Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 #
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt

RailCal app

site support

Gatimaan Express: Raftaar meri Pehchaan - Sajid Akhtar

Search Forum
<<prev entry    next entry>>
Blog Entry# 734183
Posted: Apr 26 2013 (07:22)

5 Responses
Last Response: Apr 26 2013 (08:23)
General Travel
2400 views
0

Apr 26 2013 (07:22)   22625/MGR Chennai Central - KSR Bengaluru Double Decker Express | MAS/MGR Chennai Central (12 PFs)
 
selvasssm^~
selvasssm^~   5619 blog posts
Entry# 734183            Tags  
DD article in Dinamalar.
Rs 105 spent by railways for inauguration is high light.
800 passengers travelled from MAS and 760 passengers from SBC on the inaugural day out of 1200/1280 seats capacity.
சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் : துவக்க விழா செலவு, 105 ரூபாய்!
சென்னை:சென்னை
...
more...
சென்ட்ரல் - பெங்களூரு இடையே, இரண்டடுக்கு "ஏசி' ரயில் போக்குவரத்து நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டது. "ரயில் பெட்டியின் உட்கட்டமைப்பு, விமானத்தில் பயணம் செய்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது' என, பயணிகள் தெரிவித்தனர்.
"சென்னை சென்ட்ரல் - பெங்களுரு இடையே, இரண்டடுக்கு "ஏசி' ரயில் இயக்கப்படும்' என, 2012ம் ஆண்டு, ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இரண்டடுக்கு ரயில் போக்குவரத்து, சென்னை சென்ட்ரலில், நேற்று காலை, 7:25 மணிக்கு துவங்கப்பட்டது.
ரயில் நேரம்:
இந்த ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து தினசரி, காலை, 7:25 மணிக்கு புறப்பட்டு, மதியம், 1:30 மணிக்கு, பெங்களூரு சிட்டி ரயில் நிலையம் சென்றடையும். பெங்களூரில் இருந்து மதியம், 2:40 மணிக்கு புறப்பட்டு, இரவு, 8:45 மணிக்கு, சென்னை சென்ட்ரல் வந்தடையும்.இரண்டடுக்கு ரயிலில், 10 "ஏசி' சேர்கார் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும், தலா, 120 பேர், என மொத்தம், 1,200 பேர் பயணம் செய்யலாம். இரண்டடுக்கு "ஏசி' ரயில் என, கூறினாலும், இந்த ரயில் பெட்டிகளில், கீழ்தளம், நடுத்தளம், மேல்தளம் என, மூன்று பிரிவாக இருக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும், கீழ்தளத்தில், 48 இருக்கைகள், வழக்கமான உயரத்தில் (மிடில்), 22 இருக்கைகள், மேல் தளத்தில், 50 இருக்கைகள் என, 120 இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், தத்கலுக்கு, 185 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இந்த ரயில், 6 மணி, 5 நிமிட நேரத்தில் பெங்களூரு சென்றடையும். இரண்டு ஊர்களுக்கும் இடையிலுள்ள தூரம், 362 கி.மீட்டர்; கட்டணம், 470 ரூபாய்.அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் மற்றும் பெங்களூரு கண்ட்டோன்மென்ட் ரயில் நிலையங்களில், இந்த ரயில் நின்று செல்லும். பெங்களூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் போது, பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
பயணிகள் குறைவு:
இரண்டடுக்கு ரயில் துவக்கம் பற்றிய அறிவிப்பு கடந்த, 22ம் தேதி, வெளியானது. எனவே, நேற்று இந்த ரயிலில், 800 பேர் மட்டுமே பயணம் செய்தனர். பெங்களூரில் இருந்து, சென்னை சென்ட்ரலுக்கு ரயில் புறப்படும் போது, 760 பேர் பயணம் செய்தனர்.சென்னை சென்ட்ரலிலிருந்து பெங்களூருக்கு வரும், 27ம் தேதி வரை, "ஹவுஸ்புல்' ஆகி உள்ளது. மற்ற நாட்களில், 300க்கும் மேற்பட்ட இருக்கை வசதிகள் முன்பதிவு செய்யப்படாமல் உள்ளது. பிருந்தாவனம் ரயில் ரத்து: பெங்களூருவில் இருந்து, நேற்று பகல், 2:40 மணிக்கு, இரண்டடுக்கு ரயில் சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரயிலை தொடர்ந்து, அரை மணி நேர கழித்து, பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரில் இருந்து பகல், 3:00 மணிக்கு கிளம்புகிறது. இதில், பதிவு செய்த சிலர், அதை ரத்து செய்து விட்டு, இரண்டடுக்கு ரயிலில் முன்பதிவு செய்துள்ளனர். பெங்களூருவிலும், எதிர்பார்த்தபடி பயணிகள் முன்பதிவு அதிகரிக்கவில்லை. கட்டண அதிகம் என்பதால், ஏராளமான இருக்கைகள் காலியாக உள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு, 700க்கும் அதிகமான இருக்கைகள் காலியாகவே உள்ளது. இதனால் அடுத்த, ஐந்து நாட்களுக்கு, சென்னை - பெங்களூரு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பதிவை, தென்னக ரயில்வே நிறுத்தி வைத்துள்ளது.
சென்னை பயணிகள் உற்சாகம் :
சென்னையில் இருந்து, புதிய ரயிலில் பெங்களூருக்கு புறப்பட்ட பெண் பயணி சுபா அளித்த பேட்டி: ரயில் பெட்டியின் உள்கட்டமைப்பு வசதிகளை பார்க்கும் போது, விமானத்தில் பயணம் செய்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. பெட்டியில், உணவு தின்பண்டங்களை கண்ட இடங்களில் போடாமல், பயணிகள் சுத்தமாக வைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.குணசேகரன்: இந்த, "ஏசி' ரயிலில் காலை நேரப் பயணம் ரம்யமாக உள்ளது. மற்ற ரயில்களை போல், இந்த ரயில் பெட்டிகளை அரைகுறையாக சுத்தம் செய்யாமல், முழுவதுமாக சுத்தம் செய்வதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.
எளிமையாக துவக்கம் :
வழக்கமாக, புதிய ரயில்கள், ரயில்வே அமைச்சர், அதிகாரிகள் மூலம் தான் துவங்கப்படும். தற்போதைய அரசியல் சூழலில், அரசியல் தலைவர்களை யாரை அழைத்தாலும், ஏதாவது ஒரு வகையில் பிரச்னை வரும் என நினைத்த, தெற்கு ரயில்வே, இரண்டடுக்கு, "ஏசி' ரயில் போக்குவரத்தை எளிமையாக துவங்கியது.ரயில் இன்ஜின் முன்புறம், ஐந்து முழம் மல்லிகைப்பூ மாலை போடப்பட்டிருந்தது. நான்கு வாழைப்பழம் மற்றும் இரண்டு வெற்றிலை, பாக்கு வைக்கப்பட்டு, ரயில்வே ஊழியர் மூலம், திருஷ்டி பூசணிக்காய் உடைக்கப்பட்டு, 105 ரூபாய் செலவில், எளிமையாக ரயில் சேவை துவங்கப்பட்டது.

Translate to English
Translate to Hindi

3 Public Posts - Fri Apr 26, 2013

1426 views
1

Apr 26 2013 (08:18)
selvasssm^~
selvasssm^~   5619 blog posts
Re# 734183-4              
TOI is always crap. If you have looked at the booking and Current Availability then you can very well gauge more than 700 pax travelled.
Without even the first run TOI reported it as flop.
Translate to English
Translate to Hindi

1 Public Posts - Fri Apr 26, 2013
Scroll to Top
Scroll to Bottom
Go to Desktop site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy