PNR Ref
 PNR Req
 Blank PNRs
 Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 Bookmarks
 Rating
 Correct
 Wrong
 Stamp
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt

quiz & poll - Timepass for curious minds

Western Railway :- Dil Bole Baar Baar WR. WR - Abdul Rehman

Search News
<<prev entry    next entry>>
News Entry# 393020
Oct 10 2019 (18:11) திருவாரூரில் இருந்து திருச்சிக்கு அதிகாலையில் ரயில் விட வேண்டும் உபயோகிப்பாளர் சங்கம் வலியுறுத்தல் (www.dinakaran.com)
New/Special Trains
SR/Southern
0 Followers
24798 views

News Entry# 393020  Blog Entry# 4454095   
  Past Edits
Oct 10 2019 (18:11)
Station Tag: Velankanni/VLNK added by Kamban Express~/1069947

Oct 10 2019 (18:11)
Station Tag: Karaikal/KIK added by Kamban Express~/1069947

Oct 10 2019 (18:11)
Station Tag: Nagore/NCR added by Kamban Express~/1069947

Oct 10 2019 (18:11)
Station Tag: Nagappattinam Junction/NGT added by Kamban Express~/1069947

Oct 10 2019 (18:11)
Station Tag: Kizhvelur/KVL added by Kamban Express~/1069947

Oct 10 2019 (18:11)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by Kamban Express~/1069947

Oct 10 2019 (18:11)
Station Tag: Thanjavur Junction/TJ added by Kamban Express~/1069947

Oct 10 2019 (18:11)
Station Tag: Thiruvarur Junction/TVR added by Kamban Express~/1069947
திருவாரூர், அக்.10: தமிழகத்தின் பிரதான நகரங்களில் ஒன்றாக திருச்சி விளங்கி வருகிறது. கிழக்கு டெல்டா மாவட்ட பகுதிகள் குறிப்பாக நீடாமங்கலம், கொரடாச்சேரி, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், நாகூர், வேளாங்கண்ணி போன்ற பகுதிகளிலிருந்து ஆடைகள் வாங்குவதற்கோ, மருத்துவ மேல் சிகிச்சைக்காகவோ, பாஸ்போர்ட் மற்றும் பல்கலைகழகம், கல்லூரிகள், விமான நிலையம், முக்கிய அரசு அலுவலகங்களுக்கு செல்பவர்களுடைய எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. திருவாரூர் நகரில் புதிய பேருந்து நிலையம் சென்றுதான் பஸ் ஏறி திருச்சி செல்ல வேண்டும் என்பதால் மக்கள் ரயில் பயணத்திற்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். ஏனெனில் நகரின் மையத்தில் ரயில்நிலையம் அமைந்துள்ளது. தற்போது காரைக்காலில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் பயணிகள் ரயில்தான் முதல் ரயிலாக உள்ளது. இந்த ரயில் திருவாரூரிலிருந்து காலை 8.15 மணிக்கு திருச்சிக்கு புறப்படுகிறது. அநேக நாட்கள் இந்த ரயில் மதியம் 12.30 மணியை கடந்துதான் திருச்சிக்கு செல்கிறது. திருச்சியில் இருந்து மாலை 4.30க்கு காரைக்கால் செல்லும் ரயில் உள்ளது.
இடைப்பட்ட நேரத்தில் மக்களால் எதையும் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. நோய்வாய்ப்பட்டவர்கள், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் போன்றவர்களுக்கு ரயில் பயணம்தான் ஏற்றதாக உள்ளது. முக்கிய காரணம் கழிவறை
...
more...
வசதி. தவிர இன்றைய சூழலில் பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவும் ஒரு காரணமாகும். இதை கருத்தில் கொண்டு அதிகாலையில் திருவாரூரிலிருந்து திருச்சிக்கு ரயில் இயக்க வேண்டும் என பல வருடங்களாக நாங்கள் கோரிக்கை விடுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து பரிந்துரைத்தும் தென்னக ரயில்வே மக்கள் நலனுக்கான இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. அனைத்து மக்களையும் கவனத்தில் கொண்டு தென்னக ரயில்வே அதிகாலையில் திருவாரூரிலிருந்து திருச்சிக்கு ஒரு ரயிலையும், அதேபோல் இரவு 7.30க்கு திருச்சியிலிருந்து திருவாரூர் நகருக்கு ஒரு ரயிலும் இயக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் பொதுமக்கள் பலன் பெறுவதோடு ரயில்வே துறையினருக்கும் வருவாய் அதிகரிக்கும். இவ்வாறு பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
Scroll to Top
Scroll to Bottom
Go to Desktop site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy