மதுரைக்கும் திருப்பரங்குன்றத்திற்கும் இடையே நடைபெறும் ரயில்வே சுரங்கப்பாதை பணிகளுக்காக, மூன்று தினங்கள் ரயில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட வர்த்தக மேலாளர் மகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
29ம் தேதி, 30ம் தேதி மற்றும் ஜூலை 2ம் தேதி ஆகிய நாட்களில், ரயில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுளளது.
29ம் தேதி பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள்
1....
more... வண்டி எண் 56319 நாகர்கோவில் - கோயம்புத்தூர் பாசஞ்சர், விருதுநகர் மற்றும் மதுரை இடையே 29.06.2014 அன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த வண்டி, வண்டி எண் 56320 -ஆக விருதுநகரில் இருந்து நாகர்கோவிலுக்கு வழக்கமான நேரத்தில் புறப்பட்டுச் செல்லும்.
2. வண்டி எண் 56320 கோயம்புத்தூர் - நாகர்கோவில் பாசஞ்சர், மதுரை மற்றும் விருதுநகர் இடையே 29.06.2014 அன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த வண்டி, வண்டி எண் 56319 -ஆக மதுரையில் இருந்து பிற்பகல் 03.00 மணிக்கு கோயம்புத்தூருக்கு புறப்பட்டுச் செல்லும்.
29ம் தேதி நேரம் மாற்றம் செய்யப்பட்ட ரயில்கள்
1. வண்டி எண் 56734 செங்கோட்டை- மதுரை பாசஞ்சர் ரயில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில், 29.06.2014 அன்று 50 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்படும்.
2. வண்டி எண் 56770 திருசெந்தூர் - பழநி பாசஞ்சர் ரயில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில், 29.06.2014 அன்று 35 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்படும்.
30ம் தேதியும் மற்றும் ஜூலை 2ம் தேதியும் மாற்றம் செய்யப்படும் ரயில்கள்
1. வண்டி எண். 56319 நாகர்கோவில்- கோயம்புத்தூர் பாசஞ்சர் ரயில் திருநெல்வேலி ரயில் நிலையத்தில், 30.06.2014 மற்றும் 02.07.2014 அன்று 70 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்படும்.
2. வண்டி எண் 56320 கோயம்புத்தூர்- நாகர்கோவில் பாசஞ்சர் ரயில் மதுரை ரயில் நிலையத்தில், 30.06.2014 மற்றும் 02.07.2014 அன்று 60 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்படும்.
3. வண்டி எண் 56734 செங்கோட்டை- மதுரை பாசஞ்சர் ரயில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில், 30.06.2014 மற்றும் 02.07.2014 அன்று 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்படும்.
4. வண்டி எண் 56770 திருசெந்தூர் - பழநி பாசஞ்சர் ரயில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில், 30.06.2014 மற்றும் 02.07.2014 அன்று 35 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.