Full Site Search  
Mon Nov 20, 2017 01:06:50 IST
PostPostPost Stn TipPost Stn TipUpload Stn PicUpload Stn PicAdvanced Search

MPA/Manaparai (3 PFs)
மணப்பாறை     मनपारै

Track: Double Electric-Line

Type of Station: Regular
Number of Platforms: 3
Number of Halting Trains: 14
Number of Originating Trains: 0
Number of Terminating Trains: 0
Manapparai
State: Tamil Nadu
Elevation: 160 m above sea level
Zone: SR/Southern
Division: Madurai
 
 
No Recent News for MPA/Manaparai
Nearby Stations in the News

Rating: /5 (0 votes)
cleanliness - n/a (0)
porters/escalators - n/a (0)
food - n/a (0)
transportation - n/a (0)
lodging - n/a (0)
railfanning - n/a (0)
sightseeing - n/a (0)
safety - n/a (0)

Nearby Stations

CII/Chettiyapatti 7 km     SMDM/Samudram 9 km     VPJ/Vaiyampatti 14 km     KLS/Kolatur 17 km     KFC/Kalpattichatram 23 km     PUG/Punggudi 27 km     AYR/Ayyalur 34 km     TPJ/Tiruchchirappalli Junction 36 km     TPE/Tiruchchirappalli Palakkarai 38 km     TP/Tiruchchirappalli Fort 39 km    

Station News

Page#    Showing 1 to 12 of 12 News Items  
Mar 27 2017 (12:17)  மணப்பாறை- கல்பட்டி இருவழிப்பாதை பணி நிறைவு இன்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் (www.dinakaran.com)
back to top
New Facilities/TechnologySR/Southern  -  

News Entry# 297787     
   Past Edits
Mar 27 2017 (12:17)
Station Tag: Kalpattichatram/KFC added by emailconnect2hari/1069947

Mar 27 2017 (12:17)
Station Tag: Manaparai/MPA added by emailconnect2hari/1069947
Stations:  Manaparai/MPA   Kalpattichatram/KFC  
 
 
மணப்பாறை : மணப்பாறையில் இருந்து கல்பட்டி வரை இரு வழிப்பாதைக்கான புதிய ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து இன்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது. மணப்பாறையிலிருந்து திண்டுக்கல் வரை இருவழிப் பாதைக்கான புதிய ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. முதற்கட்டமாக திண்டுக்கல்லிலிருந்து தாமரைப்பாடி வரையிலான சுமார் 10 கிமீ தூரத்திற்கு பணிகள் நிறைவடைந்து ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டது.
2வது கட்டமாக மணப்பாறையிலிருந்து கல்பட்டி வரையிலான சுமார் 30 கிமீ தூரத்திற்கான புதிய ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றது. இதையடுத்து இன்ஜினை மட்டும் கல்பட்டியிலிருந்து மணப்பாறை வரை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இப்பணிகளை நிர்மாணித்து வரும் ரயில் விகாஸ் நிகர் லிமிடெட்டின் உதவி பொது மேலாளர் சங்கர், துணைமேலாளர் சண்முகவேல், டிராக் ஆய்வாளர் மாடசாமி, திட்ட மேலாளர் சிலம்பரசன் உள்ளிட்ட அதிகாரிகள் இப்பணியினை மேற்பார்வையிட்டனர்.
மார்ச்
...
more...
31ம் தேதி இப்பாதை ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்ட உள்ளது. அன்று ரயில்வே பாதுகாப்புத்துறை ஆணையர் மற்றும் உயர்மட்ட பொறியாளர்கள் புதிய வழித்தடத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்த உள்ளனர்.
மணப்பாறை ரெயில் நிலையத்தில் நேற்று முதல்முறையாக இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று சென்றது.
மார்ச் 26, 04:30 AM
மணப்பாறை,
இதனை வரவேற்கும் விதமாக பொதுமக்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்
வட
...
more...
மாநிலங்களில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இரு மார்க்கத்திலும் செல்லும் ரெயில்களின் பிரதான வழித்தடமாக மணப்பாறை ரெயில் நிலையம் உள்ளது. ஆனால் மணப்பாறை ரெயில் நிலையத்தில் பாண்டியன் மற்றும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இந்நிலையில் மணப்பாறையில் இருந்து மதுரைக்கு தினமும் பல்வேறு தொழில் மற்றும் வேலை நிமித்தமாக பலர் செல்கின்றனர். மேலும் வழக்கறிஞர்களும் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு செல்கின்றனர். எனவே அவர்கள் சென்று வர வசதியாக திருச்சியில் இருந்து நெல்லைக்கு செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை மணப்பாறை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்களும், அனைத்து கட்சியினரும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மேலும் சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற ரெயில்வே பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய ரெயில்வே துறை மந்திரி சுரேஷ் பிரபுவை, மணப்பாறையை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் சந்தித்து இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மணப்பாறையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். இதுகுறித்து பரிசீலிப்பதாக கூறிய அவர், மார்ச் 25–ந் தேதி முதல் மணப்பாறை ரெயில் நிலையத்தில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்லும் என்று அறிவித்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள், அரசியல் கட்சியினர் பல்வேறு இடங்களிலும் மத்திய மந்திரிக்கும், சிபாரிசு செய்த திருச்சி சிவா எம்.பி.க்கும் நன்றி தெரிவித்து விளம்பர பதாகைகள் வைத்தனர்.
நின்று சென்றது
இந்நிலையில் மந்திரி அறிவித்தபடி நேற்று காலை திருச்சியில் இருந்து நெல்லை நோக்கி சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மணப்பாறை ரெயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி சென்றது. இதையொட்டி முன்னதாக ரெயிலை வரவேற்பதற்காக அனைத்து கட்சியினரும் காலை முதலே மணப்பாறை ரெயில் நிலையத்தில் குவிந்தனர். மேலும் பொதுமக்களும் திரளான வந்திருந்தனர். மணப்பாறை ரெயில் நிலையத்திற்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றதும் அரசியல் கட்சியினர், வழக்கறிஞர்கள் சங்கத்தினர், ஆட்டோ சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஓடிச்சென்று ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கு பொன்னாடை அணிவித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, இனிப்பு வழங்கினர். தொடர்ந்து ரெயிலில் பயணம் செய்த பயணிகளுக்கும் இனிப்பு வழங்கினர்.
மேலும் முதல் நாள் என்பதால் திருச்சியில் இருந்து சிலர் மணப்பாறை வரையிலும், மணப்பாறையில் இருந்து சிலர் திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலிக்கும் அந்த ரெயிலில் பயணம் மேற்கொண்டனர். அந்த ரெயில் இங்கு நின்று செல்ல ஒரு நிமிடம் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முதல் நாள் என்பதால் சிறிது நேரம் கூடுதலாக நின்று சென்றது. ரெயிலை இரண்டு நிமிடம் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் மாலை நேரத்தில் நெல்லையில் இருந்து திருச்சி சென்றபோதும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மணப்பாறை ரெயில் நிலையத்தில் நின்று சென்றது.
Mar 26 2017 (13:27)  தண்டவாளத்தில் திடீர் விரிசல் ரயில்கள் தாமதம் (m.dinakaran.com)
back to top
Crime/AccidentsSR/Southern  -  

News Entry# 297696     
   Past Edits
Mar 26 2017 (13:27)
Station Tag: Manaparai/MPA added by sGs*^~/41440
Stations:  Manaparai/MPA  
Posted by: sGs*^~  251 news posts
 
 
மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி கல்பட்டி சத்திரத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசலை நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த கேங்க்மேன் உடனே கண்டுபிடித்து விட்டார். இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் வந்து விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று அதிகாலை 5 மணிக்கு விரிசல் சரி செய்யப்பட்டது. இருப்பினும் போக்குவரத்தை நிறுத்தாமல் விரிசல் ஏற்பட்ட இடத்தில் ரயில் வேகத்தை குறைத்து இயக்கப்பட்டது. இதனால் அந்த இடத்தை கடந்த 10 ரயில்களும் தாமதமாக சென்றது.
திருச்சி: தெற்கு ரயில்வே சார்பில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில், திருச்சி, விழுப்புரம், விருத்தாசலம் ரயில் நிலையங்களில், ரயில்வே திட்டங்கள் துவக்க விழா நடந்தது. விழாவில், பங்கேற்பதற்காக, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சி வந்தார். தொடர்ந்து, ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நடந்த விழாவில், திருச்சி, பொன்மலையில் இருந்து, டவுன் ரயில் நிலையம் வரையிலான பைபாஸ் ரயில் பாதையை, பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார். அங்கிருந்த படியே, வீடியோ கான்பரன்ஸ் மூலம், விருத்தாசலம் ரயில் நிலையத்தில், கட்டப்பட்டுள்ள முக்கிய பிரமுகர்கள் தங்கும் அறை, பயணிகள் ஓய்வு அறை திறப்பு, விழுப்புரம் திருவெண்ணெய் நல்லூர் இடையிலான புதிய இருவழிப்பாதை ஆகிய திட்டங்களை துவங்கி வைத்தார். நேற்று மாலை, மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு குடும்பத்தினருடன், திருச்சியில் உள்ள ராஜ்யசபா, தி.மு.க., எம்.பி., சிவா வீட்டுக்கு சென்றார். எம்.பி., சிவாவிடம், இழுபறியாக உள்ள ரயில்வே திட்டங்கள் பற்றி கேட்டறிந்த மத்திய அமைச்சர், 'விரைவில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மணப்பாறையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்.
Apr 01 2016 (19:28)  Second line between Trichy and Manapparai opens today - Times of India (timesofindia.indiatimes.com)
back to top
New Facilities/TechnologySR/Southern  -  

News Entry# 263161   Blog Entry# 1787360     
   Past Edits
Apr 01 2016 (7:28PM)
Station Tag: Manaparai/MPA added by ksgopal/36225

Apr 01 2016 (7:28PM)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by ksgopal/36225
Posted by: Gopal*^  3512 news posts
 
 
Second line between Trichy and Manapparai opens today
TNN | Apr 1, 2016, 07.36 AM IST
Madurai: The newly-laid second broad gauge line between Trichy and Manapparai will be opened for traffic from 4pm on April 1. The 36 km long line is part of the 94 km doubling stretch between Dindigul and Trichy. Madurai and Dindigul section already has double lines. Madurai divisional railway manager, Sunil Kumar Garg in a statement here on Thursday has issued a warning advising the general public and people from premises situated adjoining the newly laid
...
more...
line not to come close to the track. Public are alerted to be cautious while approaching the track, unmanned level crossings, station platforms on the Trichy - Manapparai section from 4pm on April 1 onwards. Ahead of commissioning the double line, Madurai railway division had announce a mega line block in the section from March 28 to 31. Trains were cancelled, partially cancelled, diverted and delayed to arrange signalling on the newly-laid line.

2 posts - Fri Apr 01, 2016 - are hidden. Click to open.

8 posts - Sat Apr 02, 2016 - are hidden. Click to open.

3 posts - Sun Apr 03, 2016 - are hidden. Click to open.

2165 views
Apr 04 2016 (07:50)
Bangalore Bidar triweekly needed via Gulbarga*^~   9979 blog posts   497 correct pred (74% accurate)
Re# 1787360-14            Tags   Past Edits
Because of trichy only it gets decent patronage , that TPJ route takes only 70 to 80 minutes extra. By your logic , if howrah mail is extended , even it 'll waste day time ! Why kanyakumari howrah is not filled fully despite giving General quota almost till Trichy ? , first make use of Cape howrah properly
Page#    Showing 1 to 12 of 12 News Items  

Scroll to Top
Scroll to Bottom


Go to Desktop site
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.