பட்டுக்கோட்டை - காரைக்குடி சிறப்பு ரயிலை 10 நாட்களுக்கு மட்டும் இயக்க ரயில்வே அறிவித்துள்ளது. அதன் படி அக்டோபர் 01 வரை மட்டும் இயக்கப்பட உள்ள இந்த ரயிலை வருமானம் இல்லை என காரணம் காட்டி ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து இயக்க மறுக்கிறது. இந்த ரயிலை மானாமதுரை வழியாக மதுரை வரை இயக்கினால் கண்டிப்பாக நல்ல வருமானம் வரும் தடமாக இது அமையும். அக்டோபர் 01க்கு பிறகு ரயில்வே நிர்வாகம் இதை பட்டுக்கோட்டை மதுரை என இயக்க இப்பகுதி மக்கள்,சட்ட பேரவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும்.