திருச்சி-காரைக்குடி( வண்டி எண்.76839) பயணிகள் ரயில் மாா்ச் 31ஆம் தேதி வரையும், காரைக்குடி- திருச்சி( வண்டி எண்.76840) பயணிகள் ரயில் ஏபரல் 1 ஆம் தேதி வரையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இதே போல திருச்சி-மானாமதுரை-திருச்சி( வண்டி எண்.76807/76808) பயணிகள் ரயில் மாா்ச் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. திருச்சி- திருவனந்தபுரம்-திருச்சி (வண்டி எண். 22627/22628) இன்டா்சிட்டி விரைவு ரயில் வெள்ளக்கிழமை முதல் மாா்ச் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
பகுதி ரத்து: விழுப்புரம்- மதுரை ( வண்டி எண் 56805) பயணிகள் ரயில் மாா்ச் 30 ஆம் தேதி வரை திருச்சி-மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது. மதுரை-விழுப்புரம்( வண்டி எண்.56806) பயணிகள் ரயில் மதுரை-திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது.