Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 #
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt

RailCal app

site support

Bhor Ghat section - ये ना ही है जन्नत, ना ही इधर है कोई पर्वत, यह जगह है हर एक Railfan का जो सबकी पूरी करे मन्नत - Sahil Khandare

Search Forum
<<prev entry    next entry>>
Blog Entry# 791597
Posted: Jun 24 2013 (22:33)

No Responses Yet
General Travel
3297 views
0

Jun 24 2013 (22:33)   MNM/Manamadurai Junction (5 PFs)
 
JoanesJoseph~
JoanesJoseph~   634 blog posts
Entry# 791597            Tags  
மானாமதுரை, விருதுநகர் வழியாக கன்னியாகுமரி, புதுச்சேரிக்கு எக்ஸ்பிரஸ் ரயில்சேவை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, விருதுநகர் வழியாக சுற்றுலாத்தலங்களான கன்னியாகுமரி-புதுச்சேரி இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்குவதற்கான தேதி ஜூலை மாதம் வெளியாகும் என ரயில்வே வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மானாமதுரை-விருதுநகர் இடையே 66 கி.மீ தூரத்துக்கு ரூ 135 கோடி மதிப்பீட்டில் அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு தயாராக உள்ளது. ரயில்வே தலைமை பாதுகாப்பு ஆணையர் மித்தல் கடந்த 20 மற்றும் 21 தேதிகளில் இப் பாதையில் டிராலியில் சென்றும் சோதனை ரயிலை 120 கி.மீ வேகத்தில் இயக்கியும் ஆய்வு நடத்தி, ரயில்பாதை பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த
...
more...
வாரத்தில் இவர் மானாமதுரை-விருதுநகர் இடையே ரயில் சேவையை தொடங்கலாம் என ரயில்வே அமைச்சகத்துக்கு சான்றிதழ் வழங்க உள்ளார். அதன்பின் இப் பாதையில் ரயில்சேவை தொடங்கப்பட்டதும் மதுரை-கொல்லம் இடையே இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் பயணிகள் ரயிலை மானாமதுரை,விருதுநகர் வழியாக இயக்குவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
மேலும் மதுரையைச் சுற்றிச் செல்லும் கன்னியாகுமரி-ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலும் மற்றும் தென்மாவட்டங்களிலிருந்து சென்னை சென்று திரும்பும் சில ரயில்களையும் அடுத்தடுத்து இம்மார்க்கத்தில் இயக்குவதற்கான வாய்ப்பும் உள்ளதாக ரயில்வேத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந் நிலையில் கடந்த ரயில்வே பட்ஜெட்டில் கன்னியாகுமரி- புதுச்சேரி இடையே பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த ரயில் இதுவரை இயக்கப்படாமல் உள்ளது. அப்படி இயக்கினால் இந்த ரயிலை மதுரை வழியாக இயக்குவதற்கான திட்டமும் இருந்தது.
தற்போது மானாமதுரை-விருதுநகர் அகல ரயில்பாதை பணி முடிந்து இம் மார்க்கத்தில் ஜூலை மாதம் ரயில் போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில், கன்னியாகுமரி-புதுச்சேரி எக்ஸ்பிரஸ்
ரயிலை மதுரையைச் சுற்றிச் செல்லாமல் மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்க ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் ரயில்வே கால அட்டவணை மாற்றியமைக்கப்படும். அதில் வழக்கமாக புறப்பட்டுச் செல்லும் பல ரயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்படுவதோடு புதிய ரயில் சேவை குறித்த அறிவிப்பும் இடம்பெறும். அதன்படி இந்தாண்டு வெளியாகவுள்ள ரயில்வே கால அட்டவணையில் சுற்றுலாத்தலங்களான கன்னியாகுமரி-புதுச்சேரி ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் விருதுநகர்-மானாமதுரை வழியாக புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக ரயில்வே வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
madurai-kollam passenger extend upto nagore/velakanni or karaikal.this train MG era train nagore-kollam passenger.

Translate to English
Translate to Hindi
Scroll to Top
Scroll to Bottom
Go to Desktop site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy