையே உள்ள ரெட்டிபாளையத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க வேண்டும். கும்பகோணம், சிதம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பதி, புணே, மும்பை வழியாக செல்லும் வகையில் தஞ்சாவூர்- மும்பை அதிவிரைவு ரயிலை இயக்க வேண்டும். அதேபோன்று, திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, பழனி வழியாக தஞ்சாவூர்- கோயம்புத்தூருக்கு புதிய ரயிலை அறிமுகப்படுத்த வேண்டும். மேற்கண்ட ரயில் வழித்தடங்கள் வழியாக பழனிக்கு ரயில் சேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று, முன்னாள் குடியரசுத் தலைவரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், ராமேசுவரத்தில் இருந்து மன்னார்குடி, காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர் வழியாக சென்னை வரை செல்லும் வகையில் பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க வேண்டும். தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மின் படிக்கட்டுகள் வசதி ஏற்படுத்த வேண்டும். திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூர், நீடாமங்கலம், அதிராமபட்டினம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் முன்பதிவு மையம் அமைக்க வேண்டும். பூதலூர் ரயில் நிலையத்தில் தஞ்சாவூர் - திருச்செந்தூர், ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து பரசுராமன் எம்.பி. செவ்வாய்க்கிழமை கூறுகையில், "தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தொடர்புடைய 23 கோரிக்கைகளை ரயில்வே அமைச்சரிடம் முன்வைத்துள்ளேன். அவற்றில் பூதலூரில் ரயில் நின்று செல்லவும், தஞ்சை - சென்னை இடையே பகல்நேர அதிவிரைவு ரயில் விடக் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன. நான் முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். மேலும், தஞ்சாவூர் ரயில் நிலையத்தின் தரத்தை மேம்படுத்துது, நகரும் மின் படிக்கட்டுகள் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார். தஞ்சாவூர்- திருச்சி இரட்டை அகலப் பாதை திட்டப் பணிகளையும் விரைவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்'என்றார்

Translate to English
Translate to Hindi

25 Posts

1394 views
0

Jan 11 2018 (22:28)
K.V.A.~
K.V.A.~   14718 blog posts
Re# 2991013-26              
Typo error..PM by CR nu sonnen
Translate to English
Translate to Hindi

1369 views
0

Jan 11 2018 (22:30)
K.V.A.~
K.V.A.~   14718 blog posts
Re# 2991013-27              
Aaahn.....this news came when uzhavn rake was idle at TJ....eppo PM kaaga TPJ pogudu,,,,so tj sa by uzhavan rake kastam......new train daan venum
Translate to English
Translate to Hindi

1817 views
0

Jan 11 2018 (22:46)
Revanth~   697 blog posts
Re# 2991013-28              
Y kastam uzhavan tj ku 6.10 ku varuthu so Tj salem exp tj lenthu mg 7.30 kelambuna kuda noon 12 ku lam salem poidum so salem la maintenance pannitu eve 3.30 kelambuna 7.30 ku elam tnj vanthrulam...so whats problem for RSA.....
Translate to English
Translate to Hindi

1925 views
2

Jan 11 2018 (22:56)
Revanth~   697 blog posts
Re# 2991013-29              
1 compliments
Ella politics
Ithula mumbai connectivity ilama matirukathu TANJORE KUMBAKONAM than bcz of KIK LTT EXP FOR MAINLINE expect tj and kmu and CHORDLINE having MDU LTT EXP
bcz Major delta distircts head TANJORE KU NO CONNECTIVITY .......enna koduma sir ithu...
Translate to English
Translate to Hindi
Scroll to Top
Scroll to Bottom
Go to Desktop site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy