Full Site Search  
Tue Jul 25, 2017 08:09:24 IST
PostPostPost Stn TipPost Stn TipUpload Stn PicUpload Stn PicAdvanced Search
Large Station Board;
Small Station Board;
Large Station Board;

KKDI/Karaikkudi Junction (5 PFs)
காரைக்குடி சந்திப்பு     कारैक्कुडि जंक्शन

Track: Single Diesel-Line

Type of Station: Junction
Number of Platforms: 5
Number of Halting Trains: 18
Number of Originating Trains: 4
Number of Terminating Trains: 4
Ariyakudi Road
State: Tamil Nadu
Elevation: 89 m above sea level
Zone: SR/Southern
Division: Madurai
2 Travel Tips
No Recent News for KKDI/Karaikkudi Junction
Nearby Stations in the News

Rating: 3.6/5 (14 votes)
cleanliness - good (2)
porters/escalators - good (2)
food - good (2)
transportation - good (2)
lodging - average (1)
railfanning - average (1)
sightseeing - good (2)
safety - good (2)

Nearby Stations

DKO/Devakottai Road 5 km     KTYR/Kottaiyur 6 km     KNPL/Kandanur Puduvayal 6 km     CTND/Chettinad 12 km     KAL/Kallal 18 km     VMM/Valaramanikkam 18 km     TYM/Tirumayam 21 km     ATQ/Arantangi 28 km     NMN/Namanasamudram 31 km     NTS/Nattrasankottai 35 km    

Station News

Page#    Showing 1 to 20 of 22 News Items  next>>
Apr 28 2017 (12:49)  *5 ஆண்டுகளுக்கு மேல் நடக்குது : ஆமை வேகத்தில் காரைக்குடி - பட்டுக்கோட்டை ரயில்பாதை* (m.dinakaran.com)
News Entry# 301042   Blog Entry# 2254163     
   Tags   Past Edits
Apr 28 2017 (12:50)
Station Tag: Pattukottai/PKT added by podhigai charal~/951131

Apr 28 2017 (12:50)
Station Tag: Karaikkudi Junction/KKDI added by podhigai charal~/951131

Posted by: podhigai charal~  13 news posts
*5 ஆண்டுகளுக்கு மேல் நடக்குது : ஆமை வேகத்தில் காரைக்குடி - பட்டுக்கோட்டை ரயில்பாதை*
Karaikudi - Pattukottai railroad at Turtle pace
பதிவு செய்த நேரம்:2017-04-28 10:58:03
காரைக்குடி: காரைக்குடி - பட்டுக்கோட்டை ரயில்பாதை பணியை இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி கொடுத்தும் தண்டவாளங்கள் அமைக்கும் பணி கூட முடியாத நிலையில் உள்ளது. ராமேஸ்வரம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக மயிலாடுதுறை முதல் காரைக்குடி வரை மீட்டர்கேஜ் பாதையில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக ரயில்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் மயிலாடுதுறை முதல் காரைக்குடி
...
more...
வரை 187 கி.மீ வரை அகலபாதையாக மாற்ற கடந்த 2007ம் ஆண்டு வரைவு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு கடந்த 2011 செப்டம்பர் மாதம் ரூ. 705 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இதில் மயிலாடுதுறை முதல் திருவாரூர் வரை பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. மீதமுள்ள 140 கி.மீ அகலரயில் பாதையாக மாற்றப்பட்டு வருகிறது. இதன் முதல்கட்டமாக காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரை 73 கி.மீ க்கு பணிகள் துவங்க கடந்த 2012ம் ஆண்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரயில் தண்டவாளங்கள் மற்றும் சிலிப்பர் கட்டைகள் அகற்றப்பட்டன. அதன்பிறகு சிமென்ட் சிலிப்பர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. நிதி பற்றக்குறையால் பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில் காரைக்குடி முதல் திருவாரூர் வரை 140 கி.மீ அகலரயில் பாதையாக மாற்ற 1300 கோடிரூபாயாக நிதி உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு கூடுதலாக 85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இப்பாதையில் உள்ள 255 சிறு பாலங்களில் 243 மேல் பணி முடிக்கப்பட்டுள்ளது. 14 பெரிய பாலங்களில் 4க்கு மேல் பணி முடிந்துள்ளது. கிராவல் மண் 15.64 லட்சம் கியூபிக் மீட்டர் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதில் 9.33 லட்சம் கியூபிக் மீட்டர் மேல் மண் எடுக்கப்பட்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது. காரைக்குடியில் இருந்து கண்டனூர் ஸ்டேஷன் வரை சிலிப்பர் கட்டைகள் அமைத்து தண்டவாளங்கள் அமைக்கும் பணி முழுவேகத்தில் நடக்கிறது. கண்டனூரில் இருந்து பட்டுக்கோட்டை வரை வரை செல்லும் பாதை ஆமைவேகத்தில் நடப்பதால் பணிகள் முடிய இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பணியாளர்கள் சிலர் கூறுகையில், “ கடந்த ஆண்டு இப்பாதை பணிகளை முதன்மை நிர்வாக பொறியாளர் ஆய்வு செய்து காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரை 73 கி.மீ 2017 மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும். பட்டுக்கோட்டை முதல் திருவாரூர் வரை 67 கி.மீ அகலரயில் பாதை 2018 மார்ச் மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார். ஆனால், காரைக்குடி பட்டுக்கோட்டை இடையேயான பணிகளில் மண் கொண்டு நிரப்பும் பணிகள் மட்டுமே முடிந்த நிலையில் மீதமுள்ள பணிகள் இந்த ஆண்டுக்குள் நிறைவடையாது. அதிகாரிகள் பார்வையிட வரும் போது பெயரளவில் தெரிவித்துவிட்டு செல்வதோடு சரி, அதன்பிறகு பணிகள் ஆமைவேகத்தில் தான் நடந்து வருகிறது. இதேவேகத்தில் நடந்தால் காரைக்குடி முதல் திருவாரூர் இடையேயான பணிகள் முடிய இன்னும் 5 ஆண்டுகள் கூட ஆகலாம்” என்றனர்.
- See more at: click here

1793 views
Apr 28 2017 (12:58)
sGs*^~   6315 blog posts   9963 correct pred (77% accurate)
Re# 2254163-1            Tags   Past Edits
"இதில் மயிலாடுதுறை முதல் திருவாரூர் வரை பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது." Its operational. News having so much wrong information. KKDI PKT GC also done.

1789 views
Apr 28 2017 (13:06)
एक भारतीय रेल सेवा   47 blog posts   19 correct pred (88% accurate)
Re# 2254163-2            Tags   Past Edits
News great ..

1943 views
Apr 28 2017 (13:07)
emailconnect2hari   738 blog posts   1 correct pred (50% accurate)
Re# 2254163-3            Tags   Past Edits
MV-TVR mudinchu 5 years aguthu....
Mar 27 2017 (12:15)  சென்னை - ராமேஸ்வரம் ரயில் நேரம் மாற்றம் (www.dinakaran.com)
back to top
New Facilities/TechnologySR/Southern  -  

News Entry# 297783     
   Tags   Past Edits
Mar 27 2017 (12:15)
Station Tag: Karaikkudi Junction/KKDI added by emailconnect2hari/1069947

Mar 27 2017 (12:15)
Station Tag: Manamadurai Junction/MNM added by emailconnect2hari/1069947

Mar 27 2017 (12:15)
Station Tag: Rameswaram/RMM added by emailconnect2hari/1069947

Mar 27 2017 (12:15)
Train Tag: Boat Mail(Rameswaram Express)/16101 added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  302 news posts
மானாமதுரை : சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றப்பட்டதால் தினமும் கல்வி மற்றும் வேலைக்கு செல்லும் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 16101) தினமும் இரவு 9.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு திருச்சி வந்தபின் பகல் 11.30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றது. திருச்சியில் ராமேஸ்வரம் செல்லும் வழியில் புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் இந்த ரயிலில் தான் கடந்த ஒன்பது ஆண்டுகளாக சென்று வந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் இந்த ரயிலின் புறப்படும் மற்றும் போய்ச்சேரும் நேரம் மாற்றப்பட்டது. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து இதுவரை இரவு 9.40 மணிக்கு புறப்பட்ட ரயில் பிப்.10ம் தேதி முதல் இரவு 7.15 மணிக்கு புறப்பட துவங்கியது. அதேபோல் ராமேஸ்வரத்திற்கு மறுநாள் பகல் 11.30 மணிக்கு பதிலாக காலை 7.15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைகிறது.
நேரம்
...
more...
மாற்றியமைக்கப்பட்டதால் இந்த ரயிலில் பயணம் செய்து வந்த சீசன் டிக்கெட் பயணிகளான பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் பலருக்கு தங்கள் பணிகளுக்கு செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மாற்றாக தினமும் காலை 6.50 மணிக்கு திருச்சியில் புறப்படும் ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து சீசன் டிக்கெட் பயணிகள் நாராயணன், சங்கரன் கூறுகையில், “ சென்னையில் இருந்து தினமும் இரவு 9.40 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் சிவகங்கைக்கு காலை 8.15 மணிக்கும் மானாமதுரைக்கு 8.40க்கும் வரும். இந்த ரயிலில் சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பயணிகள் ராமநாதபுரத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு பத்து மணிக்குள் சென்று வந்தனர்.
அதே போல புதுக்கோட்டை பகுதியில் இருந்தும் காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்திற்கு ஏராளமான மாணவர்கள் வந்தனர். மேலும் பழைய நேரப்படி இயங்கியபோது பயணிகள் குறித்த நேரத்தில் அடுத்தடுத்த ஊர்களுக்கு சென்றனர். தற்போது நேரம் மாற்றப்பட்டுள்ளதால் ரயிலில் செல்ல முடியாமல் பஸ்களில் செல்லவேண்டிய நிலை உள்ளது. இதனால் மாதம் தோறும் பயணத்திற்கான செலவு அதிகரித்துள்ளது. சிரமமும் ஏற்பட்டுள்ளது. எனவே திருச்சியில் இருந்து காலை 6.50 மணிக்கு ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலை காலை 5.50 க்கு புறப்படுமாறு மாற்றியமைத்தால் சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி பகுதியை சேர்ந்த சீசன்டிக்கெட் பயணிகளுக்கு வசதியாக இருக்கும்” என்றனர்.
Mar 27 2017 (11:24)  சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை வாரம் 3 முறை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் தென்னக ரெயில்வே கோட்ட மேலாளர் தகவல் (www.dailythanthi.com)
back to top
Rail BudgetSR/Southern  -  

News Entry# 297782     
   Tags   Past Edits
Mar 27 2017 (11:24)
Station Tag: Pattukottai/PKT added by emailconnect2hari/1069947

Mar 27 2017 (11:24)
Station Tag: Karaikkudi Junction/KKDI added by emailconnect2hari/1069947

Mar 27 2017 (11:24)
Station Tag: Manamadurai Junction/MNM added by emailconnect2hari/1069947

Mar 27 2017 (11:24)
Train Tag: Silambu Express/16181 added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  302 news posts
செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ள சிலம்பு ரெயிலை வாரம் 3 முறை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்
மார்ச் 27, 04:15 AM
காரைக்குடி,
தூய்மை இந்தியா திட்டம்
காரைக்குடியில் அகில இந்திய ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் தூய்மை இந்தியா திட்ட முகாம் நடைபெற்றது. ஓய்வூதியர்கள் சம்மேளன தலைவர்
...
more...
அடைக்கலம் வரவேற்றார். கிளை தலைவர் சுந்தரராஜூலு முன்னிலை வகித்தார். இதில் கலந்துகொண்ட தென்னக ரெயில்வே மதுரை கோட்ட மேலாளர் சுனில்குமார் கர்க் ஓய்வூதியர்களுடன் ரெயில் நிலையத்தை சுத்தமாக வைத்துக்கொள்வோம் என்ற உறுதிமொழி எடுத்தார். பின்னர் ரெயில் நிலையம் முன்பு மரக்கன்றுகள் நட்டு, ரெயில் நிலையத்தில் சுத்தம் செய்யும் பணியை அவர் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து சுனில்குமார் கர்க் நிருபர்களிடம் கூறியதாவது:–
சென்னையில் இருந்து காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக செங்கோட்டைக்கு வாரம் 2 முறை இயக்கப்பட்டு வரும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில், மக்களிடம் உள்ள வரவேற்பை பொறுத்து வாரத்திற்கு 3 முறை இயக்க ரெயில்வே மேல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அகல ரெயில் பாதை பணி
சென்னை–ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலின் நேரம், பயணிகள் கேட்டுக்கொண்டததால் தான் மாற்றியமைக்கப்பட்டது. மீண்டும் நேரத்தை மாற்றம் செய்ய வேண்டுமானால், அதை ரெயில்வே ஆலோசனைக்குழு கூட்டத்தில் கருத்து தெரிவித்து அதன்பிறகே மாற்ற இயலும். தற்போது நடைபெற்று வரும் காரைக்குடி–பட்டுக்கோட்டை அகல ரெயில் பாதை பணிகள் வருகிற 2018–ம் ஆண்டிற்குள் நிறைவு பெற வாய்ப்புள்ளது. இந்த பணிகள் முழுவதும் முடிந்த பின்னர் மீட்டர்கேஜ் ரெயில் பாதையாக இருந்தபோது இயக்கப்பட்ட ரெயில்கள் முதற்கட்டமாக இயக்கப்படும்.
மன்னார்குடி–திருச்சி வரை இயக்கப்படும் பயணிகள் ரெயிலில் கழிப்பறை இல்லை என்று புகார்கள் வருகின்றன. இந்த பயணிகள் ரெயிலான டெமு ரெயிலில் கழிப்பறை, குடிதண்ணீர் வசதி செய்யப்படாது. அதற்கு பதிலாக ஏதேனும் ஒரு ரெயில் நிலையத்தில் கூடுதலாக அரை மணி நேரம் இந்த ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹவுரா–திருச்சி ரெயிலை காரைக்குடி வரை நீட்டிக்க வாய்ப்பு குறைவு. ஏனெனில் இந்த ரெயில் நீண்ட தூரம் ரெயிலாக உள்ளதால் அந்த ரெயிலை பராமரிப்பு வசதிக்கான பிட் அமைப்பு காரைக்குடி ரெயில் நிலையத்தில் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Aug 29 2016 (19:57)  Tiruvarur-Karaikudi gauge conversion work lags (www.google.co.in)
back to top
New Facilities/TechnologySR/Southern  -  

News Entry# 278481   Blog Entry# 1976126     
   Tags   Past Edits
Aug 29 2016 (7:57PM)
Station Tag: Karaikkudi Junction/KKDI added by RF Z*^~/367496

Aug 29 2016 (7:57PM)
Station Tag: Thiruvarur Junction/TVR added by RF Z*^~/367496

Posted by: Railfan Z*^~  39 news posts
Trichy: The Tiruvarur-Pattukottai-Aranthangi-Karaikudi railway section gauge conversion work, which was taken up by the railway construction wing four years ago, is causing much inconvenience to thousands of commuters residing along the stretch.
.
Passengers have expressed displeasure over the inordinate delay in completing the project within the stipulated four years. Railway authorities are saying the project will take two more years to complete, even though work has gathered pace in recent days. This was the last meter gauge section that was taken up for the conversion in 2012.
.
...
more...

The 168-km section passing through Thiruthuraipoondi, Muthupettai, Adhirampattinam, Pattukottai, Peravurani, Aranthangi was established in October 20, 1902. Traffic on the section was closed in October 19, 2012 to take up gauge conversion work. The Tiruvarur-Pattukottai passenger was the last train that was operated on the stretch. Southern railway's construction wing took up the work at an estimated cost of Rs 507 crore.
.
Passengers residing along the section had been using the main line to reach Chennai for more than 110 years. The railings and sleeper blocks had been removed from the existing stretch. Along with track laying work, construction of new station buildings and other developmental work, including widening of small culverts and construction of new bridges, were also undertaken. However, the work was proceeding at a snail pace, reportedly due to funds crunch. Even after the scheduled four years, hardly 50 per cent of the work has been completed so far.
.
According to officials, a total of 28 major bridges and 250 culverts have to be constructed. Of these, more than 50 per cent of the work has been completed, they said.
RS Saravanan, a resident of Pattukottai in Thanjavur district, said he had been travelling along this main line to Chennai for many years. For the past four years, commuting has been an ordeal for him.
.
"Since there is no proper train connectivity, people residing along the section are forced to use private buses for travelling to Chennai. As many as 100 moffusil buses are being operated to Chennai from these area, to tap the good patronage. If we opt for train to reach the destination, we have to travel either to Thanjavur, Kumbakonam, Mayiladuthurai or Trichy. However, we thought that the ordeal would come to an end soon. But it seems there is no sign of that," he said.
.
The Pattukottai-Thanjavur new line, announced 35 years back and proposed to be set up at an estimated cost of Rs 120 crore, also remaining only on paper, he further said. It would be more convenient for the commuters if Pattukottai-Thanjavur new line project would be executed along with the conversion work, he added.
Meanwhile, a senior official from the construction wing said the work was delayed due to funds crunch. However, he hoped it would be completed before March 209, now that it has gathered pace.

3173 views
Aug 30 2016 (10:38)
Narendra yadav   161 blog posts
Re# 1976126-1            Tags   Past Edits
Jul 28 2016 (14:37)  காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை (www.dinamani.com)
back to top
Other NewsSR/Southern  -  

News Entry# 275167     
   Tags   Past Edits
Jul 28 2016 (2:37PM)
Station Tag: Tiruturaipundi Junction/TTP added by gvsureshmng/670090

Jul 28 2016 (2:37PM)
Station Tag: Mannargudi/MQ added by gvsureshmng/670090

Jul 28 2016 (2:37PM)
Station Tag: Karaikkudi Junction/KKDI added by gvsureshmng/670090

Jul 28 2016 (2:37PM)
Station Tag: Pattukottai/PKT added by gvsureshmng/670090

Jul 28 2016 (2:37PM)
Station Tag: Thanjavur Junction/TJ added by gvsureshmng/670090

Posted by: gvsureshmng  7 news posts
காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பட்டுக்கோட்டை சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கூட்டத்தில், பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் வழித்தடத்தில் புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்வதற்காக ஆத்திக்கோட்டை, பொன்னவராயன்கோட்டை ஆகிய கிராமங்களைத் தத்தெடுப்பது.
உள்ளாட்சித் துறை, பொது சுகாதாரத் துறை மூலம் டெங்கு கட்டுப்பாடு முன்னேற்பாட்டுப் பணிக்காக பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த கிராமங்களில்
...
more...
உடனடியாக ஒட்டுமொத்த தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் பகுதிகளில் போதை சாக்லெட்டுகள், தரமற்ற குளிர்பானங்கள், கலப்பட தேயிலைத்தூள், கார்பைட் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டுள்ள பழ வகைகளைக் கண்டறிந்து அழிக்க வேண்டும்.
பட்டுக்கோட்டை நகரில் ஒலிமாசினை தடுக்க வாணவேடிக்கைகள், வாகனங்களின் காற்று ஒலிப்பான்கள், கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு சங்கத் தலைவர் ஏ.ஆர். வீராசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஆர். வேணுகோபாலன், ஜி. ஜெயசீலன், ரெஜினால்ட் செல்வகுமார், வ. விவேகானந்தம், கந்த. கல்யாணசுந்தரம், மா. வீரபத்திரன், லாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Page#    Showing 1 to 20 of 22 News Items  next>>

Scroll to Top
Scroll to Bottom


Go to Desktop site
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.